உலகிலேயே அதிக அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு நம் இந்தியாதான். ஒவ்வொரு வருடமும் 800 - 900 டன்கள் வரை இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவானது கணிசமாகக் குறைந்துள்ளது.

கொரோனா நோய்ப் பரவல், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2020 ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி 81.22% குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் சுமார் ரூ.18,590 கோடி மதிப்புள்ள தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. கடந்த 2019 ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.91,440 கோடியாகும்.

தங்கத்தைப்போலவே, வெள்ளி இறக்குமதியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் நம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளியின் அளவானது 56.5% குறைந்து, சுமார் ரூ.5,185 கோடியாக உள்ளது.

இனி அடுத்தடுத்து பல பண்டிகைகள் வருவதால், பலரும் தங்கம் வாங்க வாய்ப்பிருப்பதாகத் தங்க நகைகளை விற்கும் நிறுவனங்கள் நினைக்கின்றன. மேலும், இன்னும் சில வாரங்களில் அனைத்துப் பகுதியிலும் ஊரடங்கு நீக்கப்படும் என்பதால், மக்கள் சுதந்திரமாகக் கடைகளுக்கு வரத் தொடங்குவார்கள். அப்போது தங்கம் மற்றும் வெள்ளி நகை விற்பனை அதிகரிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்!