பொழுதுபோக்குக்காக ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்தவர்கள் பலர், இப்போது தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்குத் தள்ளப் பட்டுள்ளனர்! ரம்மி விளையாட்டால் வாழ்நாள் சேமிப்பை இழந்தவர்களின் எண்ணிக்கையும், கடனில் சிக்கியவர் களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்துப் பேசிய அன்னை தெரசா சமூகநல அறக்கட்டளை தலைவர் மகேஷ், ‘‘சுரண்டல் லாட்டரியில் பணத்தை இழப்பதுபோல், பலரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி பணத்தை இழந்துவருகின்றனர். சமீபத்தில், சாத்தான்குளம் அருகில் உள்ள பிரண்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல், ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்துவிட்டார். கடனிலிருந்து மீள முடியாமல் தன் இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபோல் பல இடங்களில் தற்கொலை முயற்சி சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்த விவகாரத்தில், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

வெற்றிவேலின் உறவினர்களிடம் பேசியபோது, ‘‘சென்னையில் இரும்புக்கடை நடத்திவந்த வெற்றிவேலுக்கு, நல்ல வருமானம் கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்னர் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் எளிதாக வெற்றிபெற்று பணம் கிடைத்திருக்கிறது. அதனால் சுலபமாகக் கிடைக்கும் பணத்துக்கு ஆசைப்பட்ட அவர், தொடர்ந்து விளையாடினார்.

ஒருகட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட் டுக்கு அடிமையாகி, கடன் வாங்கியும் மனைவியின் நகைகளை விற்றும் விளையாடித் தோற்றுள்ளார். லட்சக்கணக்கில் இழப்பைச் சந்தித்து கடனாளி ஆனதால் சொந்த ஊருக்கே வந்துவிட்டார். இந்தப் பிரச்னையால் வேதனைக்குள்ளாகி, தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததுடன் அவரும் தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக சிகிச்சை அளிக்கப் பட்டதால் மூவரும் உயிர் தப்பினர். இதுமாதிரியான விளையாட்டை உடனடியாக தடைசெய்வது நல்லது’’ என்றனர்.

ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிப் பேசிய கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யான ஹெச்.வசந்தகுமார், அதை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

‘‘ஆன்லைன் விளையாட்டுகளால் இளைய சமுதாயம் சீரழிந்துகொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் இந்த விளையாட்டு களில் ஆர்வம்காட்டுவதால் படிப்பில் கவனம் குறைகிறது. பணம் வைத்து விளையாடக்கூடிய ஆன்லைன் ரம்மியால், பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன. அதனால், இந்த விளையாட்டுகளை தடைசெய்ய வேண்டும்’’ என்றார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு வணிகத்தில் புழங்கும் பணத்தின் மதிப்பு ஆண்டுதோறும் 22 சதவிகிதம் அதிகரித்துவருவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடு கின்றன.

அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ‘ஆன்லைன் ரம்மி மூலமாக 2014-ம் ஆண்டு 60 லட்சம் ரூபாய் வணிகம் நடைபெற்றது. 2018-ம் ஆண்டில் 2 கோடி ரூபாய் வணிகம் நடைபெற்றது’ என்கிறது. ‘பப்ஜி, ஃப்ரீ ஃபயர், ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆண்டு தோறும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக்கொண்டே வருவதால், 2023-ம் ஆண்டில் இந்த விளையாட்டுகள்மூலம், 11,300 கோடி ரூபாய் வணிகம் நடை பெறும்’ என அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் அறிவித்திருக்கிறது.

2010-ம் ஆண்டு 3 கோடி பேர் மட்டும்தான் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டனர். 2018-ம் ஆண்டில் 30 கோடி பேர் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களில் 15 சதவிகிதத்தினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விபரீதங்கள்குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். அவரிடம் பேசியபோது, ‘‘இந்தியாவில் இணைய வசதி மிகக் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்த பிறகு, அனைவரும் சமூக வலை தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். அதன் விளை வாகத்தான் பலரும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் சிக்கிக்கொள்கின்றனர். விளை யாட்டாக ஆன்லைன் ரம்மியில் இணைந்து, அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்கள் ஏராள மானோர். கூலித்தொழிலாளர்கள் முதல் பணம் படைத்தவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகிக் கிடக்கின்றனர்.

ஆரம்ப நிலையில், பணம் கிடைக்கத் தொடங்கியவுடன் அதற்கு அடிமையாகி விடுகின் றனர். ஒருகட்டத்துக்குப் பிறகு பணத்தை இழக்க ஆரம்பிக்கின் றனர். விட்டதைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து விளையாடி மொத்த பணத்தையும் இழக்கின்றனர். ‘ஆன்லைன் விளையாட்டுகள் சூதாட்டம் அல்ல’ என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருப்பதால், சட்ட ரீதியாக இந்த விளையாட்டுகளை தடைசெய்ய முடிவதில்லை. அதனால்தான், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

இந்தியாவில் 5.5 கோடி பேர் விளையாடும் ஆன்லைன் ரம்மியை, ‘தி ரம்மி ஃபெடரேஷன்’ (டி.ஆர்.எஃப்) என்ற அமைப்புதான் முறைபடுத்துகிறது. நாடு முழுவதும் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் இந்தத் துறையில் 18 நிறுவனங்கள் ஈடுபட்டபோதிலும், 7 நிறுவனங்கள் மட்டுமே அங்கீ காரம் பெற்றுள்ளன. ஆன்லைன் ரம்மி மீது எழுந்துள்ள சர்ச்சை குறித்து டி.ஆர்.எஃப் நிறுவனத்தின் கருத்தை அறிய, அவர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளோம். ஒரு வார காலம் ஆன பிறகும் அந்த நிறுவனத்திடமிருந்து பதில் வரவில்லை. நிறுவனம் பதில் அளித்தால், அதை வெளியிட தயாராக இருக்கிறோம்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியானா எனப் பல மாநிலங்களில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் மாநில அரசுகளால் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஒருசில வழக்குகளில் உயர் நீதிமன்றம் இந்த விளையாட்டைத் தடைசெய்தபோதிலும், மேல்முறையீடுகளில் ஆன்லைன் நிறுவனங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.

2015-ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்பது, வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி விளையாடப்படுவதல்ல. சிந்திக்கும் வலிமை, எதிராளியை கணிக்கும் தன்மை உள்ளிட்ட திறமைகளின் அடிப்படையில் கிடைக்கும் வெற்றி என்பதால், இதை ஒரு சூதாட்டமாகக் கருத முடியாது’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதிவரை பல மேல்முறையீடுகள் செய்யப்பட்டபோதிலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு முழுமையாகத் தடைசெய்யப்படவில்லை.