கோஃப்ரூகல் (Gofrugal) சென்னையைச் சேர்ந்த வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர் குமார் வேம்பு. “என்னதான் தொழில் பரபரப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், என் ஆரோக்கியத்துக்காக தினமும் சில மணி நேரங்களைச் செலவிட நான் தவறுவதில்லை” என்று சொல்லும் அவர், உடல் மற்றும் மனநலத்துக்காக தினமும் தான் பின்பற்றும் பயிற்சிகள் குறித்து விரிவாக விளக்குகிறார் இங்கே...

என்னுடைய ஒரு நாள்!

காலை 5 மணிக்கு எழுந்துவிடுவேன். தினமும் யோகாசனம், தியானம் செய்வேன். சரியாக 7:30 மணிக்கெல்லாம் காலை டிபன் சாப்பிட்டுவிடுவேன். இரவு 9:30 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். வார இறுதி நாள்களில் கோயிலுக்குச் செல்வேன் அல்லது குடும்பத்தோடு பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வேன்.

டயட் கன்ட்ரோல்

பச்சைக் காய்கறிகள், வேகவைத்த உணவுக்கு எப்போதும் கிரீன் சிக்னல். அமெரிக்காவில் ஓராண்டு பேச்சிலர் அறையில் தங்கியிருந்தபோது சமையல் கற்றுக்கொண்டேன். இளைய மகள் ஆசையாகக் கேட்பதை அவ்வப்போது சமைத்துத் தர அந்த அனுபவம் உதவியாக இருக்கிறது. எனக்கு ஸ்நாக்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஆனால், யோகா என் வாழ்க்கைக்குள் வந்த பிறகு எண்ணெய்ப் பண்டங்களுக்கு ஸ்ட்ரிட்டாக ‘நோ’ சொல்லிவிட்டேன். நம் உடம்புக்கு என்ன சாப்பாடு தேவை, எவ்வளவு தேவை என்பதெல்லாம் தெளிவாகப் பிடிபடுகிறது.

யோகா, தியானம்!

சிறுவயதில் என் உடல் எடை கூடியிருந்தது. காலையில் சீக்கிரம் எழுவது, அளவான சாப்பாடு என்று எனக்கே எனக்கென்று சில கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டதும் எடை கட்டுக்குள் வந்தது. 2012-ம் ஆண்டு யோகா கற்றுக்கொண்டேன். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றுக்கு மழை, வெயில், உபகரணங்கள் என்று பலவற்றைப் பார்க்க வேண்டியிருக்கும். ஆனால், ஏழடிக்கு மூன்றடி இடமிருந்தால் போதும்; எங்கேயும் எப்போதும் யோகா செய்ய முடியும். 2015-ம் ஆண்டிலிருந்து தியானம் செய்கிறேன். சிறுமலை அருகே விபாசனா தியானத்துக்காகப் பத்து நாள்கள் பயிற்சி எடுத்தேன். விபாசனா தியானம் செய்தால், மனம் நடுநிலைமையுடன் இருக்கும். விருப்பு வெறுப்புகள் அற்ற முடிவுகளை தைரியமாக எடுக்கலாம்.

ஸ்ட்ரெஸ் கன்ட்ரோல்

அதிக எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில்தான் ஸ்ட்ரெஸ் இருக்கும். என் அண்ணனைப்போல, நானும் அதிக மார்க் எடுக்க வேண்டும் என்ற என் பெற்றோரின் எதிர்பார்ப்பை நான் மூளையில் ஏற்றிக் கொள்ளவே இல்லை. அதனால் அழுத்தமின்றி இருந்தேன். இப்போதும் மற்றவர்களைப் பார்த்து நான் அடைய வேண்டிய உயரத்தை நிர்ணயித்துக் கொள்வதில்லை.

சிம்பிள் பிராப்ளம் சால்விங்!

நம் திறனுக்கு நம்மால் என்ன செய்ய இயலுமோ அதைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும். அதில் கிடைக்கும் ரிசல்ட்டைப் பாடமாக எடுத்துக் கொண்டு, அடுத்தகட்டம் நோக்கி நகர வேண்டும். நிலுவையிலுள்ள பணிகளில் எது அவசரமோ அதை முதலில் முடித்துவிட்டு, மற்றவற்றைப் பிறகு முடித்துக்கொள்ளலாம். மனம் நிதானமாக இருக்கும்போதுதான், சூழலைப் புரிந்துகொண்டு சிக்கல்களைச் சரிசெய்ய முடியும்.

மனம் நிதானமாக இருக்கும் போதுதான், சூழலைப் புரிந்துகொண்டு சிக்கல்களைச் சரிசெய்ய முடியும்.

ஊழியர்களின் ஃபிட்னெஸ்ஸிலும் அக்கறை!

எங்கள் நிறுவனத்தில் ஊழியர்களுக்காக ஆபீஸில் சின்ன ஜிம் இருக்கிறது. ஷட்டில் கோர்ட், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் விளையாடலாம். தினமும் யோகா செய்வதற்கும் வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

ஃபேமிலி டைம்!

என் மனைவி, என் அலுவலகத்தில் முதன்மை மார்க்கெட்டிங் மேனேஜராக இருக்கிறார். முதல் மகள் சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார். குடும்பத்தோடு வெளியே செல்லும்போது அனைவரும் சேர்ந்து ஸ்விம் செய்வது, பேட்மின்டன் விளையாடுவது என ஒன்றாக நேரம் செலவழிக்க விரும்புவோம்.

ஆபீஸ் வேலை வீட்டில் கூடாது!

ஆரம்பத்திலிருந்தே வீட்டிலும் அலுவலக வேலையைச் செய்யும் பழக்கம் எனக்கிருந்தது. கடந்த நான்கு வருடங்களாக அதைப் படிப்படியாகக் குறைத்து வருகிறேன். விரைவில் முழுமையாக விட்டுவிடுவேன். நிம்மதிக்கான வழிகளில் ஒன்று, ஆபீஸை வீட்டுக்குள் கொண்டு வராமலிருப்பது!