Published:Updated:

காதலுக்குப் பாலினமும் தடையில்லை!

காதல்
பிரீமியம் ஸ்டோரி
News
காதல்

உறவுகள்... உணர்வுகள்...

ர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் அர்த்தமுள்ளதாகக் கருதப்படுகிறது. அதுவே ஓர் ஆண் மற்றோர் ஆணையோ, ஒரு பெண் மற்றொரு பெண்ணையோ, மூன்றாம் பாலினத்தவர்கள் மற்ற பாலினத்தவர்களையோ விரும்பினால் அது அபத்தமாகப் பார்க்கப்படுகிறது. அங்குள்ள காதல் கவனிக்கப்படுவதே இல்லை. காதல் ஜாதி, மத, மொழி பேதங்களை மட்டுமல்ல பாலினத்தையும் கடக்கும். அதற்கு நாங்களே சாட்சி என்கிறார்கள் இவர்கள்.

காதலுக்குப் பாலினமும் தடையில்லை!

யார் இவர்கள்?

இவர்கள் எல்ஜிபிடி (LGBT) குழுவினர் என்று அழைக்கப் படுகிறார்கள். L (Lesbian) - ஒரு பெண் மற்றொரு பெண்ணை மனம் மற்றும் உடல்ரீதியாக விரும்புவது. G (Gay) - இரண்டு ஆண்களுக்கு இடையேயான காதலும் உடல் ஈர்ப்பும்.

B (Bisexual) - ஓர் ஆணோ, பெண்ணோ ஆண், பெண் என இருபாலினத்தவரிடமும் காதலும் உடலுறவும் கொள்வது.

T (Transgender) - மூன்றாம் பாலினத்தவர்கள் (திருநங்கை மற்றும் திருநம்பி).

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காதலுக்குப் பாலினமும் தடையில்லை!

காதலோ, திருமணமோ அது ஓர் ஆண் - பெண்ணுக்கு இடையில்தான் நிகழ வேண்டும் என்ற விதிக்கு விலக்காகிறார்கள் இவர்கள். இவர்களின் காதலும் உறவும் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது. இவர்களின் உறவோடு சேர்த்து உணர்வுகளும் உதாசீனப்படுத்தப்படுகின்றன.

எல்ஜிபிடி குழுவினரின் உறவுக்குச் சட்டத்தில் உள்ள இடம் குறித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சென்னையைச் சேர்ந்த ஆதிலட்சுமி லோகமூர்த்தி யிடம் பேசினோம்.

`‘தன்பாலினத்தவர்கள் அல்லது ஓரின சேர்க்கையாளர்கள் எனப்படும் இவர்களின் உறவு இயற்கைக்கு மாறான விஷயமாகக் கருதப்பட்டதால் இதற்கு எதிராக 1860-ம் ஆண்டு சட்டப்பிரிவு 377 கொண்டுவரப்பட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டு வந்தது. இந்தியா 1947-ல் விடுதலை அடைந்த பின்னரும், இந்தச் சட்டம் இந்தியக் குடியரசின் சட்டங்களிலிருந்து நீக்கப்படவில்லை. இந்த நிலையில் தன் பாலின உறவை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதைக் குற்றச் செயல்களின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இந்தியாவில் பல ஆண்டுகளாகக் கோரிக்கை எழுந்துவந்த நிலையில், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ‘377-வது சட்டப்பிரிவு இந்தியாவில் செல்லாது’ என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

காதலுக்குப் பாலினமும் தடையில்லை!

தன்பாலினத்தவர்கள் காதலிக்கவும், திருமணம் செய்துகொள்ளவும் சட்டத்தில் இடமுண்டு. ஆனால், சட்டங்கள் மட்டும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடாது. ஆண் பெண்ணுக்கு இடையேயான உறவைப்போல தன் பாலினத்தவர்களுக்கு இடையேயான உறவும் உணர்வுகள் சார்ந்தது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். சட்டத்தால் அல்ல. மனிதர்களால்'' என்கிறார் ஆதிலட்சுமி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எல்ஜிபிடி குழுவினரைப் புரிந்துகொள்வது எப்படி?

கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டியின் தலைவரான சென்னையைச் சேர்ந்த மனோரமா இதுகுறித்து விளக்குகிறார்... ‘`நம் கலாசாரத்தில் ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே அனைவராலும் முழுமையாக ஏற்கப்பட்டுள்ளன. மூன்றாம் பாலினத்தவர்களின் உடலியல் குறித்த தெளிவே இங்கு இன்னும் சரியாக ஏற்படவில்லை. இந்த நிலையில் ஹோமோசெக்ஸுவல் (Homosexual) எனப்படும் தன்பாலின சமூகத்தினரைக் குறித்தும், அவர்களின் உடல் சேர்க்கை குறித்தும் முழுமையான தெளிவு ஏற்பட அதிக காலம் பிடிக்கும். ஆனால், கடந்த காலத்தை ஒப்பிடுகையில் தற்போது எல்ஜிபிடி குழுவினர் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே முளைவிடத் தொடங்கியுள்ளது.

காதலுக்குப் பாலினமும் தடையில்லை!

ஒரு குழந்தை பிறக்கும்போது ஆணாகவோ, பெண்ணாகவோ, மூன்றாம் பாலினமாகவோ பிறக்கலாம். குழந்தைகள் நேரடியாக மூன்றாம் பாலினமாகப் பிறப்பது அரிதுதான். ஆண் அல்லது பெண்ணாகப் பிறக்கும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, தங் களுக்குள் இருக்கும் மற்றொரு பாலினத்தை இனங்காணத் தொடங்குகின்றனர். ஆணாகப் பிறக்கும் ஒருவர் தனக்குள் இருக்கும் பெண்மையை அடையாளம் கண்டு, அதன் உணர்வுகளை வெளிப்படுத்த தன் ஆணுறுப்பைக்கூட அறுவைசிகிச்சை மூலம் அகற்றத் துணிகிறார். குறிப்பிட்ட வயதுவரை ஆணாக இருந்து பிறகு பெண்ணாக மாறும் இவர்களைச் சமுதாயம் அப்படி ஏற்க மறுக்கிறது. இப்படிப் பெண்ணாக மாறிய ஓர் ஆண், மற்றோர் ஆணுடன் காதல் கொண்டாலோ, திருமணம் செய்துகொண்டாலோ அது விமர்சிக்கப் படுகிறது. வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல்தான் இருக்கிறது ஆணாக மாறும் பெண்களின் நிலையும்.

தன்பாலினத்தவர்கள் மூன்றாம் பாலினத்தவர்களிடமிருந்து முழுவதுமாக வேறுபடுகிறார்கள். இவர்கள் பிறக்கும்போது இருப்பதுபோல வளரும்போதும் ஆண், பெண்ணாகவே இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்குக் காதலும் ஈர்ப்பும் எதிர் பாலினத்தவரின் மீது ஏற்படாமல், தன்னுடைய பாலினத்தைச் சேர்ந்தவரின் மீதே ஏற்படுகிறது. அதாவது, ஆண்மையுள்ள ஓர் ஆணுக்குப் பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படாமல் மற்றோர் ஆணின் மீதே ஏற்படுகிறது. மனம் மற்றும் உடல் சார்ந்து அந்த ஆணையே சரணடைகிறார். இதேபோல் ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணின் மீது காதலும் காமமும் ஏற்படுகிறது. இவர்கள் தங்கள் பாலினத்தைச் சேர்ந்தவர்களையே மனதார விரும்புகிறார்கள்.

காதலுக்குப் பாலினமும் தடையில்லை!

ஓரினச்சேர்க்கை உறவில் இருக்கும் ஓர் ஆண் ஜோடியில் ஒருவர் ஆண் தோரணையுடனும் மற்றொருவர் சற்று பெண் தோரணையுடனும் காணப்படுவார். இதேபோல் பெண் ஜோடியில் ஒரு பெண் மிகவும் மிருதுவான பண்புள்ளவராகவும் மற்றொரு பெண் சற்று முரட்டுத்தன்மையுடனும் காணப்படுவார். இந்தத் தன்மைகளை வைத்தே ஓரினச்சேர்க்கை ஜோடிகள் தங்களைக் கணவன்-மனைவி என்று வகைப்படுத்திக்கொள்கின்றனர். இதில் மற்றொரு வகையினரும் உள்ளனர். ஆண், பெண் இருவரின் மீதும் ஈர்ப்பு உள்ளவர்கள். இவர்கள் இருபாலின ஈர்ப்பாளர்கள் (பைசெக்ஸுவல்) எனப்படுவார்கள்.

ஆணுக்கோ, பெண்ணுக்கோதான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பது பதின்ம வயதில் தெரிய வரலாம். ஒருவர் ஓரினச் சேர்கையாளராக மாறுவதற்கு மரபியல், உடல் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. தன்பாலின ஆணுக்குப் பெண் மீது ஈர்ப்பு இருக்காது. இவர்களால் மனமுவந்து பெண்களைக் காதலிக்கவோ, திருமணம் செய்யவோ முடியாது. மீறி தன்பாலின ஆணுக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தால், அவனால் அந்தப் பெண்ணுக்குக் குழந்தையைத் தர முடியும். தவிர, அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக இருக்காது. இதேபோல் ஓரினசேர்க்கையாளரான பெண்ணால் ஆணைத் திருமணம் செய்து கொண்டு சுமுகமாக வாழ முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன செய்ய வேண்டும்?

ங்கள் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவரோ, உங்கள் நண்பர் கூட்டத்தில் ஒருவரோ தன் பாலின அல்லது இருபாலின ஈர்ப்பாளர் என்று தெரியவரும்பட்சத்தில் அவரை ஒதுக்கக் கூடாது. அவர்களுக்கும் காதல், காமம் சார்ந்த உணர்வுகள் ஏற்படுகின்றன. ஆனால், அவை ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்மீது ஏற்படுகின்றன. இது அவரின் தவறல்ல. அவரின் உடலும் மரபணுவும் கட்டமைக்கப்பட்ட விதம் அப்படி. அவர்களை மாற்றுகிறேன் என்று அறிவுரை வழங்குவதை நிறுத்துங்கள். எதையும் வலிந்து அவர்களின் இயல்பான வாழ்க்கையில் திணிக்க வேண்டாம். உங்கள் வீட்டிலுள்ள பதின்ம வயதுக் குழந்தை, தான் ஒரு ஹோமோசெக்ஸுவல் என்று உங்களிடம் வெளிப்படுத்தினால், அந்தச் சூழ்நிலையை மிகவும் கவனமாகக் கையாளுங்கள். குழந்தை மீது பழி சுமத்தாமல், மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

காதல் எப்படி, யார் மீது வர வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் எழுதப்படவில்லை. மனதோடு காதல் வரும் பட்சத்தில் மனிதர்களால் தடைபோட முடியுமா..? காதல் ஜெயிக்கட்டும். பாலினத்தையும் தாண்டி!'' என்றார் அழுத்தமாக.