Published:Updated:

`என் தொண்டு நிறுவனத்திலுள்ள ஒவ்வொரு ரூபாயும் பல உயிர்களைக் காப்பாற்றக் காத்திருக்கிறது!' - சோனு சூட்

``எனது தொண்டு நிறுவனத்திலுள்ள ஒவ்வொரு ரூபாயும் விலை மதிப்பற்ற உயிரைக் காப்பாற்றக் காத்திருக்கிறது’’ என்று நடிகர் சோனு சூட் கூறியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வருமான வரித்துறையினர் கடந்த வாரம் மூன்று நாள்கள் நடிகர் சோனு சூட் அலுவலகம், அவரோடு தொடர்புடைய நிறுவனங்களில் ரெய்டு நடத்தினர். அதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு சோனு சூட் வெளிநாட்டிலிருந்து தனது தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை வசூலித்ததிலும் விதிகளை மீறி செயல்பட்டிருப்பதாகவும், தொண்டு நிறுவனத்துக்கு வசூலித்த நிதியைச் செலவு செய்யாமல் வங்கியில் போட்டுவைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. வருமான வரித்துறையினரின் ரெய்டு குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த சோனு சூட் தற்போது சமூக வலைதளத்தில் தன்மீதான விமர்சனத்துக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ``எப்போதும் உங்களது தரப்பு கருத்தை மட்டும் தெரிவிக்காதீர்கள்.

சோனு சூட் விளக்கம்
சோனு சூட் விளக்கம்

காலம் வரும். நான் இதயபூர்வமாக, எனது முழுச் சக்தியையும் பயன்படுத்தி நாட்டு மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறேன். எனது தொண்டு நிறுவனத்திலுள்ள ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றக் காத்திருக்கிறது. தேவைப்படுபவர்களுக்குச் சென்றடையும். சிலநேரங்களில் விளம்பரத் தூதராக இருக்கிறேன். அதில் கிடைக்கும் கட்டணத்தை மனிதாபிமான காரியங்களுக்காகப் பயன்படுத்துகிறேன். கடந்த சில நாள்களாக சில நண்பர்களை சந்திப்பதில் பிஸியாக இருந்துவிட்டேன். அதனால் நான்கு நாள்களாக உங்களது சேவையில் ஈடுபட முடியவில்லை.

நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு! - 6 நகரங்களில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை

வாழ்நாள் முழுக்க சேவை செய்ய மீண்டும் வந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். சோனு சூட் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார். இதனால் இந்தியா முழுக்க சோனு சூட் பெயர் பிரபலமாகியிருக்கிறது. ஆனால் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்துதான் ரெய்டு நடத்தப்பட்டதாகக் குற்றசாட்டு எழுந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு