தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

போட்டிகள்... பரிசுகள்...

போட்டிகள்... பரிசுகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டிகள்... பரிசுகள்...

எழுத்தாள வாசகர்களே... உங்கள் சிறுகதைகளை விகடன் வலைதளத்தில் மேடையேற்ற நாங்கள் தயார்.

வணக்கம் வாசகர்களே...

வெள்ளி விழா கொண்டாட்டம் எனும்போது உங்களை மேலும் மேலும் உற்சாகப்படுத்த போட்டிகள் அணிவகுக்கின்றன. அதேபோல பரிசுகளும் வரிசைகட்டி வர இருக்கின்றன.

மினிமலிசம் பகிர்வோம்...

`தேவைக்கு அதிகமானதை நாடுவதில்லை’, `அவசியத்துக்கும் அதிகமாக வாங்கிக் குவிப்பதில்லை’ என்பதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதெல்லாம், எதிலெல்லாம், எங்கெல்லாம், எப்படியெல்லாம் பின்பற்றுகிறீர்கள்... அதன் மூலமாக அடைந்த பலன்கள் என்னென்ன? அந்த ரகசியங் களை மற்றவர்களுக்கும் பகிரலாம்!

முதுமைக்கு மரியாதை கொடுப்போம்...

`இளையவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் வாழ வேண்டும்’ என்பது, முதியவர்கள் பலரின் எண்ணம். அப்படி, உணவு, மாத்திரை, பயணம் உள்பட அனைத்து விஷயங்களிலும் மற்றவர்களைவிட அதிக அக்கறையுடன் உங்களை நீங்களே பத்திரமாகப் பார்த்துக்கொள்வதற்காக கடைப்பிடிக்கும் சிறப்பான விஷயங்கள் பற்றி பகிரலாம்!

உலகம் எங்கள் பார்வையில்...

கடந்த 15 நாள்களில், உள்ளூர் முதல் உலகம் வரை நடந்த சம்பவங்களில், உங்களை மிகவும் பாதித்த, சிந்திக்க வைத்த, ரௌத்திரம் கொள்ளவைத்த, சிரிக்கவைத்த, அறிவூட்டிய என... உங்கள் உணர்வுடன் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகிவிட்ட ஒரு செய்தியைப் பற்றி திருத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதலாம்!

சொர்க்கமே என்றாலும்...

ஊர்ப்பெருமை பேசுவதில் நமக்கு ஒரு தனி சுகம் உண்டு. உங்கள் ஊரைப் பற்றிய ‘அட’ போட வைக்கும் சிறப்பு விஷயங்களை சுவாரஸ்யமாக போட்டோ/வீடியோக்களுடன் தொகுத்து அனுப்பலாம்!

வலைதள சிறுகதை!

எழுத்தாள வாசகர்களே... உங்கள் சிறுகதைகளை விகடன் வலைதளத்தில் மேடையேற்ற நாங்கள் தயார். சிறப்பாகவும், ஜொலிப்பாகவும் எழுதலாம்!

புத்தம்புது புதிர் போட்டி!

டிஜிட்டல் உலக அனுபவத்தை மொபைல் போன் மூலமாக அடைந்துகொண்டிருப்பவர்களுக்கான, சவால் நிறைந்த போட்டி. அவள் விகடன் பக்கங்களை அலசி ஆராய்ந்து புதிர்களின் விடைகளைத் தேடி அசத்த ஒரு வாய்ப்பு!

உங்களுக்காக/எங்களுக்காக...

அது, இது, எதுவானாலும் சரி... அவள் விகடன் இதழில், இணையதளத்தில், யூடியூபில் இடம்பெற வேண்டும் என நீங்கள் நினைப்பவற்றை பற்றி, உரிமையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அர்ப்பணிப்புடன் பரிசீலித்து நீங்கள் கேட்ட நல்லனவெல்லாம் தவறாமல் தர நாங்கள் தயார்... எப்போதும்போல!

போட்டிகள் பற்றிய முழுத்தகவல்கள், பரிசுகளின் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் அடுத்த இதழில்...

அதுவரை நீங்கள் தயாராகிக் கொண்டே இருங்கள்!