Published:Updated:

``சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட வ.உ.சி படத்தை மாற்றுங்கள்" - அரசுக்கு வ.உ.சி பேரன் கோரிக்கை!

சட்டமன்றத்தில்  வ.உ.சி
சட்டமன்றத்தில் வ.உ.சி

சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வ.உ.சிதம்பரனார் படத்தைத் திறந்துவைத்தார். அதிலுள்ள உருவம் வ.உ.சி-போல இல்லாததால் அந்தப் படத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்திலுள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளைக் கௌரவிக்கும் வகையில் அவர்களின் உருவப்படத்தைச் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திறந்துவைத்தார்.

வ.உ.சி பேரன் வெள்ளைச்சாமி
வ.உ.சி பேரன் வெள்ளைச்சாமி

அந்தப் படத்திலிருக்கும் உருவம் வ.உ.சிதம்பரனார் உருவத்தைப்போல இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ``அந்தப் படத்திலுள்ள வ.உ.சி-யின் உருவம் வடநாட்டுத் தலைவர்களைப்போல ஷெர்வாணி உடை அணிந்தவாறு கைகளைக் கட்டிய நிலையில் இருக்கிரது. அது அவரது கம்பீரத்தையும் பாரம்பர்யத்தையும் பிரதிபலிப்பதுபோல இருக்கவில்லை” என்கிறார், வ.உ.சிதம்பரனார் பேரன் வெள்ளைச்சாமி.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சி இல்லத்தில், இருக்கையில் அமர்ந்த நிலையில் கறுப்பு-வெள்ளையில் வ.உ.சி படம் வைக்கப்பட்டுள்ளது. அதே போன்ற படம் நெல்லையிலுள்ள வ.உ.சி மணிமண்டபத்திலும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டப் பேரவையிலுள்ள படம் மட்டும் வித்தியாசமான உருவத்தில் இருப்பதாக அவர் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

சட்டமன்றத்தில்  வ.உ.சி
சட்டமன்றத்தில் வ.உ.சி
கருணாநிதி படத்திறப்பு விழா: முதல்வர் டிக் செய்த வாசகம் என்ன தெரியுமா?
சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள படம் வ.உ.சி-யின் கம்பீரத்துடன் இருக்கவில்லை.
வெள்ளைச்சாமி, வ.உ.சி பேரன்

இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் வ.உ.சி-யின் பேரன் வெள்ளைச்சாமி அளித்த மனுவில், ``நான் வ.உ.சி-யின் மூத்த மகன், ஆறுமுகத்தின் மகளான செண்பகவல்லியின் கணவர். நான் நெல்லை மாவட்டத்தில் வசித்துவருகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட படம் வ.உ.சி--யின் உருவத்தைப் போன்று இல்லை. அதனால் இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி, ஏற்கெனவே மணிமண்டபம் மற்றும் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள படத்தைப் போன்று மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வெள்ளைச்சாமி
ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வெள்ளைச்சாமி

வ.உ.சி-யின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு வ.உ.சிதம்பரனார் குடும்பத்தினரின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். அத்துடன், விரைவில் வரவிருக்கும் வ.உ.சி.-யின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு முன்பாக அவரது படத்தைச் சட்டமன்றத்தில் மாற்றியமைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். வ.உ.சி-யின் பேரன் வெள்ளைச்சாமியின் இந்தக் கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரியப்படுத்துவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு