Published:Updated:

2K kids: கொஞ்சம் பிரேக் போடுவோம் பரபர வாழ்க்கைக்கு!

உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம்

ஒரு மிகச் சிறிய கிரகத்தில் வாழும் சற்றே முன்னேறிய குரங்கினம்தான் நாம்’ என்கிறார் அறிவிய லாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

`2024-ம் ஆண்டுக்குள் பூமியைச் சுற்றி 42,000 சாட்டிலைட்கள் விடுவதுதான் என் கனவு' என்று சொல்லி யிருக்கிறார், உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். இதே பூமியில்தான், `பறவை உள்ளிட்ட சின்ன உயிர்கள் திடுக்கிடாமல் இருக்கத் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில்லை' என்று முடிவெடுக்கிறார்கள் சிலர். கொஞ்சம் பிரேக் போட்டு, நாம் வாழும் இந்த பரபர வாழ்க்கையைக் கொஞ்சம் எடைதூக்கிப் பார்க்க... சில வரிகள் இங்கே!

* ‘ஒரு மிகச் சிறிய கிரகத்தில் வாழும் சற்றே முன்னேறிய குரங்கினம்தான் நாம்’ என்கிறார் அறிவிய லாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங். சாதி, மதம், வர்க்கம் என அதில்தான் எத்தனை ஆட்டங்கள் ஆடுகிறோம்? இங்கு யாரும் நம்மைவிட உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை என்றுணர்வோம்.

2K kids: கொஞ்சம் பிரேக் போடுவோம் பரபர வாழ்க்கைக்கு!

* இறப்பு எப்போது நம்மைச் சந்திக்கும் என்பது நம் கைகளில் இல்லை. வாழும் ஒவ்வொரு நாளையும் அலுப்புகள், சலிப்புகள் இல்லாமல் வாழ்வோம். கஷ்டங்கள் உண்டுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தக் கஷ்டங்களுக்கு இடையிலும் நாம் சிரிக்க, மகிழ, கொண்டாட காரணங்களை விதி ஒளித்தே வைத்திருக் கிறது. கண்டடையும் சுவாரஸ்யமே வாழ்தல் எனப்படுகிறது.

* இப்படித்தான் வாழ வேண்டும் என்று எதுவுமில்லை. மற்றவர்களுக்குத் துன்பம் தராத வகையில், நம் மனதிற்கு எது சரி என‌ப்படுகிறதோ அதன்படி வாழலாம். எழுத்தாளர் பிரபஞ்சன், ‘அறநூல்களைப் படிக்கும் மகிழ்ச்சியின் பொருட்டே படிக்கிறேனே தவிர, அவற்றின் படி நடக்க வேண்டியதில்லை’ என்கிறார். நமக்குத் தெரிந்த அறத்தின்படி நாம் வாழ்வோம்.

2K kids: கொஞ்சம் பிரேக் போடுவோம் பரபர வாழ்க்கைக்கு!

* சக மனிதர்களை, அவர்களின் இடத்தில் இருந்து புரிந்துகொள்வோம். தமிழகத்தின் மூத்த பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் மறைந்த தொ‌.பரமசிவன், ‘நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களும் வாசிப்பதற்குரிய புத்த கங்கள்தான்’ என்றார்.

முகங்களை, மனங்களை வாசிப்போம்...

புரிந்துகொள்வோம்... வாழ்வோம்!