Published:Updated:

விகடன் பொக்கிஷம்: “விருதுகள் மட்டுமே என் இலக்கல்ல..!” - இசைப்புயலுடன் ஒரு எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி

ஏ.ஆர்.ரஹ்மான்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.ஆர்.ரஹ்மான்

22.08.2007 ஆனந்த விகடன் இதழில்

விகடன் பொக்கிஷம்: “விருதுகள் மட்டுமே என் இலக்கல்ல..!” - இசைப்புயலுடன் ஒரு எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி

22.08.2007 ஆனந்த விகடன் இதழில்

Published:Updated:
ஏ.ஆர்.ரஹ்மான்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.ஆர்.ரஹ்மான்
ரு ரகசியம்போல வந்து அமர்கிறார் ரஹ்மான். சர்வதேச உயரம் தொட்ட பிறகும் அதே அமைதி. கறுப்பு-வெள்ளைக் கட்டைகளில் விரல்கள் அலைபாய, கண்கள் சிரிக்கின்றன சிநேகமாக!

‘Pray for me brother’ இசை ஆல்பத்தின் வெற்றி, ரஹ்மானை இன்னும் மலரவைத்திருக்கிறது.

‘‘பிரார்த்தனை என்பது அன்பின் வெளிப்பாடு. இன்னொருத்தருக்காக நாம் கடவுளிடம் முறையிடுகிற அந்த அன்புக்கு இணையானது எதுவும் இல்லை. அந்த அன்பைப் பத்திச் சொல்லணும்னு முடிவு பண்ணினோம். வறுமை, பிணி மாதிரியான பிரச்னைகளை ஒழிக்க நல்ல முயற்சிகள் தேவை. அதற்கு எதிரான போராட்டத்தில் என் சிறு முயற்சிதான் இந்த ஆல்பம். ‘பக்திப் பாடல் மாதிரி ஆகிடக் கூடாது’ன்னுதான் காதல் பாட்டு மாதிரி டியூன் போட்டோம். நம்பிக்கை தர்ற வார்த்தைகளை வைத்துப் பாட்டு எழுதினோம். பாடல் வரிகளுக்கான விஷூவல்ஸ் தேடவும், ஸ்பான்சர் பிடிக்கவும் ரெண்டு வருஷம் ஆச்சு. ஆல்பத்துக்கு மக்களிடம் இருக்கிற வரவேற்பு நம்பிக்கை தருது. அடுத்த திட்டம் ‘ஏ.ஆர்.ரஹ்மான் ஃபவுண்டே ஷன்.’ படிக்கிற கனவுள்ள ஏழை மாணவர்களுக்கு உதவத்தான் இந்த ஃபவுண்டேஷன்.‘Pray for me brother’ ஆல்பத்தின் மூலம் கிடைக்கிற வருமானம் எல்லாமே இந்த ஃபவுண்டேஷனுக்குத்தான்!’’

‘‘ஒருபக்கம் உலக இசை, இன்னொரு பக்கம் தமிழ் சினிமா. இரண்டுக்கும் எப்படித் தயாராகிறீங்க?’’

‘‘இந்த வீடு என்னுடையதுன்னு சொல்லும்போது, இந்த உலகமும் என்னுடையதுதானே!

ஒரு மாணவனா புதுசு புதுசா கத்துக்கணும்னு எனக்கு எப்பவுமே ஆர்வம் உண்டு. வெளி நாட்டைப் பொறுத்தவரைக்கும், ஒரு தடவை ஒரு வாய்ப்பைத் தவறவிட்டுட்டா, அதுபோன்ற அபூர்வமான இன்னொரு வாய்ப்புக்கு ரொம்ப நாள் காத்திருக்கணும்.‘Lord of the rings’ என் மூணு வருஷ உழைப்பு. அதற்குக் கிடைச்ச வரவேற்பு, புத்துணர்ச்சி தருது! ஆனா, உலகம் முழுக்கச் சுத்தினாலும் என் முகவரி தமிழ் சினிமாதான். இந்த இரண்டு விஷயங்களையும் பேலன்ஸ் பண்றதுக்காக ரொம்பத் தேர்ந்தெடுத்துப் படங்கள் பண்றேன். வெளிநாட்டு ரசனையும், நம்ம ரசனையும் வேற வேற! அதுக்கேத்த மாதிரி நான் என்னை மாத்திட்டே இருக்கிறேன். இந்தச் சவால்தான் என்னை எனக்கே சுவாரஸ்யமாக்குது. உலக இசை எனக்காக... சினிமா இசை மக்களுக்காக!’’

