Published:Updated:

ஃபாரினில் பதுங்கலா? - நித்தியைச் சுற்றி அதிரவைக்கும் 'மர்மங்கள்'!

நித்தி
நித்தி

தற்போது அங்கேயிருந்துதான், 'கிரீன்டெக்' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரலையாக தன் பக்தர்களுக்கு காட்சித்தருகிறார்.

"மாடுகளை, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் என்னால் பேசவைக்க முடியும்'' என்று சவால்விட்டவர், இப்போது எங்கே இருந்துகொண்டு யூ டியூபில் பேசுகிறார் என்பதுதான் நித்தி மர்மத்தொடரின் புதிய அத்தியாயம். 'நித்தியானந்தா, பிடதி ஆசிரமத்தில் பல மாதங்களாக இல்லை' என்ற தகவல், சில மாதங்களுக்கு முன்பே கசிந்தது. இப்போது அவர் வெளிநாட்டில் பதுங்கியுள்ளதாகத் தகவல் பரவிவருகிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2n45rTT

பேட்டி, பிரசங்கம், பெருநகரங்களில் பக்தர்களுக்குத் தரிசனம் என ஏதாவது ஒரு வகையில் 'லைம்லைட்'டில் இருந்துகொண்டிருந்த நித்தியானந்தாவை, கடந்த ஓராண்டாக பக்தர்கள் எங்கேயுமே பார்க்க முடியவில்லை. பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த நித்தியானந்தா, கடந்த பல மாதங்களாக யூ டியூப், ஃபேஸ்புக் மூலமாக மட்டுமே பக்தர்களைச் சந்திக்கிறார். நேரில் சந்திப்பதேயில்லை.

தரப்பில் விசாரித்தபோது ''அவர் பயணம் செய்வதற்காக 'கேரவன்' போன்று சகலவசதிகளுடன் ஒரு வாகனம் தயார்செய்யப்பட்டுள்ளது.

நித்தியானந்தா வெளிநாடுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் பரவியது. ஆனால், எதையும் உறுதி செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக ஜூனியர் விகடன் இதழில் கழுகார் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பே எழுதியிருந்தோம். இப்போது வரும் தகவல்கள், அதை உறுதிப்படுத்துவதைப்போல் இருப்பதோடு, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் பகிரப்படுகின்றன.

ஆசிரம உள்விவகாரங்களை அறிந்த சிலரிடம் பேசினோம்... "2018-ம் ஆண்டு இறுதியில் வடமாநிலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்தவர், சில ஏஜெண்டுகள் மூலம் வெனிசுலா நாட்டுப் போலி பாஸ்போர்ட்டைப் பெற்றார். இதற்கு கோடிக்கணக்கான ரூபாய், ஹவாலா முறையில் அளிக்கப்பட்டுள்ளது. தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்ற நித்தியானந்தா, வெனிசுலா பாஸ்போர்ட் மூலம் கரீபியத் தீவுகளுள் ஒன்றான 'டொமினியன் குடியரசு' நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

தற்போது அங்கேயிருந்துதான், 'கிரீன்டெக்' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரலையாக தன் பக்தர்களுக்கு காட்சித்தருகிறார். வாரத்துக்கு ஒருமுறை காலையும் மாலையும் ஃபேஸ்புக்கில் நேரலையாக உரையாடுவதும் அங்கே உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்துதான். கடந்த ஒரு வருடமாக அவர் இந்தியாவிலேயே இல்லை. இந்தத் தகவலை மிகவும் தாமதமாகத் தெரிந்துகொண்ட கர்நாடக போலீஸார், அவரை எப்படியாவது இந்தியாவுக்குக் கொண்டுவர சில மறைமுக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்'' என்றனர்.

அதிர்ச்சிகரமான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் கேள்வி எழுப்பியதும், முதலில் பரபரப்பான நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள், பிறகு சுதாரித்துக்கொண்டு, ''அவர் சமீபகாலமாக பிடதி ஆசிரமத்தில் பக்தர்களைச் சந்திக்காமல் இருப்பது உண்மைதான். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகத்தான் சந்தித்துவருகிறார். இதற்காக, அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுவிட்டார் என்பதும், சட்டத்தின் முன் நிற்க அவர் அஞ்சுகிறார் என்பதும் சுத்தப்பொய்" என்றனர்.

நித்தி
நித்தி

நித்தியின் உறவினர் சிலர் சென்னையில் வசித்துவருகிறார்கள். அவர்கள் தரப்பில் விசாரித்தபோது ''அவர் பயணம் செய்வதற்காக 'கேரவன்' போன்று சகலவசதிகளுடன் ஒரு வாகனம் தயார்செய்யப்பட்டுள்ளது. அதில்தான் அவர் இந்தியா முழுவதும் ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவ்வப்போது எங்களிடமும் பேசுகிறார். ஆனால், என்ன காரணத்தால் பக்தர்களை நேரடியாகச் சந்திக்காமல் இருக்கிறார் என்பது தெரியவில்லை. சமீபத்தில்கூட சென்னையில் உள்ள அவரின் அத்தை ஒருவரைச் சந்திக்க வந்து சென்றார்" என்று அதிரவைத்தனர்.

- நித்தியானந்தா குறித்த அறியப்படாத பின்னணி தகவல்கள் முதல் அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை தேடும் விரிவான கவர் ஸ்டோரியை ஜூனியர் விகடனில் வாசிக்க > போலி பாஸ்போர்ட் - ஃபாரின் பதுங்கல் - யூ டியூப் சவால் - கேரவன் உலா... எங்கே நித்தி? https://www.vikatan.com/news/general-news/nithyananda-atrocities

| அனைத்து விகடன் இதழ்கள் +

2006 முதல் இன்று வரையிலான

300K சிறப்புக் கட்டுரைகள்!

> ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |

அடுத்த கட்டுரைக்கு