நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் எல்.பி.ஜி காஸ் சிலிண்டருக்குக் காப்பீடு உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாத தகவல். காஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்தும்போது நமது பாதுகாப்புப் பற்றி நிறைய விளம்பரம் செய்யும் சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்கள் இந்த இன்ஷூரன்ஸ் பற்றி மூச்சு விடுவதில்லை. நகரத்தில் இருக்கும் மக்களாவது அவ்வப்போது இணையத்தில் படித்து, எல்.பி.ஜி-க்கான காப்பீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.

68 விபத்துகள்...

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், சமையல் எரிவாயுக்கான தேவையும் அதிகமாகவே உள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு காஸ் இணைப்பைத் தந்து அவற்றைச் சரியாகப் பராமரிப்பது அனைத்து நிறுவனங்களுக்கும் சவாலான காரியமாகவே இருக்கிறது. இதில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டால்கூட விபத்து ஏற்பட்டுவிடுகிறது. உதாரணமாக, கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 68 விபத்துகள் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளுக்குக் காரணம் என்ன என்று இதுவரை அறியப்படவில்லை. பெரும்பாலான விபத்துகளில் மக்களின் மீதே தவறு உள்ளது என்ற சொல்லப்படுவதால், சமையல் எரிவாயு நிறுவனங்கள் தப்பித்துவிடு கின்றன. இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால், எல்.பி.ஜி இணைப்புக்கு காப்பீடு உண்டு. விபத்து ஏதும் நடந்தால், அந்தக் காப்பீட்டிலிருந்து இழப்பீட்டைப் பெற முடியும் என்பதுகூட எல்.பி.ஜி நிறுவனங்கள் சொல்வதில்லை.

நிறுவனங்கள் சொல்வதில்லை..!

இது குறித்து அத்துறை சார்ந்த வட்டாரத்தில் பேசினோம். ``காஸ் சிலிண்டர் காப்பீடு குறித்து வாடிக்கையாளர்களிடம் இணைப்பு வழங்கும் போது தெரிவித்துதான் இணைப்பை வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான டீலர்கள் இதுகுறித்த வாடிக்கையாளர்களிடம் விளக்கிச் சொல்வதில்லை. இதைப் பற்றி சரியாகத் தெரியப்படுத்தாததால், வாடிக்கையாளர்கள் விபத்து ஏற்படும்போது இழப்பீட்டைக் கேட்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

வாடிக்கையாளர் எடுக்கத் தேவையில்லை..!

காஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்கத் தேவையில்லை. அதை சிலிண்டர் விநியோகம் செய்யும் டிஸ்ட்ரிபியூட்டரே எடுத்துவிடுவார். அரசு விதிமுறைகளின்படி, காஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்கு `பப்ளிக் லயபிலிட்டி பாலிசி’ (Public liability policy) என்று பெயர். இந்த பாலிசியின்படி, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வாடிக்கை யாளர்களிடமிருந்து எண்ணெய் நிறுவனங்கள் பெறக்கூடாது. பிரீமியம் செலவுகள் அனைத்தும் நிறுவனத்தையே சேரும்.

இழப்பீட்டுத் தொகை ஒரு நபருக்கு ரூ.10 லட்சம்..!

எல்.பி.ஜி சிலிண்டர் இன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலம் ஒரு விபத்துக்கு ரூ.40 - ரூ.50 லட்சமும், ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரையும் இழப்பீட்டைப் பெறலாம். ஒருவேளை, விபத்தால் மரணம் ஏற்பட்டால், இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து இழப்பீடு வழங்கப்படும்.

இதைத் தவிர, மருத்துவக் காப்பீடாக ஒரு விபத்துக்கு ரூ.15 லட்சம் வரை பெற முடியும்.விபத்துக்குப் பின் உடனடி நிவாரணமாக ஒரு நபருக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படும். விபத்தால் ஏற்படும் சொத்து சேதாரத்துக்காக ஒரு விபத்துக்கு ரூ.1 லட்சம் ரூபாய் வரை பெறலாம்” என்றனர்.

எப்படி க்ளெய்ம் செய்வது?

இந்த இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ், விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில், சிலிண்டரில் விபத்து ஏதும் ஏற்பட்டால், அதை உடனடியாக (30 நிமிடங் களுக்குள்) விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் விபத்தை நேரில் ஆய்வு செய்து, அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார். க்ளெய்ம் விண்ணப்பத்தையும் தருவார். காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிக்க வேண்டுமெனில், அதையும் வாடிக்கையாளரே செய்ய வேண்டும். இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து வாடிக்கையாளரின் க்ளெய்ம் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி, நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

காஸ் சிலிண்டரில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் விபத்தை நேரில் ஆய்வு செய்தபின், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்!

டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை..!

காஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரத் தாமதமானால், விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதம் அடைந்ததுக் கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை, காஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதைச் சரிசெய்ததுக்கான ரசீதை வைத்திருக்க வேண்டும்.

வாடகை வீட்டில் குடியிருப் பவர்கள் ஒன்றிரண்டு தெரு தாண்டி வீட்டை மாற்றினால்கூட, பல சமயங்களில் காஸ் டிஸ்ட்ரி பியூட்டருக்குத் தெரிவிப்பதில்லை. இது தவறு. இதுபோன்ற சமயங்களில் விபத்து ஏற்பட்டால், உங்களுக்கான க்ளெய்ம் நிராகரிக்கப்பட நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, இவ்வளவு தொகைக்குதான் க்ளெய்ம் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது. விபத்தின் தன்மையைப் பொறுத்தும், அதன் பாதிப்பைப் பொறுத்தும் க்ளெய்ம் தொகை வித்தியாசப்படும்.

பராமரிப்பு முக்கியம்!

காஸ் விபத்து ஏற்படாமல் தடுக்க வாடிக்கை யாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பாரத் காஸ் நிறுவனத்தின் காஸ் மெக்கானிக் ரமேஷிடம் பேசினோம். ``காஸ் சிலிண்டர் டிஸ்ட்ரி பியூட்டரால் அங்கீகரிக்கப்பட்ட காஸ் மெக்கானிக் மூலமாக இரண்டு வருடத்துக்கு ஒரு முறை சிலிண்டர், இணைப்புக் குழாய், ரெகுலேட்டர், அடுப்பு ஆகியவை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு 75 ரூபாய் கட்டணம் உண்டு. அத்துடன் மெக்கானிக் மாற்றச் சொல்லும் பொருள்களை உடனடியாக மாற்றுவது முக்கியம். இதற்குத் தனியாகச் செலவாகும். இணைப்புக் குழாய் சுமார் 170 ரூபாயும், ரெகுலேட்டர் சுமார் 250 ரூபாயும் ஆகும். அரசால் ஐ.எஸ்.ஐ முத்திரை அளிக்கப்பட்ட நிறுவனத்தின் பொருள்களையே பயன்படுத்த வேண்டும்.

அதிகபட்சம் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை இணைப்புக் குழாயைக் கட்டாயமாக மாற்ற வேண்டும். பச்சை கலர் இணைப்புக் குழாயைப் பயன்படுத்தக் கூடாது. இதைப் பயன்படுத்தும் போது அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. இவை அனைத்துக்கும் ரசீது வாங்கி வைத்துக் கொள்வது அவசியம். ஏனெனில், விபத்து ஏற்பட்டு க்ளெய்ம் செய்யும் சமயங்களில் இந்த ரசீது கட்டாயம் தேவை.

அதேபோல, காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றை அணைத்துவிட்டு, உடனடியாக உங்களின் விநியோகஸ்தருக்குத் தெரிவிப்பது அவசியம். அவர் வந்து சரிசெய்து தந்தபின் மீண்டும் அடுப்பைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இதைச் சரியாகச் செய்யாமல் விபத்து ஏற்பட்டால், க்ளெய்ம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்” என்றார்.

மேற்கூறிய பாதுகாப்பு அம்சங்களை எல்லாம் சிறப்பாகச் செய்தாலே விபத்துகளைத் தவிர்க்கலாம். இதையும் தாண்டி, விபத்து ஏற்பட்டால் இன்ஷூரன்ஸில் இழப்பீடு பெற்று, பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்!