Published:Updated:

`அதிகாரிகள் வேலையைச் சரியாகச் செய்திருந்தால் இழப்பு ஏற்பட்டிருக்காது!’ - டெல்டா விவசாயிகள் கண்ணீர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாழைத்தோட்டத்தில் சூழ்ந்த தண்ணீர்
வாழைத்தோட்டத்தில் சூழ்ந்த தண்ணீர்

அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் கொஞ்சம்கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. எங்களது இழப்புக்குக் காரணம் அதிகாரிகளே! - டெல்டா விவசாயிகள் ஆவேசம்.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக டெல்டா மாவட்டங்களில் அடைமழை பெய்துவருகிறது. கடந்த இரண்டு நாள்கள் பெய்த கனமழையால் திருச்சி, பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்கள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன.

விளைநிலத்தைச் சூழ்ந்த தண்ணீர்
விளைநிலத்தைச் சூழ்ந்த தண்ணீர்

நீர் செல்வதற்கான வடிகால் வசதி இல்லாததால் வாழை, நெல் பயிரிடப்பட்ட வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் சுமார் 800 ஏக்கர் அளவில் நெல், வாழைமரங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதிகளில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதேபோல், அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட நெற்பயிர்கள், வாழைப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

புதர் மண்டிக்கிடக்கும் நீர்நிலைகள்
புதர் மண்டிக்கிடக்கும் நீர்நிலைகள்

கடந்த மாதம் நடவு செய்த நெற்பயிர்கள் தொடர்மழையால் அழுகிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதிகளில் மழைநீர் குளம்போல் காட்சியளிக்கிறது. வீடுகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் மக்கள் போராடிவருகின்றனர்.

வீடுகளைச் சூழ்ந்த நீர்
வீடுகளைச் சூழ்ந்த நீர்

இது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசியபோது, ``வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. பல இடங்களில் நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் வெள்ளநீர் அனைத்து வயல்களிலும் புகுந்துவிட்டது. வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாரி புனரமைக்க வேண்டும். பல கிராமங்களில் வடிகால் வாய்க்கால்கள் புதர்மண்டிக் கிடக்கின்றன.

விளைநிலங்கள்
விளைநிலங்கள்

அவற்றையும் தூர்வார வேண்டும் என்று ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் கொஞ்சம்கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. எங்களது இழப்புக்குக் காரணம் அதிகாரிகளே. அவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்திருந்தால், நாங்கள் இந்த இழப்பைச் சந்திருக்க மாட்டோம்" என்று ஆதங்கப்படுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு