வரும் 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய முழு பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி சனிக்கிழமை அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். `இந்த பட்ஜெட்டில் தொழில்துறையை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று தொழில்துறை அமைப்புகள் சார்ந்த சிலரிடம் கேட்டோம். அவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை வேண்டும்!

இந்தியாவிலுள்ள பெரும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பாக இருப்பது, `கான்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி.’ இந்த அமைப்பு தன் பட்ஜெட் எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் முதலில் இங்கே...

‘‘பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. என்றாலும், இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிக்காக மத்திய அரசு செலவழிக்கும் தொகை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். உள்கட்டமைப்பு தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்வதில் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும். `மேட் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா வகையான சொத்துகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் நீண்டகால மூலதன ஆதாய வரியை நீக்க வேண்டும். மக்களிடம் தேவையை அதிகரிப்பது போன்ற பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட வேண்டும். தனிநபர்களுக்கு வருமான வரிச் சலுகை உயர்த்தப்பட வேண்டும்.’’

தொழில் கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும்!

தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் குறித்து தமிழ்நாடு சிறு குறுதொழில் சங்கத்தின் (TANSTIA) இணைச் செயலாளர் எஸ்.வாசுதேவனிடம் கேட்டோம்.

“ `இந்தியத் தொழில்துறையின் முதுகெலும்பு’ என அழைக்கப்படுவது சிறு, குறுந் தொழில்கள்துறை. நாட்டின் பொருளாதாரத்தில் 8% பங்களிப்பை வழங்கக்கூடிய இந்தத் துறை சுமார் எட்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. தற்போது பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் இந்தத் துறை அரசின் சலுகைகளை பட்ஜெட்டில் எதிர்பார்த்திருக்கிறது. குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர அளவில் தொழில் தொடங்குபவர்களுக்காக வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 7 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அனைத்திலும் இதைப் பொதுவாக்க வேண்டும். அப்போதுதான் புதிய தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்கவும், அதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வழி பிறக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர அளவில் தொழில் தொடங்க வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 7 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்.

கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான அவகாசத்தை அதிகரிப்பது, டிவிடெண்ட் விநியோக வரியை ஐந்து சதவிகிதமாகக் குறைப்பது, சிறிய அளவில் தொடங்கப்படும் தனியார் நிறுவனங்களுக்கு ஆவணம் தயாரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவது, ஏற்றுமதியாளர் களுக்கான மானியத்தை 10% ஆக்குவது, குறு, சிறு தொழில் செய்யும் பெண் தொழில்முனைவோர்களுக்கான வருமான வரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிப்பது உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார் அவர்.

திருப்பூர், சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்டு இண்டஸ்ட்ரீஸ் அமைப்பின் பொருளாளர் ஆர்.கே.கே.எம்.சபாபதியிடம் பேசினோம்.

“ஜி.எஸ்.டி வரி விதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு விற்பனையிலும் ஏற்றுமதியிலும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். திருப்பூரைச் சுற்றியிருக்கும் ஏராளமான விவசாயக் குடும்பங்களில் இருப்பவர்கள்கூட பனியன் நிறுவனங்களில் கட்டிங் செய்த பனியன், ஜட்டிகளை எடுத்துக் கொண்டுபோய் தைத்து, அதில் கிடைக்கும் கூலியைவைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள். இதில் ஈடுபடுபவர்கள் அதிகம் பேர் கல்வி அறிவு பெறாதவர்களாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். `அவர்களும் ஜி.எஸ்.டி கட்ட வேண்டும்’ என்ற அரசின் உத்தரவு அவர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது.

கிராமப்புற மக்களுக்கு உதவியாக இருக்கும் பனியன் சார்ந்த ஜாப் ஒர்க் பில்களுக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைக்களையும் விதமாக எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.

பின்னலாடை ஏற்றுமதியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு மானியங்களை வழங்கிவந்தது. ஆனால், தற்போது அதை படிப்படியாகக் குறைத்துவருவது ஏற்றுமதியாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மீண்டும் மானியத்தை அதிகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ஏற்றுமதித்துறையின் எதிர்பார்ப்பு என்ன?

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபியோ (FIEO) அமைப்பின் இணை துணை இயக்குநர் உன்னிகிருஷ்ணனிடம் பேசினோம்.

“தொழில்நுட்பங்களின் புதிய வரவுகளால் வரும் ஆண்டில் இந்தியாவின் அனைத்துத் தொழில்துறைகளும் மிகப்பெரிய சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். தொழிலில் நீடித்திருக்க, தொழில்நுட்ப விஷயங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம். ஒவ்வொருவரும் இதற்காக அதிக அளவில் பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதனால் ஏற்றுமதி தயாரிப்புகளில் மதிப்புக்கூட்டலை ஊக்குவிக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆர் அண்டு டி செலவினங்களில் 200% தேய்மானம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றைய நிலையில், கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்கள், அதாவது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வருமான வரி 35 சதவிகிதமாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 15-22% வரை வரிச் சலுகை அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே வரிச்சலுகைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்” என்றார்.

தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா?

ஸ்ரீனிவாசன் கோபாலன், சி.இ.ஓ., ஓசோன் குழுமம்

‘‘ரியல் எஸ்டேட்டுக்கு நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மற்றும் மிகவும் தேவைப்படும் அம்சங்களை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். தேக்க நிலையிலிருக்கும் வீடுகள் விற்பனை மற்றும் கட்டுமானங்களை ஊக்குவிப்பதற்கான அறிவிப்புகள் அதிகம் தேவை. மாற்று முதலீட்டு நிதிகளை விரைவாக ஒதுக்குவதன் மூலம் நிறுத்தப்பட்டிருக்கும் கட்டுமானங்கள் நிச்சயமாகப் புத்துணர்ச்சி பெறும். ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டிருப்பதுபோல அனைத்துக் கடன் திட்டங்களையும் ஒரு முறை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”

மணிசங்கர், தலைவர், தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரொமோட்டர்ஸ் அசோசியேஷன் “மக்களின் வீடு வாங்கும் திறனை அதிகரிக்க, வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதில் மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதுபோல அனைத்து வங்கிகளிலும் 6% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பில்டர்களுக்கான கட்டுமானக் கடன் விகிதம் 11-12 சதவிகிதமாக இருக்கிறது. இதை 9 சதவிகிதமாக்க வேண்டும். தற்போது அனைத்து கட்டுமானப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரி அதிகமாக இருக்கிறது. அதைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, சிமென்ட் மீதான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். இதனால் பில்டர்கள் மட்டுமன்றி, வீடு கட்டும் அனைத்து மக்களும் பயனடைவார்கள். கட்டுமானச் செலவினங்கள் குறையும்.”