Published:Updated:

`அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!' -கொரோனா தொற்று அச்சத்தில் நெல்லை வனத்துறை

சோதனைச் சாவடியில் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை
சோதனைச் சாவடியில் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை

கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ள சூழலில், பொதுமக்கள் அதுகுறித்த அச்சமின்றி சுற்றுலா மையங்களுக்கு கூட்டமாகச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துவருவதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர், தீவிர பரிசோதனைக்குப் பின்னரே சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா தீவிரத்தை உணராத பொதுமக்களில் சிலர், முகக்கவசம்கூட அணியாமல் வாகனங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இளைஞர்கள் கொரோனா தீவிரத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனிமனித இடைவெளியைப் பற்றிய கவலையின்றி அவர்கள் செயல்படுகிறார்கள்.

வாசிப்பு, ஹிட்ச்காக் படம், குற்றாலம் பற்றிய புதிய நாவல்... படைப்பாளிகளின் `க்வாரன்டைன்' பிளான்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஊடரங்கை கடைபிடித்துவரும் நிலையில், ஒரு சிலர் இதை விடுமுறைக் கொண்டாட்டமாகக் கருதி சுற்றுலா மையங்களுக்குச் செல்கிறார்கள். 

சுற்றுலா மையமான குண்டாறு அடைக்கப்பட்டது.
சுற்றுலா மையமான குண்டாறு அடைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் அங்கு யாரையும் குளிக்க காவல்துறை அனுமதிக்கவில்லை. அதனால் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களை நோக்கி மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. கடனா அணை, ராமநதி அணை ஆகிய இடங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள்.

இரு டாக்டர்களுக்கு கொரோனா; தப்பாத ஆட்சியர் அலுவலகம்! -அதிர்ச்சிகொடுத்த நெல்லை நிலவரம்

குண்டாறு அணை மற்றும் அதன் மேல்பகுதியில் இருக்கும் அருவிகளுக்கும் பொதுமக்கள் கூட்டமாகச் செல்லத் தொடங்கியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள், அணைக்குச் செல்லும் வழியில் மரங்களைப் போட்டு அடைத்தார்கள். அதனால் அந்தப் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா மையங்களில் படையெடுக்கும் கூட்டம்
சுற்றுலா மையங்களில் படையெடுக்கும் கூட்டம்

வனப் பகுதிகளை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியதை அறிந்த வனத்துறையினர், தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்ளூர் மக்களைத் தவிர வெளியிடங்களில் இருந்து வாகனங்களில் வருவோரைத் திருப்பி அனுப்புகிறார்கள். ஆனாலும் அதையும் மீறி மக்கள் வனங்களுக்குள் செல்கிறார்கள்.

மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் 850 குடும்பத்தினர் தங்கியிருந்து வேலை செய்துவருகிறார்கள். அவர்களுக்காக தற்போது ஒரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. ஒரு சிலர் கொரோனா கவலையின்றி பேருந்தில் ஏறி எந்தவித அனுமதியும் இல்லாமல் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி ஊத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று திரும்புகிறார்கள்.

மாஞ்சோலை பேருந்து பயணிகளுக்கு பரிசோதனை
மாஞ்சோலை பேருந்து பயணிகளுக்கு பரிசோதனை

மாஞ்சோலை பேருந்தில் வெளியாட்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர சோதனை நடத்திய பின்னரே பேருந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. வெளியாட்கள் பேருந்தில் இருந்தால் மணிமுத்தாறு சோதனைச் சாவடியிலேயே இறக்கிவிடப்படுகிறார்கள். அத்துடன், பேருந்தில் செல்லும் எஸ்டேட் பணியாளர்களுக்கும் வனத்துறையினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை நடத்திய பின்னரே செல்வதற்கு அனுமதிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு