Published:Updated:

மகேஸ்வரி குடும்பத்துக்கே குண்டாஸ்... சொத்துகள் அரசு உடைமையாக்கப்படும்...

மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
மகேஸ்வரி

ஜூ.வி வெளியிட்ட கட்டுரை... ஆக்‌ஷன் எடுத்த காவல்துறை!

மகேஸ்வரி குடும்பத்துக்கே குண்டாஸ்... சொத்துகள் அரசு உடைமையாக்கப்படும்...

ஜூ.வி வெளியிட்ட கட்டுரை... ஆக்‌ஷன் எடுத்த காவல்துறை!

Published:Updated:
மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
மகேஸ்வரி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கால் நூற்றாண்டுக்காலமாக சாராய சாம்ராஜ்ஜியத்தை நடத்திவந்த மகேஸ்வரி குறித்து, 13.04.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘அடங்காத மகேஸ்வரி... கைகட்டி நிற்கும் போலீஸ்!’ என்ற தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இதழ் வெளியான ஏப்ரல் 9-ம் தேதி காலையிலேயே கட்டுரையின் தாக்கம், திருப்பத்தூர் மாவட்டக் காவல்துறையை உலுக்கியெடுத்தது.

வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா உத்தரவின்பேரில், திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனே மகேஸ்வரியைக் கைதுசெய்ய, களமிறங்கினார். போலீஸாரின் நகர்வுகளை தெரிந்துகொண்ட மகேஸ்வரி, குடும்பத்தோடு திருவண்ணாமலை மாவட்டத்துக்குத் தப்பிச் சென்றார். ஆனால், செல்போன் சிக்னலை வைத்து, மகேஸ்வரி பதுங்கியிருக்கும் இடத்தை நெருங்கியது எஸ்.பி டீம். போலீஸ் நெருங்கும் தகவலை ‘மாமூல் காக்கிகள்’ மூலம் அறிந்துகொண்ட மகேஸ்வரி, செல்போனைத் தூக்கியெறிந்துவிட்டு, திருவண்ணாமலை நகரிலிருக்கும் நளினி என்ற பெண்ணின் வீட்டில் தஞ்சமடைந்தார்.

மகேஸ்வரி குடும்பத்துக்கே குண்டாஸ்... சொத்துகள் அரசு உடைமையாக்கப்படும்...

அப்போதும் விடாத போலீஸ் டீம், ஏப்ரல் 9-ம் தேதி நள்ளிரவு அந்த வீட்டைச் சுற்றிவளைத்தது... ஏற்கெனவே ஒருமுறை போலீஸ் சுற்றிவளைத்தபோது மகேஸ்வரியின் ஆட்கள் போலீஸாரைத் தாக்கியிருக்கிறார்கள். இதனால், இம்முறை “தப்பிக்க நினைத்து ஆயுதங்களை எடுத்தால், என்கவுன்ட்டர் செய்யவேண்டியிருக்கும்” என்று போலீஸார் எச்சரித்ததால், மகேஸ்வரி குடும்பத்தோடு சரணடைந்தார். இதையடுத்து மகேஸ்வரி, அவரின் கணவர் சீனிவாசன், மகன்கள் சின்ராசு, தேவேந்திரன், மகேஸ்வரியின் அக்காள் மகள் உஷா, சீனிவாசனின் தங்கை மகன் மோகன் மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நளினி ஆகிய ஏழு பேரையும் கைதுசெய்தது போலீஸ்.

இவர்கள் அனைவரையும் வாணியம்பாடிக்கு அழைத்துவரும் வழியில் சின்ராசுவும் மோகனும் தப்பி ஓட முயன்று தடுக்கி விழுந்தனர். இதில், சின்ராசுக்குக் கையிலும், மோகனுக்கு காலிலும் முறிவு ஏற்பட்டது. இவர்களுக்கு ‘கட்டு’ போட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த போலீஸ், ஏழு பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தது. ஜூ.வி கட்டுரையின் எதிரொலியால், ஒரே நாளில் மகேஸ்வரியின் கூட்டம் கூண்டோடு பிடிக்கப்பட்ட சம்பவம், அவரது கட்டுப்பாட்டிலிருக்கும் நேதாஜி நகர், இந்திரா நகர், காமராஜர் நகர், லாலா ஏரிப் பகுதி மக்களை நிம்மதி அடையவைத்திருக்கிறது.

மகேஸ்வரி குடும்பத்துக்கே குண்டாஸ்... சொத்துகள் அரசு உடைமையாக்கப்படும்...

கைது நடவடிக்கை குறித்துப் பேசிய எஸ்.பி பாலகிருஷ்ணன், “ஏற்கெனவே மகேஸ்வரியின் குடும்பத்தினர், உறவினர்கள் என 22 பேரை கள்ளச்சாராய வழக்கில் கைதுசெய்திருக்கிறோம். இப்போது மகேஸ்வரி உட்பட ஏழு பேர் என மொத்தம் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மகேஸ்வரியின் குடும்பத்தினர் அனைவர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த எஸ்.பி விஜயகுமார், மகேஸ்வரியின் 40 விதமான அசையா சொத்துகளை அரசு உடைமையாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இப்போது மகேஸ்வரி கூடுதலாகச் சேர்த்திருக்கும் சொத்துகளையும் கணக்கிட்டு அனைத்தையும் அரசு உடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி, மகேஸ்வரியின் ஆட்களால் யாருக்கும் அச்சுறுத்தல் ஏற்படாது” என்றார்.

மாவட்ட எஸ்.பி களமிறங்கினால்தான் மகேஸ்வரியைக் கைதுசெய்ய முடியுமென்றால் காவல் நிலையங்கள் எதற்கு? ஆனாலும், நேரடியாகக் களமிறங்கிய எஸ்.பி-க்கு பாராட்டுகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism