அரசியல்
அலசல்
Published:Updated:

“தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிவிட்டார்...” - சர்ச்சையில் தி.மு.க நகர்மன்றத் தலைவர்!

விஜயா
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயா

அந்த முகவரியில் ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகளை வைத்திருப்பதுடன், அதே முகவரியில் ஏற்கெனவே `பி.சி’ எனச் சாதிச் சான்றும் வைத்திருக்கிறார்.

‘போலிச் சாதிச் சான்றிதழுடன் தேர்தலில் போட்டியிட்டு, நகராட்சித் தலைவராகிவிட்டதாக’ தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சித் தலைவர் விஜயா (தி.மு.க) சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

இந்த விவகாரத்தைக் கிளப்பியிருக்கும் புளியங்குடி அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த திருமலைச்சாமி நம்மிடம் பேசுகையில், ‘‘நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடந்தது. அதில் தாழ்த்தப் பட்டோருக்கான வார்டாக அறிவிக்கப்பட்ட புளியங்குடி 33-வது வார்டில் நான் போட்டியிட மனுத்தாக்கல் செய்தேன்.

விஜயா
விஜயா

அதே வார்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விஜயா என்பவர் தி.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்தேன். ஆனாலும், தாழ்த்தப்பட்டவர் என்பதற்கான சான்று வைத்திருந்ததால், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேர்தலில் வென்று நகராட்சித் தலைவராகவும் ஆகிவிட்டார். கிறிஸ்தவரான விஜயாவின் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, கல்லூரிச் சான்றிதழ்களில் `பி.சி’ என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. படிக்கும் காலத்தில் அதற்கான சலுகைகளையும் பெற்றிருக்கிறார். 2003-ம் ஆண்டு விஜயா பெற்றிருக்கும் சாதிச் சான்றிதழில்கூட ‘பிற்பட்ட பிரிவினைச் சார்ந்தவர்’ என்றே இருக்கிறது” என்றவர், அதற்கான ஆதாரங்களையும் காட்டினார்.

“தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிவிட்டார்...” - சர்ச்சையில் தி.மு.க நகர்மன்றத் தலைவர்!

தொடர்ந்து பேசிய திருமலைச்சாமி, ‘‘புளியங்குடி நகராட்சித் தலைவரான விஜயா, அய்யாபுரம் பகுதியில் ஈஸ்வரன் கோயில் தெருவில் வசிக்கிறார். அந்த முகவரியில் ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகளை வைத்திருப்பதுடன், அதே முகவரியில் ஏற்கெனவே `பி.சி’ எனச் சாதிச் சான்றும் வைத்திருக்கிறார். தென்காசி மாவட்டத்தில் குடியிருக்கும் அவர், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட அக்கநாயக்கம்பட்டி கிராமத்தின் கீழத்தெரு என்ற முகவரியில், போலியாக `எஸ்.சி’ எனச் சான்று பெற்றிருக்கிறார். அதையும்கூட வேட்புமனு பரிசீலனை நடந்த பிப்ரவரி 5-ம் தேதிதான் வாங்கியிருக்கிறார். ஆளுங்கட்சியில் இருக்கும் சிலரது தலையீட்டின் பேரில், அதிகாரிகளின் துணையோடு இந்தச் சான்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

“தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிவிட்டார்...” - சர்ச்சையில் தி.மு.க நகர்மன்றத் தலைவர்!
“தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிவிட்டார்...” - சர்ச்சையில் தி.மு.க நகர்மன்றத் தலைவர்!

இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அவரது பதவியைப் பறிக்க வேண்டும். விஜயாவின் தாழ்த்தப்பட்டோருக்கான சாதிச் சான்றை ரத்துசெய்ய வேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறேன்” என்று படபடத்தார்.

திருமலைச்சாமி
திருமலைச்சாமி

இந்த விவகாரம் குறித்து, புளியங்குடி நகர்மன்றத் தலைவரான விஜயாவிடம் விளக்கம் கேட்டபோது, “என்மீது எந்தத் தவறும் கிடையாது. அவர் சொல்லும் தகவல்கள் தவறானவை. அவர் வைத்திருப்பதாகச் சொல்லும் சான்றிதழ்கள் உண்மையானவை என்றால் அதை கோர்ட்டில் நிரூபிக்கட்டும்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.