Published:Updated:

கொரோனா தொற்று: ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்!

ரகோத்தமன்
ரகோத்தமன்

`ராஜீவ் காந்தி கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ என்ற கொலை வழக்கு தொடர்பான புத்தகமும் எழுதியிருக்கிறார் ராகோத்தன்.

சி.பி.ஐ-யின் முன்னாள் எஸ்.பி-யும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாகவும் செயல்பட்ட ராகோத்தன், கொரோனா தொற்றால் காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. `ராஜீவ் காந்தி கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ என்ற கொலை வழக்கு தொடர்பான புத்தகமும் எழுதியிருக்கிறார் ராகோத்தன்.

ரகோத்தமன்
ரகோத்தமன்

ரவிக்குமார் எம்.பி., தனது ட்விட்டர் பதிவில், ``சி.பி.ஐ எஸ்.பி-ஆகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், தொலைக்காட்சி விவாதங்களில் நடுநிலையோடு, துணிச்சலாக, தெளிவாகத் தனது கருத்துகளை முன்வைப்பவருமான ரகோத்தமன் அவர்கள் கொரோனாவுக்கு பலியானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன். அவருக்கு என் அஞ்சலி” எனப் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு