முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும், பணத்தில் குறைந்தபட்சம் 65%, மாறுபடும் வட்டி விகித ஆவணங்களில் (Floating Rate Instruments) முதலீடு செய்யும் திட்டம் ‘ஃப்ளோட்டர் ஃபண்ட்’ எனப்படும்.
இது கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு வகையாகும். இது ஓப்பன் எண்டட் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். அதாவது, இதில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை முதலீடு செய்யலாம்; எப்போது வேண்டுமானாலும் யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கிக்கொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நியாயமான வருமானம்..!
இந்த ஃபண்டின் நிதி மேலாளர்கள், முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தைக் கொடுக்க, வட்டி விகிதங்களின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப முதலீடு செய்கிறார்கள். கடன் சந்தையில் வட்டி விகிதம் உயரும்போது, ஃப்ளோட்டர் ஃபண்டுகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஃபண்டுகள் ஆண்டுக்கு சராசரியாக 9% வருமானம் தந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஃபண்டுகள் ஆண்டுக்குச் சராசரியாக 8% வருமானமும், மூன்றாண்டுகளில் சராசரியாக 8% வருமானமும் கொடுத்திருக்கின்றன. ஓராண்டில், டாப் ஃபண்டுகள் 9% - 11% வரை வருமானம் தந்திருக்கின்றன. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட இந்த ஃபண்டுகளின் வருமானம் அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மாற்றாக இந்த ஃபண்ட் முதலீட்டைத் தேர்வு செய்யலாம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSயூனிட்டுகளை மூன்றாண்டுகள் வைத்திருந்து விற்கும்பட்சத்தில், பணவீக்க விகித சரிகட்டல் (இண்டக்சேஷன்) சலுகைக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும். அந்த வகையில், இந்த ஃபண்டுகள் மூலமான வருமானம் வரிக்குப் பிந்தைய நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட்டை விட ஓரிரு சதவிகிதம் அதிகமாக இருக்கக்கூடும். இது, ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீட்டு வழிகளைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான தேர்வாக உள்ளது.

குறைவான ஏற்ற இறக்கம்..!
மற்ற கடன் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, ஃப்ளோட்டர் ஃபண்ட் குறைந்த ஏற்ற இறக்கத்தைக் கொண்டுள்ளன. ஃப்ளோட்டர் ஃபண்டுகள் சீரான முறையில் நியாயமான வருமானத்தை வழங்குவதைக் காணலாம். இந்த ஃபண்டுகளிலுள்ள கடன் ஆவணங்களின் தரமானது குறுகியகால ஃபண்டுகள் மற்றும் லிக்விட் ஃபண்டுகளை ஒத்ததாகும்.

ஆவரேஜ் மெச்சூரிட்டி எனும் கடன் பத்திர சராசரி முதிர்ச்சிக் காலம் வரை ஃப்ளோட்டர் ஃபண்டின் செயல்திறனைப் பெரிதும் பாதிக் காது. காரணம், இந்த ஃபண்டில் ஃப்ளோட்டிங் கூப்பன் விகிதத்தைக் கொண்ட கடன் ஆவணங் களில் முதலீடு செய்யப்படுவது கவனிக்கத்தக்கது!