Published:Updated:

கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்தால் 45 நாள்களுக்கு வட்டி கிடையாதா?

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

எப்போது பணம் எடுத்தீர்களோ, அப்போதே வட்டி போட ஆரம்பித்துவிடுவார்கள். பொருள்களை வாங்கும்போது அளிக்கப்படும் வட்டியில்லா காலம், ரொக்கப் பணம் எடுப்பதற்குக் கிடையாது.

கிரெடிட் கார்டு கேட்டு ஒன்றுக்கு இரண்டு நிறுவனங்களில் விண்ணப்பித்தாலே கிரெடிட் ஸ்கோர் குறையும்' என்கிறார்களே... அது உண்மையா?

- இசக்கி முத்து, கடையநல்லூர்.

"அது உண்மையல்ல. சில கம்பெனிகளில் விசாரித்தால், உங்களுடைய சிபில் ஸ்கோர் குறையாது. ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வோர் அணுகுமுறை வைத்திருப்பார்கள். மேலும், அவர்கள் உங்களுடைய விண்ணப்பத்தை ரிஜெக்ட் செய்தாலும் கிரெடிட் ஸ்கோர் குறையாது."

அதிக விலையுள்ள பொருள்களை கிரெடிட் கார்டு் மூலம் வாங்கிவிட்டு, அந்தத் தொகையை இ.எம்.ஐ-ஆக மாற்றிச் செலுத்துவது லாபமாக இருக்குமா?

- ஆ.சுந்தரி, தச்சநல்லூர்

''ஒவ்வொரு மாதமும் பில்லிங் சைக்கிளுக்குள் கிரெடிட் கார்டு கடனைத் திருப்பிச் செலுத்துவது எப்போதும் நல்லது. பெரிய தொகையாக இருந்து, அடுத்த பில்லிங் சைக்கிளுக்குள் செலுத்த முடியவில்லை யென்றால் கடனாக மாற்றி, இ.எம்.ஐ-ஆகச் செலுத்துவது சிறந்த வழி.''

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

தேவைக்கு கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாமா... இதற்குப் பொருள்களை வாங்குவதுபோல் சுமார் 45 நாள்களுக்கு வட்டி எதுவும் கிடையாதா?

- ஜெயந்தி, கீழப்பாவூர்.

''ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணத்தை எடுக்கும்போதும், ரொக்கமாகக் கடன் வாங்குவதாகவே எடுத்துக்கொள்ளப்படும். பொதுவாக, எடுக்கப்பட்ட தொகையில் 2.5% முதல் 3% வரை குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.500 வரை கிரெடிட் கார்டு மூலம் ரொக்கப் பணம் கடனாக வாங்கியதற்குக் கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும், எப்போது பணம் எடுத்தீர்களோ, அப்போதே வட்டி போட ஆரம்பித்துவிடுவார்கள். பொருள்களை வாங்கும்போது அளிக்கப்படும் வட்டியில்லா காலம், ரொக்கப் பணம் எடுப்பதற்குக் கிடையாது. எனவே, பணம் எடுக்க வேண்டாம்.''

- இதேபோல் கிரெடிட் கார்டு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி. அவற்றை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2DMyHH2 > கிரெடிட் கார்டில் பொருள்கள் வாங்கலாமா..? - என்ன சிக்கல்... என்ன லாபம்? https://bit.ly/2DMyHH2

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு