Published:Updated:

“போட்டி இருந்தால்தான் தரம் இருக்கும்!”

பால் விற்பனை விவகாரம் எதிரொலிக்கும் குரல்கள்...

பிரீமியம் ஸ்டோரி
கடந்த 27.05.20 தேதியிட்ட ஜூ.வி இதழில் `மது வேண்டாம்... பால் விற்பனையே போதும்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

‘டாஸ்மாக் வருமானத்துக்கு மாற்றாக, தமிழக அரசு பால் விற்பனையைக் கையிலெடுத்தால் ஆண்டுக்கு 38,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம்’ என்ற கோணத்தில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரையில் குஜராத் மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான அமுல் நிறுவனத்தின் வருமானத்தை உதாரணம் காட்டிப் பேசியிருந்தார் சமூக ஆர்வலர் முழுநிலவன்.

இந்த நிலையில்தான் பொருளாதார வல்லுநர்கள் சிலர், “மது விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் அந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட பல யோசனைகளை வரவேற்கிறோம். அதேசமயம், பால் விற்பனையை அரசு மட்டுமே நடத்துவது ஆபத்தானது. மேலும், அந்தக் கட்டுரையில் சில தரவு பிழைகளும், எண்ணிக்கைப் பிழைகளும் இருக்கின்றன’’ என்று சுட்டிக்காட்டினார்கள்.

“டாஸ்மாக் வருமானத்துக்கு நிகராக, பால் விற்பனையில் தமிழக அரசால் வருவாய் ஈட்ட முடியாது என்பதுதான் உண்மை. குஜராத் மாநிலத்தின் கூட்டுறவு பால் நிறுவனமான அமுல் நிறுவனத்தின் 2018-2019-ம் ஆண்டு மொத்த விற்பனை 32,960 கோடி ரூபாய். இது விற்றுமுதல் (turn over) மட்டுமே. லாபம் அல்ல.

பால் கொள்முதலுக்கான செலவு, ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் போக, 52.8 கோடி ரூபாய்தான் அந்த நிறுவனத்துக்கு நிகர லாபமாகக் கிடைத்திருக்கிறது. டாஸ்மாக் மது விற்பனையிலும் எல்லாச் செலவுகளும் போக, மிகவும் குறைவான தொகைதான் நிகர லாபமாகக் கிடைக்கும். அதேசமயம், மதுவுக்கு விதிக்கப்படும் வரி மூலம் தமிழக அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. உதாரணமாக, 2016-17-ம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனத்தின் மொத்த விற்பனை 31,243 கோடி ரூபாய். அது விற்றுமுதல். செலவுகள் போக, அந்த ஆண்டு லாபம் 25.23 கோடி ரூபாய் மட்டுமே. அதேசமயம் மதிப்புக்கூட்டப்பட்ட வரி மூலம் தமிழக அரசுக்கு 14,574 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

பால்
பால்

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். அதே சமயம், `பால் விற்பனையில் ஆவின் மட்டுமே ஈடுபட வேண்டும்’ எனச் சொல்வது ஏற்புடையது அல்ல. இதனால் மக்களுக்கும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பின்னடைவு ஏற்படும். பால் விற்பனையில் ஆவினுடன் தனியார் பால் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும். போட்டி இருந்தால்தான் அங்கு தரமும், நியாயமான விலையும் கிடைக்கும்.” என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு