Published:Updated:

மோட்டார் சைக்கிளில் போலி மருத்துவர்கள்... வாடகை வீட்டில் போலி நர்ஸிங் கல்லூரி...

கதிகலங்கும் வேலூர்
பிரீமியம் ஸ்டோரி
News
கதிகலங்கும் வேலூர்

கதிகலங்கும் வேலூர்!

“இது காய்ச்சல் சீஸன் என்பதால், டிப்டாப் உடை அணிந்துகொண்டு கிராமந்தோறும் போலி மருத்துவர்கள் உலா வருகிறார்கள். பொதுமக்களே உஷார்!” - சுகாதாரத் துறை அதிகாரிகள் இப்படி எச்சரிக்கும் அளவுக்கு வேலூரில் போலி மருத்துவர்கள் பெருகிவிட்டனர். இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 28 போலி மருத்துவர்கள் வேலூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், போலி மருத்துவர்கள் ஒழியவில்லை.

மோட்டார் சைக்கிளில் போலி மருத்துவர்கள்... வாடகை வீட்டில் போலி நர்ஸிங் கல்லூரி...

கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டம், தற்போது விதவிதமான நோய்களுக்கும் பேர்போன மாவட்டமாக மாறிவருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி ஆங்காங்கே புற்றீசல்போல் போலி மருத்துவர்கள் உருவாகிவருகின்றனர். தனியார் மருத்துவ மனைக்குச் செல்ல பணம் இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களே இவர்களின் இலக்கு. தவிர சுகாதாரத் துறையின் அனுமதி யில்லாமலும், ‘நர்ஸிங் கல்வி நிறுவனம்’ என்ற போர்வையிலும் போலி கல்லூரிகள் பெருகிவிட்டன. இதுகுறித்தெல்லாம் சுகாதாரத் துறைக்கு தொடர் புகார்கள் சென்றன.

கடந்த செப்டம்பர் 8-ம் தேதி, வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம், எஸ்.பி பிரவேஷ்குமார், சுகாதாரத் துறை இணை இயக்குநர் யாஸ்மின் தலைமையிலான அதிகாரிகள் 50 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அப்போது 19 போலி மருத்துவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பலர் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில்தான் தற்போது டிப்டாப் உடை அணிந்து, ‘நடமாடும் மருத்துவர்கள்’ என்று கூறிக்கொண்டு கிராமங்களில் வலம்வருகிறார்கள் போலி மருத்துவர்கள். இவர்களிடம் உஷாராக இருங்கள் என்று மக்களை எச்சரித்திருக்கிறது வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை.

மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் யாஸ்மினிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“கைதுசெய்யப்படும் போலி மருத்துவர்கள், குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப் படுகிறார்கள். அப்படி இருந்தும் போலி மருத்துவர்கள் குறையவில்லை. நகரில் சுற்றினால் மாட்டிக் கொள்வோம் என்று, இவர்கள் கிராம மக்களைக் குறிவைக்கிறார்கள். கிராமப்புற மக்களும் அறியாமையால் இவர்களிடம் செல்கிறார்கள். இதேபோல், போலி கால்நடை மருத்துவர்களும் பெருகிவிட்டனர். போலி மருத்துவர்கள் உருவாகாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ‘மருத்துவர்கள் தங்களது கல்வித்தகுதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் ஆகிய விவரங்களை பலகையில் எழுதி கிளினிக் அல்லது மருத்துவமனை முன்பு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளோம். மருத்துவரின் பதிவு எண் இல்லாத மருந்துச் சீட்டுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கக் கூடாது என்றும் மருந்தகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் போலி மருத்துவர்கள்... வாடகை வீட்டில் போலி நர்ஸிங் கல்லூரி...

அதேவேளையில் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். மருத்துவம் படிக்காதவர்கள் மட்டுமல்ல, மாற்று மருத்துவமான ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய தரப்பினர் தங்கள் துறை சார்ந்த சிகிச்சைகளை மட்டுமே அளிக்க வேண்டும். அலோபதி சிகிச்சை அளிக்கக் கூடாது. அப்படி தவறு நடப்பது கண்டறியப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நர்ஸிங் கல்லூரிகளையும் ஆய்வு செய்துவருகிறோம். போலி மருத்துவர்கள், போலி நர்ஸிங் கல்லூரிகள் குறித்த புகார்களை, 94449 82688 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் அனுப்பலாம்” என்றார்.

போலி நர்ஸிங் கல்லூரிக் குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“மருத்துவ கவுன்சிலின் அனுமதி, தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலின் அனுமதி, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றின் அனுமதியுடன் நர்ஸிங் தேர்வு வாரியத்தில் பதிவுசெய்தால் மட்டுமே நர்ஸிங் கல்லூரி நடத்த முடியும். ஆனால், இந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நர்ஸிங் கல்லூரியை ஆரம்பித்து விடுகின்றனர். அங்கு சேரும் மாணவர்களுக்கு எந்தப் பயிற்சியும் வழங்குவதில்லை. பணம் கட்டினால் கல்விச் சான்றிதழ் தந்துவிடுவார்கள். இவர்களாகத் தயாரித்த அந்தப் போலி கல்விச் சான்றிதழை நர்ஸிங் கவுன்சிலில் பதிவுசெய்யச் சென்றால், சட்டப்படி மாட்டிக்கொள்வார்கள். ‘போலி நர்ஸ்’ என்ற பட்டம் மட்டுமே மிஞ்சும். எனவே, தங்கள் பிள்ளைகளை நர்ஸிங் கல்லூரியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், அந்தக் கல்லூரி அங்கீகாரம் பெற்றதா என்பதைத் தீர விசாரித்துச் சேர்க்க வேண்டும்” என்கிறார்கள்.

‘போலி’ என்கிற நோயை முழுமையாக ஒழிக்க வேண்டும் அரசு!