
மயில புடிச்சு தீனி கொடுத்து போட்டோக்கு போஸு கொடுக்கிற உலகம்!
facebook.com/Saravanakarthikeyan Chinnadurai
உண்மையில் நாம் 2019-ஐத்தான் திட்ட வேண்டும். கொரோனாவைக் கொண்டு வந்தது அதுதான் (பெயரைப் பாருங்கள்: Covid-19).
2020 ஓர் இடிதாங்கி மாதிரி. நம் திட்டுக்கள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிருக்கும் தியாகி. பாவம், பப்ளுவைத் திட்டாதீங்க.
twitter.com/Fazil_Amf
இன்னும் 5 வருஷத்தில் ATM கார்டு இருக்காது - SBI.
இப்போவே ஏன் இருக்குதுன்னு தெரியல, போவியா...

twitter.com/RahimGazzali
கொரோனாவைப் பரப்பியதே திமுகதான்! - முன்னாள் அமைச்சர் பொன்னையன்
ஸ்ரீராம் பைனான்ஸ்ல நாமினியாக சசிகலா பெயரை ஜெயலலிதா போட்டதால் அவர்தான் அம்மாவின் நிஜமான வாரிசுன்னு சொன்னவர்தானே நீங்க?!
twitter.com/Annaiinpillai
அமெரிக்கா போகணும் - 90ஸ்கிட்ஸ்..!
கைலாசா போகணும் - 2k கிட்ஸ்...!
twitter.com/Vkarthik_puthur
மயில புடிச்சு தீனி கொடுத்து போட்டோக்கு போஸு கொடுக்கிற உலகம்!
twitter.com/ividhyac/
மத்த ஸ்வீட்லாம் கூட 2-3உடன் நிறுத்திட முடியுது. இந்தக் கடலை மிட்டாய் மட்டும் பாக்கெட் காலியானதான் போதும்ங்கற மைண்ட் வருது.

Parthiban Gowthamaraj facebook
அமேசான் பிரைம் வீடியோவில் ஒரு படத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது, நரேந்திர மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பைப் போன்ற எளிதான செயல். #காலையிலியேகடுப்பு
twitter.com/thoatta
IPLல வச்சு காசு பார்த்து IPLலுக்கே டைட்டில் ஸ்பான்சர் ஆகுறதெல்லாம், உண்டியல உடைச்செடுத்து, கோயிலுக்கு செங்கல் ஸ்பான்சர் செய்யுற மாதிரி.
twitter.com/DrTRM9
நம் உடலில் உள்ள டிரில்லியன் கணக்கான செல்லில் உள்ள மைட்டோகாண்டிரியா எனப்படும் சக்தி உற்பத்தி செய்யும் பகுதி அனைத்தும் நம் அம்மாவிடம் இருந்து மட்டுமே வரும். #ஆண்மை பற்றிப் பேசுவோர் கவனத்திற்கு.