‘‘சர்வதேச அளவில் வந்தாச்சு... அடுத்து என்ன இலக்கு இருக்கு?’’

‘‘நான் இதை ஒரு பயணம் போலத்தான் நினைக்கிறேன். மூணு வருஷத்துக்கு ஒரு தடவை என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நடந்துட்டே இருப்பதை உணர முடியுது. முதலில் மியூஸிக் ஆல்பம், அப்புறம் தமிழ் சினிமா, இந்தி சினிமா, மியூஸிக் டூர், ஸ்டேஜ் டிராமான்னு நிறைய திசைகள் தேடிப் போய்க்கிட்டே இருக்கிறேன். இதோ, அடுத்ததா சேகர் கபூர் டைரக்‌ஷனில் ‘Golden Age’னு ஒரு ஹாலிவுட் படம் பண்ணப் போறேன். இது என் வாழ்க்கையில் முக்கியமான அடுத்த கட்டம்.

மற்றபடி, விருதுகள் மட்டுமே எனக்கு இலக்கல்ல! அதெல்லாம் பாதி வழியில் கிடைக்கிற மரியாதை. சின்னச் சின்ன சந்தோஷங்கள். அவ்வளவுதான்!’’

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

‘‘மணிரத்னம், ஷங்கர், அமீர்கான் என உங்களைக் கொண்டாடுகிற கூட்டம் பெரிய வரம்தானே..?’’

‘‘நட்பு, தானா அமைகிற விஷயம். தொழிலில் வந்து சேர்கிற வெற்றிகள், அந்த நட்பை இன்னும் பலப்படுத்தும். நாங்க கொடுத்த வெற்றிகள்தான் இன்னிக்கும் எங்களை ஸ்ட்ராங்கா வெச்சிருக்குன்னு நினைக்கிறேன். நாங்க சேர்ந்தாலே, அதிரடியா ஏதோ பண்ணப் போறாங்கன்னு எதிர்பார்ப்பு உருவாகிடுது. இப்போ அமீருடன் ‘கஜினி.’ அடுத்ததா மணி சாருடன் ‘லஜ்ஜா.’ அதுவும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், அமீர்கான்னு நல்ல காம்பினேஷன். தவிர, மியூஸிக்கல் சப்ஜெக்ட். எனக்கு நல்ல வேலை இருக்கும்!’’

விகடன் பொக்கிஷம்: “விருதுகள் மட்டுமே என் இலக்கல்ல..!” - இசைப்புயலுடன் ஒரு எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி

‘‘ ‘சிவாஜி’ அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘ரஜினி சார் படம் பண்ணும்போது எனக்கு ஒரு தயக்கம் இருக்கும். அவருக்கேத்த மாதிரி ஒரு டியூனை நான் தேடிக் கண்டுபிடிச்சு நிமிரும்போது, சரசரன்னு பாதிப் படம் நடிச்சு முடிச்சிருப்பார். அப்படி ஒரு வேகத்தில் ரஜினி சார் படம் நடக்கும். ஆனா, ‘சிவாஜி’ எனக்கு பிரச்னையா இல்லை. படம் அறிவிப்பதற்கு முன்னால் ஷங்கர் என்னிடம் பேசியபோது, நான் ஆஸ்திரேலியாவில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தேன். மறுநாளே ஆஸ்திரேலியா கிளம்பி வந்தார் ஷங்கர். அங்கேயே நேரம் இருந்ததால், ‘சஹாரா, வாஜி... வாஜி... சிவாஜி’ டியூன்களை ரெடி பண்ணிட்டோம். நல்ல டைம் இருந்ததால், நல்ல மியூஸிக் தர முடிஞ்சுது. பாட்டும் படமும் ஹிட் என்பதில் சந்தோஷம்! ‘சிவாஜி’ பாட்டு சம்பந்தமா இதுவரைக்கும் ரஜினி சார் என்னுடன் பேசவே இல்லை. ‘பாட்டு கேட்டார், ரொம்ப ஹேப்பியா இருக்கார்’னு ஷங்கர் அப்பவே சொன்னார். லதா ரஜினிகாந்த் ஒரு பொக்கே அனுப்பி இருந்தாங்க... ஓ.கே!

அடுத்ததும் ரஜினி படம்தான். ‘சுல்தான் - தி வாரியர்’க்கு நான்தான் மியூஸிக் பண்றேன். அனிமேஷன் படம்னாலும் நாலு பாட்டு இருக்கு. வழக்கமா ரஜினி படங்களில் இருக்கிற அட்வைஸ் பாட்டு ‘சுல்தான்’ல கிடையாது. ரொம்ப ரகளையான, கமர்ஷியலான, ஜாலியான பாட்டுகள் இருக்கும். நான் கியாரன்ட்டி!’’

‘‘குழந்தைகள் எப்படி இருக்காங்க?’’

‘‘என் மூத்த பொண்ணு கதிஜா. குலாம் முஸ்தபாவிடம் ஹிந்துஸ்தானி இசையும், பியானோவும் கத்துட்டு இருக்காங்க. ‘என் பாட்டை வெச்சு அவங்களுக்கு மியூஸிக் சொல்லித் தராதீங்க. யாரோட சாயலும் அவங்களுக்கு வேணாம்’னு முஸ்தபாவிடம் சொல்லியிருக்கேன். அதனால், அவங்க என் பாட்டைக் கேட்கிறதே கிடையாது.

சின்னப் பொண்ணு ரஹிமாவுக்கு ‘ஐ-பாட்’தான் உலகம். அவங்கதான் என் முதல் ரசிகை. நான் போடுற டியூனைக் கேட்டதும் அவங்க முகத்துல சிரிப்பு வந்ததுன்னா, அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட்!

கடைக்குட்டி அமீனுக்கு நாலரை வயசாகுது. அதற்குள் அனிமேஷன் கேரக்டர் ஒண்ணுக்கு வாய்ஸ் கொடுத்து, மியூஸிக் சாம்பிளும் பண்ணியிருக்கார்.

எனக்கு இரவுதான் உலகம். சாயங்காலம் நான் கண் முழிக்கும்போது என் குழந்தைகள் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்திருப்பாங்க. அதுதான் எனக்கும் என் குழந்தைகளுக்குமான நேரம். ஒன்பது வயதில் அப்பாவை இழந்தவன் நான். சின்ன வயதில் என் தந்தையோடு செலவழித்த நேரம் எனக்கு இன்னமும் ஞாபகத்தில் அப்படியே இருக்கு. அதனால், ஒரு தகப்பனா இந்த வயசுல நான் என் குழந்தைகளுக்காக இருந்தாகணும். என் குழந்தைகளுடன் இருக்கும்போது நான் மறக்கிற முதல் விஷயம், இசை. குழந்தைகள் சொல்றதைக் காது கொடுத்துக் கேட்கிற தகப்பன்களில் நானும் ஒருவன்!’’

‘‘அநேகமா எல்லா இசை அமைப்பாளர்களும் பக்திமயமாவே இருக்கீங்களே... என்ன காரணம்?’’

‘‘இசைதான் கடவுளின் மொழின்னு சொல்வாங்க. ஒவ்வொரு மனசும், உணர முடியாத ஒரு ரகசியம்! அதை இசை எனும் சாவியால் திறப்பவன் கடவுள். நல்ல இசை கேட்கும்போது சந்தோஷமும் மனநிறைவும் நெருக்கமாக இருக்கும். மொழி புரியாமல்கூட எதிராளியைக் கரையவைக்கும் வல்லமை இசைக்கு உண்டு. மியூஸிக் தெரிஞ்சவங்களை, அறிஞ்சவங்களை கடவுளின் பக்கத்தில் இருப்பவர்கள்னு சொல்வாங்க. நாமெல்லாம் கருவிகள்தான். இசை அவனுடையதே!’’

- நா.கதிர்வேலன், எஸ்.கலீல்ராஜா

படங்கள்: என்.விவேக்

28.05.2006 ஆனந்த விகடன் இதழில்

அணையா நெருப்பு - கமல்ஹாசன்

குறிப்பு: ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய காலம் முதல் இன்று வரையிலும் கமல்ஹாசனை உச்சிமுகர்ந்து கொண்டாடி வருகிறது ஆனந்த விகடன். விகடன் நிருபர்களுக்கு அளித்த பேட்டிகள் தவிர, அவரே நேரடியாகவும் ஆனந்த விகடனில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆனந்த விகடன் இதழில் அவர் எழுதிய சிறுகதை இது.

விகடன் பொக்கிஷம்: “விருதுகள் மட்டுமே என் இலக்கல்ல..!” - இசைப்புயலுடன் ஒரு எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி

ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன... தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்...?’’

நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’

‘‘சிறுசு’’ என்றார்.

முழுக்கதையையும் வாசிக்க...

http://bit.ly/ShortStoryKamal

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism