இந்தத் திரைப்படம் (Ford v Ferrari) வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் இருந்தாலும்கூட இது குறித்து எழுதுவதும் விவாதிப்பதும் முக்கியமான ஒன்று. ஐரோப்பாவில் நடக்கும் 24 மணி நேர கார் ரேஸில் (Le Mans) வெற்றி அடைவது அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனமா அல்லது இத்தாலியைச் சேர்ந்த ஃபெராரி நிறுவனமா என்பதுதான் கதை.

மேலோட்டாகப் பார்க்கும்போது, இது கார் ரேஸ் குறித்த படம்போலத் தெரிந்தாலும், இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் மறைமுக யுத்தம்தான் பிரதானமாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருப்பதால், 60-களின் அமெரிக்கத் தொழில் உலகத்தை நம்மால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிகிறது.

1960 என்பது அமெரிக்காவில் ‘பேபி பூமர்’கள் (இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிறந்தவர்கள்) அதிகமாக இருந்த காலம். அப்போது அமெரிக்காவில் அதிக அளவில் இளைஞர்கள் இருந்தார்கள். அமெரிக்கா வளர்ந்து வந்தது. இளைஞர்களிடம் பணம் இருந்தது. அமெரிக்க நிறுவனங்களுக்கு இளைஞர்கள் முக்கியமானவர்களாக இருந்தார்கள். ஆனால், ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை மட்டும் உயரவில்லை. காரணம், இளைஞர்களுக்கு ஏற்ற வாகனமாக ஃபோர்டு இல்லை. அதன் வடிவமைப்பு, ஸ்டைல், வேகம் என எதுவும் இளைஞர்களுக்கு ஏற்றதாக இல்லை.

அதனால் இளைஞர்களுக்கேற்ற வாகனத்தை எப்படி உருவாக்குவது என்பது குறித்து ஃபோர்டு நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்க ஆட்டோமொபைல்துறையின் தவிர்க்க முடியாத நபராகப் பின்னாளில் மாறிய லீ ஐயகோகா (Lee Iacocca - இவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் காலமானார்) அப்போது ஃபோர்டு நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் தலைவராக இருந்தார்.

பிசினஸில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் கார்களை விரும்பும் நபர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கக்கூடும்.

‘இளைஞர்களுக்கேற்ற வடிவமைப்பாக ஃபோர்டு இல்லை. மேலும், இளைஞர்கள் வெற்றியை விரும்புகிறார்கள். ஆனால், நம்மிடம் வெற்றிக்கான அடையாளங்கள் ஏதுமில்லை. ரேஸ் வாகனங்களில் ஃபெராரி முதலிடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில், அந்த நிறுவனம் சிக்கலில் இருக்கிறது. அதனால் ஃபெராரி நிறுவனத்தை வாங்கலாம்’ என்று பரிந்துரை செய்தார்.

ஆனால், ஃபோர்டு ஒரு நாளில் தயாரிக்கும் வாகனத்தை ஃபெராரி ஓராண்டு முழுவதும் (ஃபெராரி நிறுவனத்தில் இயந்திரங்களால் அல்லாமல் மனிதர்களால் கார் தயாரிக்கப்படுகிறது) தயார்செய்கிறது. ஃபெராரி போன்ற ஒரு சிறிய நிறுவனத்தை வாங்குவதால் எந்தப் பயனும் இல்லை எனப் பலவித கருத்துகளும் ஏளனப் பேச்சுகளும் விவாதத்தில் வந்தன. இருந்தாலும், ஃபெராரி நிறுவனத்தை வாங்க இரண்டாம் ஹென்றி ஃபோர்டு அனுமதி அளித்தார்.

நிறுவனத்தை வாங்க லீ ஐயகோகா தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தச் சென்றது. ஆனால், நிறுவனத்தை வாங்குவதில்/விற்பதில் இரு நிறுவனங்களுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதற்கு இரு காரணங்கள் சொல்லப்பட்டன.

முதலாவது, ஃபெராரி நிறுவனத்தின் கார் பந்தயப் பிரிவின் கட்டுப்பாடு ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்தது. அடுத்தது, ஃபியட் நிறுவனம் அதிக விலை கொடுக்க முன்வந்தது. இதைவிட முக்கியமான சிக்கல், ஃபெராரி நிறுவனத்தின் தலைவர் என்சோ ஃபெராரி, ஃபோர்டு தலைவரை அவமானப்படுத்துவதுபோலப் பேசிவிட்டார். ‘‘உங்கள் நிறுவனத்தின் தலைவர் ஹென்றி ஃபோர்டு அல்ல; அவர் இரண்டாம் ஹென்றி ஃபோர்டு என ஞாபகப்படுத்துங்கள்’’ என்று ஐயகோகாவிடம் கூறினார்.

இதனால் ஃபோர்டு நிறுவனமே பந்தயத்துக்கான கார்களைத் தயாரிக்கும் பிரிவைத் தொடங்கத் திட்டமிட்டது. அதுவும் 90 நாள்களில் உருவாக்கத் திட்டமிட்டது. இதற்காக ‘ஷெல்பி அமெரிக்கன்’ என்ற நிறுவனத்தை ஃபோர்டு அணுகியது. இதன் நிறுவனர் ஷெல்பி. முன்னாள் கார் பந்தய வீரர். உடல்நிலை சரியில்லாததால், கார் பந்தயத்திலிருந்து விலகி, ரேஸ் கார் தயாரிக்கும் சிறிய நிறுவனத்தை நடத்த முன்வந்தார். இவர் மூலமாக கென் மைல்ஸ் என்னும் ரேஸ் டிரைவரை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பந்தயத்துக்குச் சில நாள்களுக்கு முன்னர், கென் மைல்ஸின் செயல்பாடுகள் ஃபோர்டு உயரதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் கென் மைல்ஸ் நீக்கப்பட்டார். இறுதி நேரத்தில் டிரைவரை மாற்றியதால், ஃபோர்டு நிறுவனம் அந்தப் பந்தயத்தில் தோற்றுவிட்டது. இதைத் தொடர்ந்து யாரை டிரைவராக நியமனம் செய்தார்கள்... `லே மேன்ஸ்’ போட்டியில் 1966-ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் வெற்றி பெற்றதா, இல்லையா என்பதே படம்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபெராரி நிறுவனத்திடம் போட்டி போட்ட ஃபோர்டு, தற்போது எலெக்ட்ரானிக் கார்களுடன் போட்டி போடும் நிலையில் இருக்கிறது என்பது தற்போதைய நிஜக்கதை. வரலாற்று உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப் பட்டிருந்தா லும் படம் முழுவதும் உண்மைச் சம்பவங்கள் இல்லை என்கிற கருத்தும் இருக்கிறது. உதாரணமாக, ஒரு காட்சியில் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் ரேஸ் காரில் பயணிப்பார். ஒரு நிறுவனத்தின் தலைவர் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் ரேஸ் காரில் பயணிக்க மாட்டார். நிஜத்தில் இரண்டாம் ஹென்றி ஃபோர்டு ரேஸ் காரில் பயணம் செய்யவில்லை எனப் பல தகவல்கள் உள்ளன.

சரியான சூழ்நிலையில் சரியான நபர்கள் இணையும்போது எவ்வளவு பெரிய எதிரியையும் குறுகிய காலத்தில் வீழ்த்த முடியும் என்பதைச் சொல்வதே `ஃபோர்டு வி ஃபெராரி’ திரைப்படம்.

அதேபோல, ஃபெராரி நிறுவனத்தை விலை பேசச் சென்ற குழுவில் லீ ஐயகோகா இடம் பெறவில்லை. படத்தில் சுவாரஸ்யத்துக்காக இப்படிப் பல விஷயங்கள் சேர்க்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனாலும், ஒட்டுமொத்தமாகப் பல தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை இந்தப் படம் தொட்டிருக்கிறது. நிறுவனத்தில் உயரதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரம், தலைவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் அடுத்தகட்ட அதிகாரிகளின் ஈகோ, வெற்றிக்காக நிறுவனங்கள்/அதிகாரிகள் செய்யும் சூது, விளம்பரம் எனப் பல விஷயங்களை இந்தப் படம் தொட்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் நாடு, மொழி என எந்தப் பேதமும் இல்லை.

தவிர, 1960-களில் ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்கா எங்கு இருந்தது, ஐரோப்பிய நாடுகள் எங்கிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பிசினஸில் இருப்பவர்கள் மட்டும் அல்லாமல் கார்களை விரும்புபவர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கக் கூடும். அந்தளவுக்கு கார்கள் குறித்து டீடெயிலாக விளக்கப் பட்டிருக்கிறது. சரியான சூழ்நிலையில் சரியான நபர்கள் இணையும்போது எவ்வளவு பெரிய எதிரியையும் குறுகிய காலத்தில் வீழ்த்த முடியும் என்பதைச் சொல்வதே `ஃபோர்டு வி ஃபெராரி’ திரைப் படம்.

பிசினஸ் தொடர் பான படங்கள் ஹாலிவுட்டில் அவ்வப்போது தான் வருகின்றன. அப்படி வரும் படங்களில் பல நம்மூரில் சில நாள்களே திரையிடப்படும் நிலையில், `ஃபோர்டு வி ஃபெராரி’ எல்லோரும் பார்ப்பதற்கு ஏற்ப முக்கிய நகரங்கள் பலவற்றிலும் திரையிடப் பட்டிருக்கிறது. பிசினஸில் ஆர்வம் இருப்பவர்கள், எம்.பி.ஏ மாணவர்கள் இந்தப் படத்தை அவசியம் பார்க்கலாம்!

வாசு கார்த்தி