ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

வெள்ளி விழா கொண்டாட்டம்... கலக்கல் போட்டிகள்... சூப்பர் பரிசுகள்...!

சூப்பர் பரிசுகள்...!
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் பரிசுகள்...!

வாசகர்களே... போட்டிகளுக்குத் தயார்தானே... இதோ முழுவிவரங்கள்!

வெள்ளி விழா கொண்டாட்டம்... கலக்கல் போட்டிகள்... சூப்பர் பரிசுகள்...!

நமக்கு நாமே!

‘இளையவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் வாழ வேண்டும்’ என்பது முதியவர்கள் பலரின் எண்ணம். அப்படி, உணவு, மாத்திரை, பயணம் உள்பட அனைத்து விஷயங்களிலும் மற்றவர்களைவிட அதிக அக்கறை யுடன் உங்களை நீங்களே பத்திரமாகப் பார்த்துக்கொள்வதற்காக கடைப்பிடிக்கும் சிறப்பான விஷயங்கள் பற்றி பகிரலாம். நீங்கள் எழுதும் சிறந்த விஷயங்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.300. சிறப்பான பகிர்வுக்கு புடவை அன்பளிப்பாக வழங்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

நமக்கு நாமே! அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

வெள்ளி விழா கொண்டாட்டம்... கலக்கல் போட்டிகள்... சூப்பர் பரிசுகள்...!

உலகம் என் பார்வையில்...

கடந்த 15 நாள்களில், உள்ளூர் முதல் உலகம் வரை நடந்த சம்பவங்களில், உங்களை மிகவும் பாதித்த, சிந்திக்க வைத்த, ரௌத்திரம் கொள்ளவைத்த, சிரிக்கவைத்த, அறிவூட்டிய என... உங்கள் உணர்வுடன் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகிவிட்ட ஒரு செய்தியைப் பற்றி திருத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுங்கள். சுவாரஸ்யமான உணர்வுகளுக்கு குறைந்தபட்சம் பரிசு ரூ.300. சிறப்பான படைப்புக்கு குக்கர் பரிசு.

அனுப்ப வேண்டிய முகவரி:

உலகம் என் பார்வையில்... அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

வெள்ளி விழா கொண்டாட்டம்... கலக்கல் போட்டிகள்... சூப்பர் பரிசுகள்...!

உங்களுக்காக/எங்களுக்காக...

அது, இது, எதுவானாலும் சரி... அவள் விகடன் இதழில், இணையதளத்தில், யூடியூபில் இடம்பெற வேண்டும் என நீங்கள் நினைப்பவற்றை பற்றி, உரிமையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேர்வுபெறும் சிறந்த ஆலோசனைகளுக்கு சிறப்புப் பரிசுகள் நிச்சயம்!

அனுப்ப வேண்டிய முகவரி:

உங்களுக்காக/எங்களுக்காக... அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

வெள்ளி விழா கொண்டாட்டம்... கலக்கல் போட்டிகள்... சூப்பர் பரிசுகள்...!

சொர்க்கமே என்றாலும்...

ஊர்ப்பெருமை பேசுவதில் நமக்கு ஒரு தனி சுகம் உண்டு. உங்கள் ஊரைப் பற்றிய ‘அட’ போட வைக்கும் சிறப்பு விஷயங்களை சுவாரஸ்யமாக போட்டோ மற்றும் வீடியோக்களுடன் தொகுத்து எழுதி அனுப்பலாம். உங்கள் ஊர்ப்பெருமை தேர்வு பெற்றால் ரொக்கப் பரிசு ரூ.300. சிறப்பான ஊர்ப்பெருமைக்கு தவா பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:

சொர்க்கமே என்றாலும்... அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

வெள்ளி விழா கொண்டாட்டம்... கலக்கல் போட்டிகள்... சூப்பர் பரிசுகள்...!

வலைதள சிறுகதை

எழுத்தாள வாசகர்களே... உங்கள் சிறுகதைகளை விகடன் வலைதளத்தில் மேடையேற்ற நாங்கள் தயார். சிறப்பாகவும், ஜொலிப்பாகவும் நீங்கள் அனுப்பும் சிறுகதைகள் 1000 வார்த்தைகளுக்குள் இருப்பது அவசியம். ஆன்லைனில் பதிவாகும் சிறுகதைக்கான ரொக்கப் பரிசு ரூ.500.

சிறந்த சிறுகதைக்கு குக்கர் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:

வலைதள சிறுகதை, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

வெள்ளி விழா கொண்டாட்டம்... கலக்கல் போட்டிகள்... சூப்பர் பரிசுகள்...!

வாழ்க மினிமலிசம்!

`தேவைக்கு அதிகமானதை நாடுவதில்லை’, `அவசியத்துக்கும் அதிகமாக வாங்கிக் குவிப்பதில்லை’ என்பதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதெல்லாம், எதிலெல்லாம், எங்கெல்லாம், எப்படியெல்லாம் பின்பற்றுகிறீர்கள்... அதன் மூலமாக அடைந்த பலன்கள் என்னென்ன? அந்த ரகசியங்களை மற்றவர்களுக்கும் பகிரலாம். தேர்வுபெறும் ஒவ்வொரு பகிர்வுக்கும் ரொக்கப் பரிசு ரூ.300.

சிறந்த பகிர்வுக்கு, விகடன் குழும இணையதள ஆறு மாத சந்தா வழங்கப்படும். இதன் மூலம் விகடன் குழுமத்தில் அனைத்து இதழ்கள் மற்றும் பிரீமியம் கட்டுரைகளை டிஜிட்டலில் படிக்க முடியும்!

அனுப்ப வேண்டிய முகவரி:

வாழ்க மினிமலிசம்! அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

போட்டிகள் தொடரும்...