இந்தியாவில் 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளுக்கு இடையே சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனப் பங்குகள் குறித்த ஆய்வறிக்கையை மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் வெளியிட்டிருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், டி.சி.எஸ்., ஹெச்.யூ.எல்., ஹெச்.டி.எஃப்.சி., இந்தியாபுல்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் இண்டஸ்இண்ட் பேங்க் போன்றவை அதிக வருமானம் கொடுத்த நிறுவனப் பங்குகளாக இருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஏழு ஆண்டுகள் எந்த ஏற்றமும் இல்லாத நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த ஐந்தாண்டில் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு ரூ.5.6 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் அதிகச் செல்வம் சேர்த்த முதல் 10 நிறுவனங்களில் ஐந்து, நிதிச் சேவை துறையைச் சேர்ந்தவை. இந்தியாபுல்ஸ் வென்ச்சர்ஸ் ஐந்தாண்டு காலத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 78% வருமானம் தந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டாப் 10 நிறுவனப் பங்குகளில் 2014-ம் ஆண்டில் ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தால், 2019-ல் ரூ.1.1 கோடியாகப் பெருகியிருக்கும்!
வேகமாக வளர்ந்த டாப் 10 நிறுவனப் பங்குகளில் 2014-ம் ஆண்டில் ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது 2019-ல் ரூ.1.1 கோடியாகப் பெருகியிருக்கும். அதாவது, ஆண்டுக்குச் சராசரியாக 61% வருமானம் கிடைத்திருக்கும். இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் அடைந்த வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் 12 சதவிகிதம் மட்டுமே. பங்குச் சந்தையில் நல்ல பங்குகள் தரும் வருமானத்தைப் போல எதிலும் கிடைக்காது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்!