Published:Updated:

கொரோனா:` இந்த வருஷ திருவிழா வருமானமும் போச்சு' - உதவித் தொகை கோரும் நாட்டுப்புறக் கலைஞர்கள்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கரகாட்டம், வில்லிசை, மேளம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு படிப்படியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு... எப்படிப் போக்குவது?

கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் ஏற்படும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்துள்ள தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருவிழாக்காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் அனைத்து மத நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கோயிலை நம்பியிருக்கும் நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறன்றனர்.

ஊர்வலமாக வந்த கலைஞர்கள்
ஊர்வலமாக வந்த கலைஞர்கள்

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில்களில் நடக்கும் திருவிழாக்கள் தடைப்பட்டுள்ளதால், கோயில் விழாக்களை நம்பி வாழும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கிறது. அதனால் தங்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையை வழங்க வேண்டும் என்று நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக தென் மண்டல அனைத்து கலைச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் நிர்வாகிகள், ``கொரோனா ஊரடங்கு காலத்தில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2000 போதுமானதாக இல்லை.

கரகாட்டக் கலைஞர்கள்
கரகாட்டக் கலைஞர்கள்

திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளில் தளர்வு செய்து கட்டுப்பாடுகளுடன் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும். மூன்று மாதங்களில் கிடைக்கும் வருவாயை வைத்து நாங்கள் வருடம் முழுவதும் சமாளித்து வந்த நிலையில், எங்களின் மொத்த வருமானம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை அரசு கவனத்தில் கொண்டு உதவி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்கள்.

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், நெல்லை வண்ணாரப்பேட்டை தீப்பாச்சியம்மன் கோயிலில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.

நாட்டுப்புறக் கலைஞர்கள்
நாட்டுப்புறக் கலைஞர்கள்

நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொழில்சார்ந்த ஒப்பனையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு