Published:Updated:

``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை..." வீட்டு வேலையாட்களுக்கு கௌரி கானின் புது உத்தரவு?!

எந்த நிகழ்ச்சியிலும் ஷாருக் கான் கலந்துகொள்ளாமல் இருக்கிறார். படப்பிடிப்புகளையும் ஒத்திவைத்திருக்கிறார்.

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக, கடந்த 3-ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்திருக்கிறது. தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆர்யன் கைதால் அவருடைய பெற்றோர் மனதளவில் உடைந்து போயிருக்கின்றனர். எந்த நிகழ்ச்சியிலும் ஷாருக் கான் கலந்துகொள்ளாமல் இருக்கிறார். படப்பிடிப்புகளையும் ஒத்திவைத்திருக்கிறார். தீபாவளிக்குள் ஆர்யன் ஜாமீனில் விடுதலையாகிவிடுவார் என்று ஷாருக் கான் குடும்பம் நம்புகிறது. பக்ரீத் மற்றும் தீபாவளிக்காக ஆர்யன் கான் குடும்பத்தினர் வீடு முழுக்க அலங்கார மின்சார விளக்குகள் பொருத்தியிருக்கின்றனர்.

``ஏழைகளுக்கு சேவை செய்வேன்; தவறான வழியில் செல்ல மாட்டேன்"- ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்
ஆர்யன் கான்... பெற்றோருடன்
ஆர்யன் கான்... பெற்றோருடன்

ஆனால் மின் விளக்கு ஆன் செய்யப்படாமல் இருக்கிறது. மகன் ஜாமீனில் வெளியில் வர வேண்டும் என்பதற்காக நவராத்திரியின்போது கௌரி கான் நோன்பிருந்து பூஜைகள் செய்திருக்கிறார். சமையல்காரர்கள் மதிய உணவுக்காக சாப்பாட்டுடன் பாயசமும் செய்துகொண்டிருந்தனர். இதைப் பார்த்த கௌரி கான் உடனே பாயசம் செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆர்யன் சிறையிலிருந்து வெளியில் வரும் வரை எந்த வகையான இனிப்பையும் செய்ய வேண்டாம் என்று சமையல்காரர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். தனது மகனின் நண்பர்கள் கௌரி கானுக்கு போன் செய்யும்போது ஆர்யனுக்காகக் கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்படி கௌரி கான் கேட்டுக்கொண்டார். கௌரி கான் தன் மகன் கைது செய்யப்பட்டிருப்பதால் மிகவும் உடைந்து போய்விட்டதாக அவருடைய தோழிகள் தெரிவித்திருக்கின்றனர். ஷாருக் கான் தன்னுடைய பாலிவுட் நண்பர்களிடம் வீட்டுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேசமயம் அனைவரிடமும் ஷாருக் கான் போனில் தொடர்பில் இருப்பதாக அவருடைய நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் தன்னுடைய மகன் கைது விவகாரத்தில் விசாரணை ஏஜென்சிக்கு ஷாருக் கான் முழு ஒத்துழைப்பு கொடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு