Published:Updated:

வேலையில என்ன ஆம்பள வேலை, பொம்பள வேலை?

ஃபுட் டெலிவரியில் பறக்கும் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஃபுட் டெலிவரியில் பறக்கும் பெண்கள்

ஃபுட் டெலிவரியில் பறக்கும் பெண்கள்

வேலையில என்ன ஆம்பள வேலை, பொம்பள வேலை?

ஃபுட் டெலிவரியில் பறக்கும் பெண்கள்

Published:Updated:
ஃபுட் டெலிவரியில் பறக்கும் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஃபுட் டெலிவரியில் பறக்கும் பெண்கள்

ஆண்களுக்கான துறைகள் என ஒதுக்கப்பட்டவற்றில் எல்லாம் இப்போது பெண்களின் கால்தடங்கள் பதிந்துவருகின்றன. அந்த வகையில், ராணுவத்தில் சேர்வது மட்டுமல்ல, தினசரி வாழ்க்கைக்கான வேலைவாய்ப்புகளிலும் பெண்கள் மிகுவது அவசியமான முன்னேற்றம். அப்படி, உணவு டெலிவரி சேவையில் ஆண்களையே பார்த்த நமக்கு, அதிகரித்து வரும் பெண்களின் புழக்கம் நிமிர்ந்துபார்க்க வைக்கிறது. ‘டெலிவரி பாய்’ என்ற வார்த்தை பிரயோகத்தை மாற்றி கலக்கிக்கொண்டிருக்கும் ‘டெலிவரி கேர்ள்ஸ்’ பேசுகிறார்கள் இங்கு...

வேலையில என்ன ஆம்பள வேலை, பொம்பள வேலை?

கலைச்செல்வி, ஸ்ரீரங்கம்

“ரெண்டு வருஷமா ‘ஸொமேட்டோ’ல டெலிவரி பார்ட்னரா வேலைபாக்குறேன். இதுக்கு முன்னாடி டிராவல் ஏஜென்சி நடத்துனேன். அதுல நான்தான் ஓனர். அது கைக்கொடுக்கல. இந்த வேலைதான் என்னைத் தூக்கிவிட்டுச்சுனு சொல்லலாம். கஷ்டமா இல்லையானு சிலர் கேப்பாங்க. ஈஸியான வேலைனு ஒண்ணு இருக்கா என்ன உலகத்துல? கஸ்டமர்ஸ் எக்ஸ்ட்ராவா ஒரு ‘தேங்க்ஸ்’ சொல்லி டெலிவரியை வாங்கினா, `ஹேப்பி' ஆகிடுவேன். சில பேர் ஆர்டர் பண்ணும்போது ‘பசிக்குது’னு சொல்லிட்டா, வழியில எங்கேயும் நேரம் வீணாக்காம சிட்டா பறந்துடுவேன். ‘சீக்கிரம் சாப்பிடுங்க...’னு சொல்லிக் கொடுக்கும்போது, ‘நீங்க சாப்பிட்டீங்களா?’ன்னு சிலர் கேட்கும்போது வயிறு `ஃபுல்' ஆகிடும். ஒரு கஸ்டமர் தன் மனைவியைக் கூப்பிட்டு, ‘இங்க பாரு ஒரு பொண்ணு டெலிவரி பண்றாங்க’னு சொல்ல, அவங்க என்னை பிளஸ் பண்ணி அனுப்பினாங்க. நைட் 11 மணி வரை டெலிவரி பண்ணுவேன். ‘லேட் நைட் ஆர்டர்னா கேன்சல் பண்ணிக்கோங்களேன்’னு ஆபீஸ்லகூட சொல்வாங்க, மறுத்துடுவேன். வழிகாட்டி, கூகுள் மேப்தான். கணவர், பையன்னு எல்லாரும் சப்போர்ட் பண்றாங்க. கலக்குவோம்!”

வேலையில என்ன ஆம்பள வேலை, பொம்பள வேலை?

பாத்திமா ஜாஹிர்ஹூசேன், திருச்சி

“கொஞ்ச வருஷம் முன்னாடி நான் ஒரு கல்லூரி விரிவுரையாளர். இப்போ ‘ஸொமெட்டோ’ல டெலிவரி பண்றேன். எம்.ஏ தமிழ் இலக்கியம், எம்.ஃபில் முடிச்சிட்டு, திருச்சியில ஒரு தனியார் கல்லூரியில் வேலைபார்த்தேன். கைக்குழந்தையை கவனிக்க முடியாம வேலையைவிட்டுட்டேன். மீண்டும் வேலையில சேரப் போனப்போ கொரோனா லாக்டௌன். குடும்பத்தைக் கவனிக்க ஒருத்தரோட வருமானம் போதலை, இந்த வேலையில சேர்ந்துட்டேன். ஒட்டுமொத்தக் குடும்பமும் எனக்கு எதிரா நின்னாலும், என் கணவர் எனக்கு சப்போர்ட் பண்ணினார். ஆரம்பத்துல தெருவுல இருக்குறவங்களுக்குத் தெரிஞ்சிடக் கூடாதுனு யூனிஃபார்மை வண்டிக்குள்ள ஒளிச்சு வெச்சுட்டுக் கிளம்புவேன். இப்போ தெளிவு வந்துடுச்சு. ‘பொண்ணுக்கு இதுலாம் தேவையா? வேற வேலையைத் தேடிக்க வேண்டியதுதானே’னு சொல்லி என்னை ஏளனமா பார்க்குறவங்க இருக்காங்க. செய்யுற வேலைதான் தெய்வம். என் காலேஜ் பக்கம் டெலிவரி எடுத்துட்டுப் போகும்போதுகூட ஒரு புன்னகையோட கடந்துடுவேன்.’’

வேலையில என்ன ஆம்பள வேலை, பொம்பள வேலை?

சித்ரா, திருச்சி

‘`மூணு வருஷமா ‘ஸொமேட்டோ’ல வேலை பார்க்குறேன். வீல் மேல வேலை, காத்து முகத்துல அடிக்க டூவீலர்ல போயிட்டே இருக்கேன். எனக்குப் பிடிச்சிருக்கு. சிரமம்னு குறிப்பிட்டு சொல்ற மாதிரி எதுவும் இல்ல. சில நேரம் நைட் 9.30 மணிக்கு மேல ஆர்டர் வரும்போது, அது 25 கி.மீ தூர டெலிவரியா இருக்கும். நான் வீட்டுக்கு வர 12 மணிகூட ஆயிடும். அதெல்லாம் வேலையில ஒரு பகுதிதான். ஆனா, ஹோட்டல் ரூம்ல தங்கியிருக்குற சிலர் நைட் சாப்பாடு ஆர்டர் பண்ணும்போது, ‘ரூமுக்கு வந்து தாங்க’னு கேட்பாங்க. நான் என் கம்பெனியில பேசுவேன். அவங்க கஸ்டமர்கிட்ட பேசி கீழ வந்து வாங்கிக்க சொல்லுவாங்க. ஒருவேளை கஸ்டமர் முடியாதுனு சொல்லிட்டா, ஆர்டரை கேன்சல் பண்ணிருவாங்க. அந்த வகையில எங்க கம்பெனி என்னை நல்லா பார்த்துக்குறாங்க.’’

வேலையில என்ன ஆம்பள வேலை, பொம்பள வேலை?
வேலையில என்ன ஆம்பள வேலை, பொம்பள வேலை?

நாகலெட்சுமி, ஸ்ரீரங்கம்

‘`47 வயசாகுது. கடந்த மூணு வருஷமா ‘ஊபர்’, ‘ஸொமேட்டோ’ல டெலிவரி வேலை பார்க்குறேன். லீவு அதிகம் போடமாட்டேன். பெட்ரோல் செலவெல்லாம் போக மாசம் 20,000 ரூபாய் கிட்ட நிக்கும். சுத்தி இருக்குறவங்க, ‘இது ஆம்பளைங்க வேலை, உனக்கு சரிப்படுமா?’னு கேக்குறது தொடர்ந்துட்டேதான் இருக்கு. வேலையில என்ன ஆம்பளைங்க வேல, பொம்பளைங்க வேலயெல்லாம்? நம்மாலயும் எல்லா வேலையும் பார்க்க முடியும். இந்த வேலையில எனக்கு கசப்பான அனுபவம்னு எதுவும் இல்ல. நான் இந்த வேலையில சேர்ந்தப்போ, நாலு பொண்ணுங்கதான் இருந்தோம். இப்போ எண்ணிக்கை பல மடங்காகியிருக்கு. நிதானமா வண்டி ஓட்டணும், பக்குவமா கஸ்டமர்களை கையாளணும்... அவ்ளோதான். நீங்களும் ஃபுட் டெலிவரி வேலைக்கு வரலாம் பொண்ணுங்களா!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism