Published:Updated:

வேலூர்: `என் புள்ளையக் காப்பாத்திக் கொடுங்க!’ - சிகிச்சைக்கு உதவி கேட்கும் தந்தையின் பரிதாபம்

உதவி வேண்டும் ரவீந்தர் சிகிச்சையின்போது...

``ரெண்டு சிறுநீரகமும் செயலிழந்துபோச்சு. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 12 லட்ச ரூபாய் கேட்கிறாங்க. என் புள்ளையக் காப்பாத்திக் கொடுங்க சாமி...’’’ என்று கதறுகிறார், வேலூரைச் சேர்ந்த தந்தை ஒருவர்.

வேலூர்: `என் புள்ளையக் காப்பாத்திக் கொடுங்க!’ - சிகிச்சைக்கு உதவி கேட்கும் தந்தையின் பரிதாபம்

``ரெண்டு சிறுநீரகமும் செயலிழந்துபோச்சு. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 12 லட்ச ரூபாய் கேட்கிறாங்க. என் புள்ளையக் காப்பாத்திக் கொடுங்க சாமி...’’’ என்று கதறுகிறார், வேலூரைச் சேர்ந்த தந்தை ஒருவர்.

Published:Updated:
உதவி வேண்டும் ரவீந்தர் சிகிச்சையின்போது...

வேலூர், சலவன்பேட்டை காரிய மண்டபப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மனைவி கலா. இவர்களின் 18 வயது மகன் ரவீந்தர், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நோயின் தாக்கம் தீவிரமடைந்திருப்பதால், தற்சமயம் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் உடல்நிலை அபாய கட்டத்தில், ஐந்தாவது நிலையை எட்டியிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதையடுத்து, வேலூரிலுள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் `டயாலிசிஸ் சிகிச்சை’ பெற்றுவரும் ரவீந்தர், 30-வது முறையாக டயாலிசிஸ் செய்துகொள்கிறார்.

ரவீந்தர்
ரவீந்தர்

இந்த நிலையில், ‘``சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே ரவீந்தர் உயிர் பிழைக்க முடியும். அதற்காக 12 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும்’’’ என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது. ``நான் அன்றாடங்காய்ச்சி’.. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்...’’ என்று கதறும் சரவணன் தன் மனைவி, மகனுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து உதவிகேட்டு மனு கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், ``நான் சின்னதாக டிபன் கடைவெச்சிருந்தேன். கொரோனா லாக்டௌனால கடையை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுச்சு. பிறகு, அந்தத் தொழிலை மீண்டும் எடுத்து நடத்த முடியலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என் பையனுக்கு, பிறந்த சில நாள்கள்லருந்தே சிறுநீரக பாதிப்பு இருக்கு. தொடர்ந்து அவனோட இந்த 18 வயசு வரைக்கும் சிகிச்சை எடுத்துக்கிட்டுதான் இருக்கோம். ஒம்போதாவது வரைக்கும் படிச்சான். அப்புறம் அவன் உடல்நிலையை காரணம் காட்டி, `பள்ளிக்கு அனுப்ப வேணாம்’னு டீச்சருங்க சொல்லிட்டாங்க. மத்தபடி ஆக்டிவ்வான பையன். ஓடி ஆடி விளையாடுவான். கடவுள் பக்தி அதிகம். இங்கே இருக்குற அம்மன் கோயில் கருவறைக்குள்ளேயே போய் பூஜை பண்ணுவான். கோயில் நிர்வாகனத்துல உள்ளவங்களும் அதுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க.

தந்தை சரவணன்
தந்தை சரவணன்

கடந்த ரெண்டு மாசத்துல மட்டும் 4 லட்ச ரூபாய்க்கு மேல மருத்துவச் செலவு பண்ணிட்டேன். வாங்கின கடனுக்கு வட்டியே கட்ட முடியலை. பையனோட உசுரு முக்கியம். நான் சிறுநீரக தானம் செய்யறேன். ஆனாலும், மருத்துவச் செலவு 12 லட்ச ரூபாய் ஆகும்னு சொல்லியிருக்காங்க. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்னு தெரியலை. சொந்தக்காரங்கல்லாம் ஒதுங்கி நிக்கிறாங்க. யாராவது உதவி பண்ணி, என் புள்ளைய உயிரோட காப்பாத்திக் கொடுங்க ஐயா... அவனுக்காகத்தான் இந்த உசுரையேவெச்சிருக்கேன். சாகுற வரைக்கும், எங்களுக்கு உதவுற உள்ளத்தை மறக்க மாட்டேன் சாமி’’ என்றார் கதறி அழுதபடி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism