பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் முதலாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் முதலாம் காலாண்டு முடிவினை இனி பார்ப்போம்.

ஃபெடரல் பேங்க்

ஃபெடரல் பேங்கின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 46% அதிகரித்து, ரூ.384 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இந்த வங்கியின் லாபம் ரூ.262 கோடியாக இருந்தது. வங்கி வழங்கிய கடன்கள் 18.81% அதிகரித்து, ரூ.1.12 லட்சம் கோடியாக உள்ளது.

இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.984 கோடியிலிருந்து, ரூ.1,154 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வட்டி வரம்பு 3.15 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக் கடன் விகிதம் 2.92 சதவிகிதத்திலிருந்து 2.99 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி

ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ் மென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 42% அதிகரித்து, ரூ.291.7 கோடியாக உள்ளது. இதன் மொத்த வருமானம் ரூ.501.19 கோடியிலிருந்து, ரூ.552.75 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 18% அதிகரித்து, ரூ.3.56 லட்சம் கோடியாக உள்ளது.

இண்டெக்ஸ் மற்றும் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் தவிர்த்த பங்கு சார்ந்த மொத்த ஃபண்டுகளின் மதிப்பு ரூ.1.46 லட்சம் கோடியிலிருந்து, ரூ.1.69 லட்சம் கோடியாக உள்ளது.

யெஸ் பேங்க்

யெஸ் பேங்க்கின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 91% குறைந்து, ரூ.113.76 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.1,260.36 கோடியாக இருந்தது. கடந்த நான்காவது காலாண்டில் ரூ.1,507 கோடி நஷ்டமடைந்திருந்தது.

இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு 3.22 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் மட்டும் புதிதாக ரூ.6,230 கோடி அளவுக்கு வாராக் கடன் உள்ளது. ரியல் எஸ்டேட்டுக்காக வழங்கிய மொத்தக் கடன் மதிப்பு ரூ.24,000 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் வாராக் கடன் ஒதுக்கீடு ரூ.625.65 கோடியிலிருந்து, ரூ.1,784.11 கோடியாக அதிகரித்துள்ளது.

கோல்கேட் பாமோலிவ் இந்தியா

கோல்கேட் பாமோலிவ் நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 10.7% குறைந்து, ரூ.169.1 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.189.5 கோடியாக இருந்தது.

உள்நாட்டு நிகர விற்பனை 6% அதிகரித்ததன் காரணமாக, வருமானம் 4.2% அதிகரித்து, ரூ.1,085 கோடியாக உள்ளது. எபிட்டா 6.6% அதிகரித்து, ரூ.300 கோடியாகவும் எபிட்டா வரம்பு 0.6 சதவிகிதத்திலிருந்து, 27.6 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. விளம்பரத்துக்கான செலவு ரூ.143.5 கோடியிலிருந்து, ரூ.151.3 கோடியாக அதிகரித்துள்ளது.

விப்ரோ

விப்ரோ நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் 12.6% அதிகரித்து, ரூ.2,388 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.2,121 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 5.3% அதிகரித்து, ரூ.14,716 கோடியாக உள்ளது. விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி, ஜூலை இறுதியில் ஓய்வு பெறுகிறார். அதன்பின் அபிடலி நீமுச்வாலா விப்ரோவின் புதிய நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்க இருக்கிறார். விப்ரோ நிறுவனம் ரூ.10,500 கோடி வரையிலான பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கு அதன் நிர்வாகக் குழு அனுமதி அளித்துள்ளது. நிறுவனத்தின் ஐ.டி சேவைப் பிரிவின் எபிட்டா 5.5% சரிந்து, ரூ.2,652 கோடியாக உள்ளது.

கோல்கேட் இந்தியா

கோல்கேட் நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 4.18% அதிகரித்து, ரூ.1,084.86 கோடியாக உள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.1,041.30 கோடியாக இருந்தது. நிகர லாபம் 10.76% குறைந்து, ரூ.169.11 கோடியாக உள்ளது. எபிட்டா 8.33% அதிகரித்து, ரூ.314.97 கோடியாக உள்ளது. கோல்கேட் பங்கின் இ.பி.எஸ் 6.97 ரூபாயிலிருந்து 6.22 ரூபாயாகக் குறைந்துள்ளது.

தனலஷ்மி பேங்க்

தனலஷ்மி பேங்க்கின் நிகர வட்டி வருமானம் ஜூன் காலாண்டில் 11.04% அதிகரித்து, ரூ.90.09 கோடியாக உள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.81.13 கோடியாக இருந்தது. நிகர லாபம் 144.1% குறைந்து, ரூ.19.84 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் 45.4% அதிகரித்து, ரூ.29.11 கோடியாக உள்ளது. தனலஷ்மி நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 1.78 ரூபாயிலிருந்து 0.78 ரூபாயாகக் குறைந்துள்ளது.

மைண்ட்ட்ரீ

எல்&டி நிறுவனம் கையகப்படுத்திய மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் 41% குறைந்து, ரூ.92.7 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் லாபம் ரூ.158.2 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் 53% குறைந்து ரூ.198.4 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் மொத்த செலவு ரூ.1,451.3 கோடியிலிருந்து ரூ.1,730 கோடியாக அதிகரித்துள்ளது. வருமானம் 11.9% அதிகரித்து ரூ.1,834.2 கோடியாக உள்ளது.