தங்கம் என்னும் நான்கு எழுத்து இந்திய பெண்கள், ஆண்கள் என ஒவ்வொரு வரின் வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்துள்ளது. குண்டுமணி அளவாவது தங்கம் சேர்க்க வேண்டும் என்பதே நம்மில் ஒவ்வொருவரின் கனவாகும். இதை அணிகலனாக அணிவது தனிநபரின் பெருமையைப் பறைசாற்றுவதாக உள்ளது.

அணிகலனாக மட்டுமல்லாது முதலீட்டு நோக்கிலும் தங்கம் பலராலும் விரும்பப்படுகிறது. திருமணத்துக்கு எவ்வளவு பவுன் நகை போடுகிறார்கள் என்பது ஒரு குடும்பத்தின் செல்வச் செழிப்பை ஊருக்குப் பறைசாற்றுவதாக உள்ளது.

தங்கத்தை அனைவரும் விரும்பு வதற்கு முக்கியமான காரணம், அதை விரைவாகப் பணமாக்கிக்கொள்ள முடியும் என்பதே ஆகும். கடன் வாங்குவதற்கு முக்கியமான காரணம், நகைகளை அடகு வைத்து நிலைமையைச் சமாளிக்க உதவும் என்பதால்தான்.

எது சரி..?

இப்போது அனைத்து தொலைக் காட்சிகளிலும் இரண்டுவிதமான விளம்பரங்களை நாம் அதிகம் பார்க்கிறோம். ஒரு விளம்பரத்தில் தங்கத்துக்கு மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக முன்னணி நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்கிறது. மற்றொரு விளம்பரத்தில், வட்டி பிரச்னைகளிலிருந்து தப்பிக்க நகையை விற்பனை செய்ய வலியுறுத்துகிறது. இந்த இரண்டு வழிகளில் உள்ள சாதக, பாதகங்களை நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அடகு வைக்கும்போது...

நகையை அடகு வைக்கும்போது கடனாக வழங்கப்படும் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. பெரும் பாலான வங்கிகள் மற்றும் அடகுக் கடைகள் தங்கத்தைப் பெற்றுக் கொண்டு உடனடியாகப் பணத்தை வழங்குகின்றன. அதிகபட்சம் அரை மணிநேரத்தில் நகைக்கடனைப் பெற முடியும். இந்தக் கடன் தொகைக்கு வட்டியாக வங்கிகள் 9 - 12% வரை வசூலிக்கின்றன.

திரும்பக் கட்டும் தொகை எவ்வளவு..?

தனிநபர் ஒருவர் ரூ.5 லட்சம் கடன் பெற்றால், 10% கூட்டு வட்டி அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.1,10,195 வட்டியாகக் கட்ட வேண்டி யிருக்கும். நகை திருப்பும்போது ரூ. 6,10,195 கட்டி நகையைத் திருப்ப வேண்டும். மேலும், இந்தக் கடனை பெறுவதற்கு வங்கிகள் 0.5 சதவிகிதத்திலிருந்து 2% வரை கட்டணமாக வசூலிக் கின்றன. பரிசீலனைக் கட்டணம், நகை பரிசோதனை செய்யும் அப்ரைசல் கட்டணம் என்ற பெயரில் இந்தக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அவ்வாறாக ரூ.3,000 வரை செலுத்த வேண்டியிருக்கும். இதையும் சேர்க்கும்போது ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு 10% வட்டி அடிப்படையில் ரூ.1, 13,000 அதிகமாக ஒருவர் செலுத்த வேண்டும். மேலும், தங்கத்தின் மதிப்பில் 70 - 80% வரை மட்டுமே கடனாகப் பெற முடியும்.

நகையை விற்கும்போது...

மாறாக, மற்றொரு விளம் பரத்தில் கூறப்பட்டுள்ளது போல, நகையை விற்று இரண்டு ஆண்டுகள் கழித்து புது நகையாக ஒருவர் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்று விரிவாகப் பார்க்கலாம்.

நகையை விற்கும்போது தங்கத்தின் மதிப்பில் 95% மட்டுமே பணமாகக் கிடைக்கும். அதன்படி ஒருவர் ரூ.5,26,000 மதிப்புள்ள நகைகளை விற்கும்போது ஒருவருக்கு ரூ.5 லட்சம் கிடைக்கும். இதன்மூலம் 26,000 ரூபாயை ஒருவர் இழக்க நேரிடும். மேலும், இரண்டு ஆண்டுகள் கழித்து புது நகை வாங்கும்போது குறைந்த பட்சம் 7% அளவுக்கு செய்கூலி, சேதாரம் போன்றவற்றுக்குச் செலவு செய்ய வேண்டும். இதன் மூலம் மேலும் ரூ.35,000 பணத்தை இழக்க வேண்டியிருக்கும். இதனால் மொத்தம் ரூ.61,000 இரண்டு வருடத்தில் குறைவாகக் கிடைக்கும்.

