விருப்ப ஓய்வுக்கான விதிமுறைகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. ‘திறன் குறைவு’ எனக் கண்டறியப்படும் சுமார் மூன்று லட்சம் ஊழியர்களை ஜனவரி 2020-க்குள் ‘விருப்ப ஓய்வு’ மூலம் பணியிலிருந்து விடுவிக்கப்போவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. நிதிநிலை காரணமாக விருப்ப ஓய்வை அறிவித்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் மொத்தமிருக்கும் 1.5 லட்சம் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது சுமார் 80,000 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உபரியாக இருக்கும் 12,000 ஆசிரியர்களுக்கும் விருப்ப ஓய்வு பரிசீலிக்கப்படுவதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

விரும்பிக் கேட்பதுதான் விருப்ப ஓய்வா?

மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பென்ஷன், கிராஜுவிட்டி போன்ற ஓய்வுக்காலப் பணப் பலன்களைப் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச காலம் வரை பணி நிறைவு செய்த பிறகு, உடல்நலம், நிதித் தேவை, குடும்பச் சூழல் போன்ற காரணங்களால் விருப்பப்பட்டு விண்ணப்பித்து பெறுவதுதான் விருப்ப ஓய்வுக்கான பொதுவிதி. ஆனாலும், ஊழியர்களின் எண்ணிக்கை உபரியாக இருத்தல், நிறுவனத்தின் நிதி நெருக்கடி, நிர்வாகச் சீரமைப்பு போன்ற காரணங்களுக்காகவும் அரசு மற்றும் நிறுவனங்கள் விருப்ப ஓய்வை நடைமுறைப்படுத்தலாம்.

எனவே, வேலை செய்வோர் மற்றும் வேலை தரும் நிறுவனம் இரு தரப்பினருமே விருப்ப ஓய்வைப் பரிசீலிக்கலாம்.

குறைந்தபட்ச பணிக்காலம்

வேலை செய்பவர் பென்ஷன் போன்ற ஓய்வுக்காலப் பலனுடன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் இருபது வருடங்கள் பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதே நேரத்தில் 18 வயதில் வேலையில் சேர்ந்த ஒருவர் 35 வருடங்கள் பணி நிறைவுக்குப் பிறகுகூட விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அவருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படலாம்.

வேலை தருபவரே விருப்ப ஓய்வை அமலாக்கம் செய்யும்போது குறைந்தபட்ச பணி நிறைவு 15 வருடங்களாக நிர்ணயிக்கப்படலாம்; 10 வருடங்களாகவும் குறைக்கப்படலாம்.

வயது

விருப்ப ஓய்வுக்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. முதலாவது குறைந்தபட்ச பணிக்காலம். மற்றொன்று வயது. விருப்ப ஓய்வுக்கான குறைந்தபட்ச வயது வேறுபடலாம்.

பணப் பலன்

விருப்ப ஓய்வு பெறும் ஓர் ஊழியர், அவரின் பணிக்காலம், பணி விதிமுறைகளின் அடிப்படையில் கிராஜுட்டி, பிராவிடன்ட் ஃபண்ட், ஓய்வு பெறும் நாளிலுள்ள விடுப்பு சம்பளம் மற்றும் பென்ஷன் கம்ப்யூடேஷன் ஆகியவற்றின் கூட்டுத் தொகையாக அதிக பட்சம் 60 மாத சம்பளத்தைப் பெறலாம்.

பென்ஷன் உள்ள வேலை எனில், மேற்கண்ட ஒட்டுமொத்த பணப் பலனுடன், மாதாந்தர பென்ஷனும் பெறலாம். பென்ஷன் என்பது, அதிகபட்சமாகக் கடைசி மாதச் சம்பளத்தில் சரி பாதியாக இருக்கும்.

உபரிச் சலுகை

அரசுப் பணியினர் விருப்ப ஓய்வு பெறும்போது உபரிச் சலுகையாக, அந்த ஊழியர் நிறைவுசெய்த பணிக்காலத்துடன், அதிகபட்சமாக ஐந்து வருட பணிக்காலம் சேர்க்கப்பட்டு பென்ஷன் முதலானவை கணக்கிடப்படுகின்றன.

விருப்ப ஓய்வுக்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. முதலாவது குறைந்தபட்ச பணிக்காலம். மற்றொன்று வயது.

வேலை தரும் நிறுவனங்களே விருப்ப ஓய்வை அமலாக்கம் செய்யும்போது, விருப்ப ஓய்வுக்கு தகுதி பெறும் ஊழியர் நிறைவுசெய்த பணிக்காலம் மற்றும் எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு கருணைத் தொகை (Ex-Gratia) தரக்கூடும். இது அந்த ஊழியரின் கடைசிச் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

பென்ஷன் இல்லாத ஊழியர்

ஏப்ரல் 2003-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசிலும், ஜனவரி 2004-ம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் போன்றவற்றிலும் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் நிறுத்தப்பட்டு விட்டது.

இவ்வாறு, பென்ஷன் ரத்து செய்யப்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு என்று வரும்போது பெறக்கூடிய பணப்பலன் என்பது, அவர்களுடைய விடுப்பு சம்பளம் மற்றும் சி.பி.எஸ் / என்.பி.எஸ் தொகை மட்டுமே.

சுய விருப்ப ஓய்வு

நீண்டுவரும் ஓய்வுக்கால வாழ்நாளைக் கணக்கிடும்போது, பென்ஷன் உள்ள ஊழியரும், பென்ஷன் இல்லாத ஊழியரும் தாமே விரும்பி, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிப்பது சரியான முடிவாக இருக்காது என்பது கவனிக்க வேண்டிய அம்சம்!