Published:Updated:

“என் முகம் இப்போ பார்க்க அழகா இருக்காம்மா?”

டானியா
பிரீமியம் ஸ்டோரி
டானியா

சிறுமியின் தந்தை ஸ்டீஃபன் ராஜ் நம்மிடம், “டானியாவுக்கு ஆபரேஷன் பண்ணினதுலருந்து, ‘நாங்க இருக்கோம்’னு முதல்வர் எங்களுக்கு போன் செய்து தைரியமூட்டிக்கிட்டு இருக்காரு.

“என் முகம் இப்போ பார்க்க அழகா இருக்காம்மா?”

சிறுமியின் தந்தை ஸ்டீஃபன் ராஜ் நம்மிடம், “டானியாவுக்கு ஆபரேஷன் பண்ணினதுலருந்து, ‘நாங்க இருக்கோம்’னு முதல்வர் எங்களுக்கு போன் செய்து தைரியமூட்டிக்கிட்டு இருக்காரு.

Published:Updated:
டானியா
பிரீமியம் ஸ்டோரி
டானியா

அந்தச் சிறுமியின் சீரமைக்கப்பட்ட முகத்தைப் பார்க்க தமிழகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சென்னை ஆவடி வீராபுரத்தைச் சேர்ந்த ஸ்டீஃபன் ராஜ் - செளபாக்யா தம்பதியின் 9 வயது மகள் டானியா. கண்ணீர் மல்க இவர் பேசிய காட்சியைப் பார்த்தவர்கள் கண் கலங்காமல் இருந்திருக்கமாட்டார்கள்.அவர்களை எல்லாம் தற்போது ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது, அச்சிறுமிக்கு செய்யப்பட்டுள்ள முக அறுவை சிகிச்சை.

தற்போது எப்படியிருக்கிறார் டானியா என்பதை அறிந்துகொள்ள, சென்னை தண்டலத்திலுள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டானியாவின் பெற்றோரை சந்தித்துப் பேசினோம். எல்லையில்லாத மகிழ்ச்சி அவர்களது முகத்தில் வெளிப்பட்டது.

“என் முகம் இப்போ பார்க்க அழகா இருக்காம்மா?”

சிறுமியின் அம்மா செளபாக்யா நம்மிடம், ‘‘என் பொண்ணுக்கு பழைய முகம் கிடைச்சிடுச்சு. தொடையிலிருந்து சதையை எடுத்து வெச்சு கிட்டத்தட்ட 10 மணிநேரம் ஆபரேஷனை செய்திருக்காங்க. ஆபரேஷன் முடிஞ்சதும் முதல் முதலில் போயி டானியாவை பார்த்தேன். முகத்துல கொஞ்சம் வீக்கம் இருக்கு. ஆனா, பொறந்தப்போ எப்படி இருந்தாளோ அப்படி இப்போ இருக்கா. அவ்ளோ சந்தோஷம். என்னை பார்த்ததும், ‘என் முகம் இப்போ சரியாகிடுச்சாம்மா? பார்க்க அழகா இருக்கா?’ன்னு ஆசையா கேட்டா. இப்போதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு” என்றவர், ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

‘‘நானும் எங்க வீட்டுக்காரரும் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலை பார்க்கும்போது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு முதல் குழந்தை டானியா. ரொம்ப ஆசை ஆசையா அவளை வளர்த்தோம். மூன்றரை வயசு வரைக்கும் நல்லாத்தான் இருந்தா. ஆனா, திடீர்னு முகத்துல ரத்தத்திட்டு மாதிரி வந்துச்சு. ரத்தம் கட்டியிருக்குன்னு நினைச்சு டாக்டர் கிட்ட போனோம். ஆனால், அது சரியாகலை. அஞ்சு வயசுலருந்து முகம் கொஞ்சம் கொஞ்சமா சுருங்க ஆரம்பிச்சுடுச்சு. இதுவரைக்கும் 17 ஆஸ்பத்திரிகளுக்குக் கூட்டிப் போய் காண்பிச்சிருப்போம். பெண்களுக்கு லட்சத்துல ஒருவருக்கு வரக்கூடிய அரிய வகை நோய் உங்க குழந்தைக்கு வந்திருக்குன்னு டாக்டர்கள் கைவிரிச்சுட்டாங்க. ஒரு மருத்துவமனையில பரிசோதனை பண்ணி இந்த நோயைக் கண்டுபிடிச்சு ‘8 லட்ச ரூபாய்க்கு மேல சிகிச்சைக்கு செலவாகும்’னு சொன்னாங்க. அவ்ளோ லட்சத்துக்கு நாங்க எங்க போவோம்? கடனை உடனை வாங்கி ஒரு மருத்துவமனையிலாவது பொண்ணுக்கு சரியாகிடாதான்னு பார்த்துக்கிட்டிருந்தோம். ஒவ்வொரு டெஸ்ட் எடுக்கவே அவ்ளோ செலவாகும். ஆனா, எல்லா மருத்துவமனையும் முக சீரமைப்பு செய்ய லட்சக்கணக்குல ஆகும்னுதான் சொன்னாங்க. பிறகுதான் பொண்ணு பற்றின செய்தி டிவியில வெளியானதைப் பார்த்த முதல்வர், ‘எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல. வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கணும்னாலும்கூட அத்தனை செலவையும் அரசே ஏத்துக்கும்’னு சொல்லி நம்பிக்கை கொடுத்தாரு. இப்போ, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின்கீழ் ட்ரீட்மெண்ட் பண்ணி எங்க குழந்தையை பழையபடியே திரும்பி கொடுத்துட்டாரு முதல்வரு. அவருக்கு வெறும் நன்றின்னு மட்டும் சொல்லி கடந்துபோய்விட முடியாது” என்கிறார் உணர்ச்சிப் பெருக்குடன்.

பெற்றோர்
பெற்றோர்

சிறுமியின் தந்தை ஸ்டீஃபன் ராஜ் நம்மிடம், “டானியாவுக்கு ஆபரேஷன் பண்ணினதுலருந்து, ‘நாங்க இருக்கோம்’னு முதல்வர் எங்களுக்கு போன் செய்து தைரியமூட்டிக்கிட்டு இருக்காரு. அமைச்சர் நாசர் வந்து மருத்துவமனையில பார்த்துக்கிட்டிருக்காரு. திரும்பவும் இந்தப் பிரச்னை வந்தா ஆபரேஷன் பண்ணிக்கலாம்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. நான் டெய்லர் வேலை பார்க்கிறேன். எங்க சக்திக்கு மீறிதான் நாங்க வாடகை வீட்டுல இருக்கிறோம். என் பொண்ணுக்கு இருக்கிற இந்தப் பிரச்னை, தங்களுக்கும் தொற்றிக்கும்னு கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட ஹவுஸ் ஓனர்கள் வீட்டை காலி பண்ணச்சொல்லிட்டாங்க. சில வீடுகளில் எங்க குழந்தை நின்ன இடத்தையெல்லாம் கழுவி விட்ருக்காங்க. பள்ளிக்கூடத்துலேயும் இதே நிலைமைதான். ஸ்கூலுக்கு வராதேன்னு டீச்சர் சொல்லிட்டாங்க. இதனால, என் மனைவி சில நாட்களுக்கு முன்பு தூக்கு மாட்டிக்கவே போயிட்டா. இப்போ, இருக்கிற வீட்டையும் ஹவுஸ் ஓனர் காலி பண்ண சொல்லிட்டாங்க. அதனால, கடவுள் மாதிரி எங்க புள்ளைய காப்பாத்தின முதல்வர் அய்யா, நாங்க நிரந்தரமா வாழுறதுக்கு ஒரு வீட்டைக் கொடுத்தா கோடி புண்ணியமா இருக்கும். இவ்ளோ பெரிய சிகிச்சை உதவியை பண்ணியிருக்கோம், இன்னும் வீடு கேட்குறாங்களேன்னு நினைச்சுடாதீங்கய்யா. யாரும் வாடகைக்கு வீடு கொடுக்கமாட்றாங்க. உங்ககிட்டதான் இந்த உதவியையும் கேட்கமுடியும்” என்று முதல்வரிடம் கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார் சிறுமியின் தந்தை ஸ்டீஃபன்.

முகத்தை சீரமைத்த முதல்வர், தங்களது வாழ்க்கையையும் சீரமைப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறது சிறுமி டானியாவின் குடும்பம்.