பழவேற்காட்டைச் சேர்ந்த தீபக், பத்து வயதில் தன் தந்தையுடன் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றார். படகை இயக்குவதிலிருந்து மீன் பிடித்துக்கொண்டு கரை சேர்வது வரையிலான அத்தனை நுணுக்கங்களையும் தீபக்குக்குக் கற்றுக்கொடுத்தார் அவரின் தந்தை. தீபக்குக்கு, அன்று முதல் கடல்தான் உலகமாயிற்று. அவரின் அந்த உலகம், எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம்; அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படலாம். காரணம், காட்டுப் பள்ளியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள அதானி துறைமுகம்.

இந்தத் துறைமுகம் 330 ஏக்கர் பரப்பளவுகொண்டது. இதை சுமார் 6,200 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய, அனுமதி கேட்டிருந்தது துறைமுக நிர்வாகம். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கான குறிப்பாணை (Terms of References) சமீபத்தில் வழங்கியது. ஆனால், இதுதொடர்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் மீனவர்களிடம் கருத்துகள் எதுவும் கேட்கப்படவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில்கெள்ளாமலேயே அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது.

பழவேற்காடு ஏரியைச் சார்ந்து சுமார் 50,000 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தத் திட்டம், அவர்கள் அனைவரின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதுதான் அங்குள்ள மக்களின் குற்றச்சாட்டு. ஆகவே, இந்தக் குறிப்பாணையை ரத்துசெய்து, அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என, பழவேற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மீனவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பழவேற்காடு ஊராட்சி நிர்வாகிகள், ‘‘இந்தத் துறைமுக விரிவாக்கம் நடந்தால், கோரைக்குப்பம் முதல் கூனங்குப்பம் வரை உள்ள மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். கொசஸ்தலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே உள்ள சிறிய மணற்திட்டு அரிக்கப்பட்டு ஆறு, கடலுடன் கலந்துவிடும். அதன் பாதிப்பு பழவேற்காடு ஏரி வரை நீளும். இதனால், பறவைகள் சரணாலயமான பழவேற்காடு ஏரியும் கடலுடன் கலந்துவிடும். பொன்னேரி பகுதி, நீர்க்கல்லறையாக உருவெடுக்கும்’’ என்று எச்சரித்தனர்.

துறைமுக விரிவாக்கத்தின் அபாயங்கள் குறித்துப் பேசினார் மீனவர் ராஜேந்திர நரசிம்மன். ‘‘காட்டுப்பள்ளி கிராமத்தில் எல் அண்ட் டி நிறுவனம் கொண்டுவந்த துறைமுகத்தை, 2013-ல் அதானி நிறுவனம் வாங்கியது. அதைத்தான் தற்போது 53,031 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யவும், தொழில் பூங்கா அமைக்கவும் அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் இங்கு துறைமுகம் கொண்டுவந்தபோது, 10,000 பேருக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்தது. ஆனால், 250 பேருக்கு மட்டுமே வேலை அளித்தது. மக்களை ஏமாற்றி அவர்களுடைய நிலத்தில் கொண்டுவரப்படும் இதுபோன்ற திட்டங்கள், அந்த மக்களைச் சமூகரீதியாகவும் சூழலியல்ரீதியாகவும் பாதிக்கும். இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொண்டு, துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி மறுக்க வேண்டும்’’ என்றார்.

தாங்கல் பெரும்புலம் ஊராட்சி நிர்வாகிகள், ‘‘கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டப்படி மீன்பிடி இடங்கள், மீன் இனப்பெருக்கப் பகுதிகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். உள்ளூருக்கான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டப்படி மீனவர்களின் பொதுச் சொத்துகள், மீனவக் கிராமங்களின் சமூகக் கட்டமைப்புகள் மற்றும் அவர்களுடைய நீண்டகாலக் குடியிருப்புக்கான திட்டத்தையும் தயார்செய்யவேண்டும். இவை, இன்றளவும் செய்து முடிக்கப்படவில்லை. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முழுமையற்ற கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தை வைத்து, துறைமுக விரிவாக்கம் மற்றும் தொழிற்பூங்கா அமைக்க அதானி நிறுவனம் அனுமதி வாங்கியிருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கே காரணம். கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் முழுமையடையாதவரை, இதுபோன்ற விரிவாக்கத் திட்டங்களை எங்கள் பகுதியில் அனுமதிக்க மாட்டோம்’’ என்றனர் கறாராக.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘‘மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவல்ல எந்தவொரு திட்டத்துக்கும் அரசின் ஆதரவு கிடையாது. அந்தப் பகுதியில் வேலைவாய்ப்பைப் பெருக்கி, வட்டார வளர்ச்சிக்கு உதவும் திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. துறைமுக விரிவாக்கத் திட்டம் நல்லதா, மக்களுக்கு ஏற்றதா என்பதுகுறித்து மாவட்ட அளவில் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்” என்றார்.

இதுதொடர்பாக kamlesh.bhagia@adani.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் அலைபேசி வழியாகவும் அதானி துறைமுக நிறுவனத்தின் செகரட்டரி கமலேஷ் பாகியாவைத் தொடர்புகொள்ள முயன்றோம். இதற்கு முன்பும் அதானி துறைமுக நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.