Published:Updated:

‘‘தற்காலிக ஒதுக்கல் போதாது... முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்!’’

Friends of Police
பிரீமியம் ஸ்டோரி
Friends of Police

சீருடைய அணிந்தவர்களே சீரழிப்பில் ஈடுபடும் சூழலில், அவர்களின் அடியாள்களாகவே வலம்வரும் இந்த ‘நிழல்’ அமைப்பு நிச்சயமாக ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

‘‘தற்காலிக ஒதுக்கல் போதாது... முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்!’’

சீருடைய அணிந்தவர்களே சீரழிப்பில் ஈடுபடும் சூழலில், அவர்களின் அடியாள்களாகவே வலம்வரும் இந்த ‘நிழல்’ அமைப்பு நிச்சயமாக ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

Published:Updated:
Friends of Police
பிரீமியம் ஸ்டோரி
Friends of Police
‘‘காவலர்களின் நண்பர்கள் (Friends of Police) அமைப்பிலிருக்கும் உறுப்பினர்களைக் காவல் நிலையங்களில் இரண்டு மாதங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம்’’ என்று திருநெல்வேலி, விழுப்புரம், மதுரை என ஒவ்வொரு சரக டி.ஐ.ஜி-க்களாக அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர்.

ஆண்டாண்டு காலமாக இத்தகைய அமைப்பு செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் காவலர்களின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த 08-07-2020 தேதியிட்ட ஜூ.வி-யில் மேனாள் நீதிபதி சந்துரு ‘காவலர்களின் நண்பன்’ என்ற தலைப்பில், ‘இந்த அமைப்பே சட்ட விரோதமானது’ என்ற அதிர்ச்சிகரமான தகவல்களுடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இது அரசாங்கத்தையே ஆட்டிப் பார்த்துவிட்டது. இதையடுத்தே, தமிழ்நாடு டி.ஜி.பி-யான திரிபாதியின் ஆலோசனைப்படி இந்த அமைப்பை ஒதுக்கிவைக்கும் உத்தரவுகள் பறக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைப் பற்றி சந்துருவிடம் பேசியபோது, ‘‘காவல் துறையிலேயே இருக்கும் பல அதிகாரிகளுக்கு, இந்த அமைப்பினர் காவல் நிலையங்களில் கண்டபடி செயல்பட்டுவருவது பிடிக்கவில்லை. இதர காவலர்களுடன் சேர்ந்து பல சமூக விரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டுவருவது அரசாங்கத்தின் கவனத்துக்கும் வந்துள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது அமைக்கப்பட்ட தமிழ்நாடு காவல் ஆணையத்தின் 2008-ம் ஆண்டு அறிக்கையிலேயே ‘காவலர்களின் நண்பர்கள் குழு உறுப்பினர்கள், முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. அப்போதே இதைக் கணக்கிலெடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

‘‘தற்காலிக ஒதுக்கல் போதாது... முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்!’’

சாத்தான்குளம் படுகொலைக்குப் பிறகு, இந்தக் குழு மீதான விமர்சனங்கள் கடுமையாகவே, தமிழக முதல்வரின் அறிவுரையை அடுத்து, டி.ஜி.பி இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளார். இப்போதாவது அரசு விழித்துக்கொண்டதற்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தக் குழுவை நிரந்தரமாகவே தமிழக அரசு தடை செய்யவேண்டும்’’ என்ற சந்துரு,

‘‘இந்த அமைப்பைத் தொடங்கிய பிரதீப் பிலிப், இன்று சி.பி.சி.ஐ.டி துறையின் தலைவராக இருக்கிறார். அதன் துணை இயக்குநரான சங்கர்தான் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை விசாரிக்கிறார். ‘சாத்தான்குளம் காவல்நிலையத்தில் `காவலர்களின் நண்பர்கள்’ குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் செயல்படவில்லை’ என்று அவரது தரப்பில் அறிக்கை விடுத்திருப்பது சந்தேகத்தை அளிக்கிறது. இதையும் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று சொன்னார்.

சீருடைய அணிந்தவர்களே சீரழிப்பில் ஈடுபடும் சூழலில், அவர்களின் அடியாள்களாகவே வலம்வரும் இந்த ‘நிழல்’ அமைப்பு நிச்சயமாக ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.