Published:Updated:

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்

பிரீமியம் ஸ்டோரி

ங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் முதலாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் முதலாம் காலாண்டு முடிவுகளை இனி பார்ப்போம்.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தனித்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் 47.36% குறைந்து, ரூ.3,596.11 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.6,831.13 கோடியாக இருந்தது. மார்ச் மாதக் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் 41% குறைந்து, ரூ.6,099.3 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருமானம் ரூ.1.49 லட்சம் கோடியிலிருந்து, ரூ.1.50 லட்சம் கோடியாக சிறிதளவு உயர்ந்துள்ளது. மார்ச் மாதக் காலாண்டில் ரூ.1.45 லட்சம் கோடியாக இருந்தது. நிறுவனத்தின் எபிட்டா 23.2% குறைந்து, ரூ.8,349.8 கோடியாக உள்ளது. எபிட்டா வரம்பு 7.5 சதவிகிதத்திலிருந்து 5.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

அப்போலோ டயர்ஸ்

அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் 44% குறைந்து, ரூ.142 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.252 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருவாய் ரூ.4,249 கோடி யிலிருந்து, ரூ.4,272 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 1% அதிகரித்து, ரூ.3,044 கோடியாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் செயல்பாட்டு வருவாய் 5% அதிகரித்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 95.42% அதிகரித்து, ரூ.1370.08 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.701.09 கோடியாக இருந்தது. இதர வருவாய் 32.27% அதிகரித்து, ரூ.3868.76 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருமானம் 13.10% அதிகரித்து, ரூ.5843.65 கோடியாக உள்ளது. வாராக்கடனுக் கான ஒதுக்கீடு 14.29% அதிகரித்து, ரூ.3,814.58 கோடியாக உள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

அசோக் லேலாண்ட்

அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 9.06% குறைந்து, ரூ.5,683.86 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.6,250.13 கோடியாக இருந்தது. நிகர லாபம் 37.8% குறைந்து, ரூ.230.22 கோடியாக உள்ளது. எபிட்டா 20% குறைந்து, ரூ.558.04 கோடியாக உள்ளது. அசோக் லேலாண்ட் பங்கின் இ.பி.எஸ் 1.26 ரூபாயிலிருந்து, 0.78 ரூபாயாகக் குறைந்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

எய்சர் மோட்டார்ஸ்

எய்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 6.4% குறைந்து, ரூ.2,381.92 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.2,544.75 கோடியாக இருந்தது. நிகர லாபம் 21.59% குறைந்து ரூ.451.77 கோடியாக உள்ளது. எபிட்டா 15.46% குறைந்து ரூ.734.87 கோடியாக உள்ளது. எய்சர் மோட்டார்ஸ் பங்கின் இ.பி.எஸ் 211.35 ரூபாயிலிருந்து, 165.57 ரூபாயாகக் குறைந்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

டி.எல்.எஃப்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் இரு மடங்கு அதிகரித்து, ரூ.414.72 கோடியாக உள்ளது.முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.172.77 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் ரூ.1,657.67 கோடியிலிருந்து, ரூ.1,540.95 கோடியாகக் குறைந்துள்ளது. இதர வருமானம் ரூ.296.51 கோடி அதன் நிகர லாபத்தை அதிகரிக்க உதவியுள்ளது. நிகர விற்பனை ரூ.705 கோடியாக உள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

டெக் மஹிந்திரா

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் 6.8% அதிகரித்து ரூ.959.30 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.897.90 கோடியாக இருந்தது. மார்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் லாபம் 15% குறைந்துள்ளது. ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் 4.6% அதிகரித்து, ரூ.8,653 கோடியாக உள்ளது. எபிட்டா 3.2% குறைந்து ரூ.1,314 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாப வரம்பு 1.2% குறைந்து 15.2 ஆக உள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

அலகாபாத் வங்கி

அலகாபாத் வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் ரூ.128 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,944 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது. மார்ச் காலாண்டில் ரூ.3,834 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது. செயல்பாட்டு லாபம் ரூ.860 கோடியாக அதிகரித்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

மொத்த வருவாய் ரூ.4,748 கோடியாகக் குறைந்துள்ளது. வட்டி வருமானம் ரூ.4,600 கோடியிலிருந்து, ரூ.4323 கோடியாகக் குறைந்துள்ளது. நிகர வட்டி வரம்பு 2.58 சதவிகிதத்திலிருந்து 2.85 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

பிரமல் என்டர்பிரைசஸ்

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 21% அதிகரித்து, ரூ.461 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.382 கோடியாக இருந்தது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

வருவாய் 21% அதிகரித்து ரூ.3,506 கோடியாக உள்ளது. இதர செலவுகள் 2% குறைந்து, ரூ.1,400 கோடியாக உள்ளது. பார்மா பிரிவில் வருவாய் 12% அதிகரித்து, ரூ.1,173 கோடியாக உள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

பேங்க் ஆஃப் இந்தியா

இதன் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 0.14% குறைந்து, ரூ.154.10 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.154.32 கோடியாக இருந்தது.

நிகர வட்டி வருமானம் 3.92% அதிகரித்து, ரூ.3,520.59 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் 21.1% அதிகரித்து, ரூ.2,286.25 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 0.89 ரூபாயிலிருந்து, 0.49 ரூபாயாகக் குறைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு