Election bannerElection banner
Published:Updated:

Election updates: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அப்டேட்ஸ் மற்றும் செய்திகளின் தொகுப்பு..! | 22-03-2021 |

22 Mar 2021 9 AM

இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்!

தமிழகத்திலுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், அடுத்த மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகத்தில் 1,067 பெண்கள், 6,162 ஆண்கள் என மொத்தம், 7,232 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதிகபட்சமாக கரூரில், 97 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்து முடிந்த நிலையில், இன்று மாலை 3 மணி வரையில் வேட்புமனுவைத் திரும்ப பெற விரும்புவோர், பெற்றுக்கொள்ளலாம்.

வாக்குப்பெட்டிகள்
வாக்குப்பெட்டிகள்

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரியிலும் ஏப்ரல் 6-ம் தேதியே தேர்தல் நடைபெறுகிறது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில்தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு