Published:Updated:

‘இலக்கில்லா விமானப் பயணம்!’

‘இலக்கில்லா விமானப் பயணம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘இலக்கில்லா விமானப் பயணம்!’

இலக்கு

‘இலக்கில்லா விமானப் பயணம்!’

இலக்கு

Published:Updated:
‘இலக்கில்லா விமானப் பயணம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘இலக்கில்லா விமானப் பயணம்!’
இலக்கு எதுவும் இல்லாமல் பயணங்கள் இருக்க முடியுமா? `முடியும்' என்கிறது தற்போது டிரெண்டாகிவரும் `ஃப்ளைட் டு நோவேர்' (Flight to Nowhere) கான்செப்ட்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா காலத்தில் `நியூ நார்மல்’ எனப்படும் புதிய வாழ்க்கைமுறைக்கு மக்கள் பழகிவருகிறார்கள். கொரோனா பரவ முக்கியக் காரணங்களுள் விமானப் பயணம் முதன்மை யானதாகக் கருதப்படுகிறது. விமானப் பயணங்களை உலகின் பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துவிட்டன. உள்நாட்டு விமானப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பவர்களைத் தாயகம் அழைத்து வருவது போன்ற வற்றுக்கு மட்டும் அனுமதி இருக்கிறது.

இந்த அசாதாரண சூழலால் சர்வதேச அளவில் விமான நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக் கின்றன. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான குவான்டாஸ் (Qantas) ஏர்லைன்ஸுக்கு ஆகஸ்ட் வரையிலான காலாண்டில் 2 பில்லியன் அமெரிக்க டாலரும், தைவானின் ஈவா ஏர்வேஸ்-க்கு (Eva Airways) 20 மில்லியன் அமெரிக்க டாலரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சுற்றுலாத் துறையும் கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

‘இலக்கில்லா விமானப் பயணம்!’

இந்தநிலையில், நெருக்கடி நிலையை ஓரளவுக்குச் சமாளிக்கும்விதமாக `ஃப்ளைட் டு நோவேர்’ (Flight to Nowhere) என்ற பெயரில் விமானங்களை இயக்கத் தொடங்கியிருக்கின்றன விமான நிறுவனங்கள். அதென்ன ஃப்ளைட் டு நோவேர்?

இந்த வகை விமானங்களின் பிரதான இலக்கே சுற்றுலா மட்டும்தான். இதில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வானில் பறக்கும் விமானங்கள், புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களை உயரத்திலிருந்து கண்டுகளிக்கும் வாய்ப்பைப் பயணிகளுக்கு வழங்குகின்றன. மிகவும் தாழ்வாக, ஏறக்குறைய 4,000 அடி உயரத்தில் பறந்தபடி, கழுகுப் பார்வையில் புகழ்பெற்ற இடங்களைப் பார்வையிடும் புதிய அனுபவத்தை இந்தவகைப் பயணங்கள் வழங்குகின்றன. சில மணி நேரப் பயணத்துக்குப் பின்னர் புறப்பட்ட இடத்திலேயே பயணிகள் இறக்கிவிடப்படுவார்கள். இதிலென்ன த்ரில்... மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா... என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

இதற்கு விமான நிறுவனங்கள் பாசிட்டிவ்வாக பதில் சொல்கின்றன. `எங்களின் பிரதான வாடிக்கையாளர்களின், பயண ரசிகர்களின் நீண்டநாள்களாக விமானத்தில் செல்ல முடியாத ஏக்கத்தை இதன் மூலம் தீர்த்துவைக்கிறோம். அதேபோல், புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களை இதுவரை பார்த்திராத புதிய கோணத்தில் வானில் இருந்தபடியே பார்க்கும் பரவச அனுபவத்தைப் பெற மக்களிடம் ஆர்வம் இருக்கிறது’ என்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம்... ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் விமான நிறுவனத்தின் ஏழு மணி நேர `ஃப்ளைட் டு நோவேர்’ விமானப் பயணம் குறித்த அறிவிப்பு! அது வெளியாகி, முதல் 10 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. சிட்னியிலிருந்து அக்டோபர் 10-ம் தேதி புறப்பட்ட அந்த விமானப் பயணத்தில் சுற்றுலாத் தலங்களைப் புதிய கோணத்தில் ரசித்து மகிழ்ந்திருக்கிறார்கள் பயணிகள். பலர் குடும்பத்தோடு அந்தப் பயணத்தில் பங்கேற்று, விடுமுறைக்குச் சுற்றுலா சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தைவானின் ஈவா ஏர், கொரியாவின் ஏர் பூஸான் போன்ற நிறுவனங்களும் `ஃப்ளைட் டு நோவேர்’ விமானங்களை இயக்கத் தொடங்கியிருக்கின்றன. `இதை நோ டெஸ்டினேஷன் ஃப்ளைட்ஸ்’ என்றும் அழைக்கிறார்கள்.

‘இலக்கில்லா விமானப் பயணம்!’

இதற்கு எதிர்ப்புகளும் ஒருபுறம் எழுந்திருக்கின்றன. விமானப் பயணத்தின்போது உமிழப்படும் கார்பன் அளவு அதிகம் என்று குறிப்பிடும் சுற்றுச்சூழல் அமைப்புகள், `சுற்றுலாவை மட்டுமே பிரதானமாகக் கொண்டி ருக்கும் இந்தத் திட்டம் அவசியமற்றது’ என்கின்றன. சிங்கப்பூரில் கார்பன் உமிழ்வை 2050-ம் ஆண்டுக்குள் முழுமையாகக் குறைக்கும் நோக்கோடு செயல்படும் எஸ்.ஜி சுற்றுச்சூழல் பேரணி (SG Climate Rally) என்ற அமைப்பு, `கார்பன் உமிழ்வு அதிகமான பயணத்தை நல்லதொரு காரணம் எதுவுமே இல்லாமல் ஊக்குவிப்பது சரியா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

இந்தியாவில் என்ன நிலை?

ஏர் இந்தியா நிறுவனம் இந்தத் திட்டத்துக்கு சாதகமான அம்சங்களை ஆய்வு செய்துவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம். அப்போது சென்னை, கோவை, மதுரை என நமது நகரங்களைக் கழுகுப் பார்வையில் 4,000 அடி உயரத்தில், வானத்தில் வட்டமிட்டபடியே பார்த்து மகிழும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம்.