Published:Updated:

நெல் பாதுகாப்பில் கோட்டைவிட்ட அரசு... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

நெல்
பிரீமியம் ஸ்டோரி
நெல்

தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு அருகிலேயே 109 திறந்தவெளி குடோன்கள் இருக்கின்றன. இது போன்ற குடோன்களை பாதுகாப்பானதாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

நெல் பாதுகாப்பில் கோட்டைவிட்ட அரசு... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு அருகிலேயே 109 திறந்தவெளி குடோன்கள் இருக்கின்றன. இது போன்ற குடோன்களை பாதுகாப்பானதாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

Published:Updated:
நெல்
பிரீமியம் ஸ்டோரி
நெல்

தட்டிலிருந்து ஒரு சோற்றுப் பருக்கையோ, நெற்களத்திலிருந்து ஒரு தானியமோ சிதறி வீணானாலே பதறிப்போய்விடும் விவசாயிகள், டன் கணக்கில் நெல் மூட்டைகள் வீணாவதைப் பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நெல் பாதுகாப்பில் கோட்டைவிட்ட அரசு... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

அதிகரித்த நெல் உற்பத்தி!

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக நல்ல மழை பெய்துவருவதால், சாகுபடிப் பரப்பும், விளைச்சலும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. அதிலும் 2021-22-ல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி பரப்பளவு 22,05,470 ஹெக்டேராகவும், நெல் உற்பத்தி 1.22 லட்சம் டன்னாகவும் அதிகரித்தன. ஆனால், நெல் கொள்முதலில் தொடர்ந்து சொதப்பிவருகிறது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்.

தற்போது மாநிலம் முழுக்க 2,113 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் அங்கெல்லாம், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் குறைந்த தொகை வழங்குவது, கமிஷன், இடைத்தரகர்கள், வியாபாரிகள் தலையீடு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கின்றன. இதையெல்லாம்விடக் கொடுமை, மழையால் ஆண்டுதோறும் வீணாகும் நெல் மூட்டைகள்!

நெல் பாதுகாப்பில் கோட்டைவிட்ட அரசு... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

வீணான நெல் மூட்டைகள்!

இது குறித்து, பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். “கொள்முதலுக்காக கொண்டுசெல்லப்படும் நெல் மூட்டைகள் மட்டுமின்றி, ஏற்கெனவே அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாவது தொடர்கிறது. ஆனால், பெரும்பாலான அதிகாரிகள் அதைக் கண்டுகொள்வதே இல்லை. காரணம், கொள்முதல் நிலைய கட்டுமானத்திலேயே பிரச்னை இருக்கிறது. பெரும்பாலான கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியிலேயே செயல்படுகின்றன. கொள்முதல் செய்த மூட்டைகளையும் திறந்தவெளியிலேயே வைக்கிறார்கள்.

இவ்வாறு திறந்தவெளியிலுள்ள குடோன்களில் இரண்டு அடி உயரத்துக்கு கருங்கற்களையும், உயரமான கட்டை களையும் வைத்து, அவற்றின் மீதே நெல் மூட்டைகளை அடுக்க வேண்டும். மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடிப் பாதுகாக்க வேண்டும். ஆனால், எங்குமே இது போன்று செய்வதில்லை. வெறும் தரையிலேயே நெல் மூட்டைகளை அடுக்கி விடுகிறார்கள். இல்லையென்றால் பெயரளவுக்குக் கட்டைகளைப் போட்டு அடுக்குகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிடுகின்றன. நெல் பாதுகாப் பில் இந்த அரசு கோட்டைவிட்டது என்பதே உண்மை. இனியாவது நெல் உற்பத்திக்கு ஏற்ப நிரந்தர கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். பாதுகாப்பான குடோன்களையும் கட்ட வேண்டும்” என்றார்.

ஆறுபாதி கல்யாணம்
ஆறுபாதி கல்யாணம்

காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம், “நெல் பாதுகாப்பு நிலையங்களை மழை பாதிப்பை எதிர்நோக்கி, திட்டமிட்டு சரியான இடங்களில் கட்ட வேண்டும். ஆனால், எளிதில் தண்ணீர் புகும் இடங்களில்தான் பெரும்பாலான கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் தானியங்களைப் பாதுகாக்கக் கட்டப்படுவது போன்ற நவீன வடிவமைப்பில் நெல் பாதுகாப்பு நிலையங்களை இங்கும் கட்டுவதே இதற்குத் தீர்வு. இது பற்றிய திட்ட அறிக்கையை 2006-ம் ஆண்டே தமிழக அரசிடம் கொடுத்தேன். இன்னமும் அது நடைமுறைக்கு வரவில்லை. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், நெல் மூட்டைகளைப் பாதுகாக்க முடியும்” என்றார்.

“கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும்” என்று 2021-22 வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின்போது, “60 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாய்கள் வழங்கப்படும்” என்றும் அறிவித்தார். ஆனால், இந்த இரண்டு அறிப்புகளும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதே கள நிலவரம்.

நெல் பாதுகாப்பில் கோட்டைவிட்ட அரசு... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

புதிய குடோன்கள், தார்ப்பாய்கள்!

இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு அருகிலேயே 109 திறந்தவெளி குடோன்கள் இருக்கின்றன. இது போன்ற குடோன்களை பாதுகாப்பானதாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 30 ஆயிரம் தரமான தார்ப்பாய்களைக் கொள்முதல் செய்து அந்த குடோன்களுக்கு வழங்கவிருக்கிறோம்.

இதுதவிர, நபார்டு வங்கி உதவியுடன் ரூ.248 கோடியில் 20 இடங்களில் நெல் பாதுகாப்பு குடோன்களை அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தப் பணிகள் அடுத்த 45 நாள்களுக்குள் முடிந்துவிடும். மேலும், ஒரத்தநாட்டில் இரண்டரை லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமித்துவைக்கும் அளவிலான குடோன்களை அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது. அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் தமிழகத்திலுள்ள அனைத்து திறந்தவெளி குடோன்களுக்கும் பதிலாக மூடிய குடோன்கள் கட்டப்படும்.

ஜெ.ராதாகிருஷ்ணன்
ஜெ.ராதாகிருஷ்ணன்

பருவமழையால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்துவருகிறோம். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம், உணவு பாதுகாப்புத்துறையின் குடோன்கள் மட்டுமின்றி ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் செயல்படாத அரிசி ஆலைகளில் உள்ள மூடப்பட்ட குடோன்களையும் தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியிருக்கிறோம். இதற்காக ஊராட்சி ஒன்றிய அளவில் கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். 2021, மே மாதம் 18 லட்சம் மெட்ரிக் டன் அரவைக்கு அனுப்பப்படாமல் நெல்லாகவே குடோன் களில் இருந்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அரவைக்கு அனுப்பி தற்போது 10 லட்சம் மெட்ரிக் டன் நெல், அரிசியாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 22 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமித்துவைக்கும் வகை யில் மூடிய குடோன்களை நாம் அமைத்துவிட்டாலே போதும்... மழையில் நனைந்து வீணாவது முற்றிலும் தடுக்கப்படும்” என்றார்.

ஐயா அதிகாரிகளே... நெல்லை விளைவிப்பதைவிடவா, அதைப் பாதுகாப்பது கடினமான வேலை?!