மேலும், தங்கத்தின் விலை யானது ஒவ்வோர் ஆண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. 1960-களில் 200 ரூபாய்க்கு விற்ற ஒரு பவுன் தங்கம், 2000-ம் ஆண்டில் 7,000 ரூபாயைத் தொட்டது. இப்போது 2020-ம் ஆண்டில் ரூ.38,000 அளவுக்கு வர்த்தகமாகிறது. கடந்த 20 ஆண்டுகளில் அடிப்படையில் பார்க்கும்போது, தங்கத்தின் மதிப்பு கூட்டுவட்டி அடிப்படையில் 8.5% அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. இதன்படி, ரூ.5 லட்சத்துக்கு வாங்கும் தங்கத்தின் விலை யானது இரண்டு ஆண்டுகளில் 5,92,000 ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கும். இந்த நகைக்கு 7% செய்கூலி சேதாரம் சேர்க்கும் போது, மேலும் 41,000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் ஒருவர் 26,000 + 92,000 + 41,000 = 1,59,000 அதிகமாக செலுத்திதான் புது நகை வாங்க வேண்டியிருக்கும்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது, தங்கத்தை அடகு வைப்பது சிறந்தது என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த இரண்டு வழிகளில் உள்ள சாதக, பாதகங்களை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

தங்க நகை அடகு... சாதகங்கள்

1. கடன் இருக்கிறது என்ற எண்ணத்தால் அதை மீட்க முயற்சி செய்வோம். நகையை விற்றுவிட்டால் மீண்டும் வாங்காமல் போகக்கூடிய சூழ்நிலைகூட ஏற்படலாம்.

2. வங்கிகளில் சுமார் 10% வட்டிக்கு கடன் பெறும்போது செலுத்தும் வட்டி குறைவாக இருக்கும். இது மீண்டும் புது நகை வாங்குவதைவிட லாபகர மானதாக இருக்கும்.

தங்க நகை அடகு... பாதகங்கள்

1. பெரும்பாலும் தங்க நகை கடன்கள் குறுகியகாலத்துக்கே வழங்கப்படுகின்றன. இரண்டு ஆண்டு களுக்கு மேல் கடன் தொகை தேவைப்படும் போது ஒவ்வோர் இரண்டு ஆண்டு களுக்கும் கட்டணங்களைச் செலுத்தி வட்டி கட்டி மறுஅடகு வைக்க வேண்டும்.

2. தங்கத்தின் விலை குறையும்போது (பெரும்பாலும் இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை) வங்கிகள் வாடிக்கை யாளரை கடன் தொகையைத் திரும்பச் செலுத்த கேட்கும்.

3. மாதத் தவணை (இ.எம்.ஐ) வசதி இருக்கும்பட்சத்தில், வட்டித் தொகையைத் தவணை தேதிகளில் சரியாகச் செலுத்த வேண்டும்.

4. 70 - 80% அளவுக்கு மட்டுமே கடன் தொகை கிடைக்கும்.

இதேபோல தங்க நகையை விற்பனை செய்யும்போது உருவாகும் சாதக, பாதகங்களையும் ஆராய வேண்டும்.(பெட்டிச் செய்தியைப் பார்க்கவும்)

வங்கிகளில் சுமார் 10% வட்டிக்கு கடன் பெறும்போது செலுத்தும் வட்டி குறைவாக இருக்கும். இது மீண்டும் புது நகை வாங்குவதைவிட லாபகரமானதாக இருக்கும்.

இந்த இரண்டு விஷயங்களிலும் சாதகங்களும் பாதகங்களும் இணைந்தே உள்ளன. ஒருவருக்கு எது ஏற்றது என்பதை நன்கு ஆராய்ந்து அதன் பிறகு, முடிவு செய்வது அதிக கட்டணங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும். நிதித் திட்டமிடலில் மிக முக்கிய அம்சமாகப் பணத்தைச் சேமிப்பது உள்ளது. வருமானத்திலிருந்து மட்டுமல்லாமல் நாம் பெறும் கடன்களில் சேமிக்கும் வட்டிகளில் சேமிக்கும் பணமும் நமக்கு லாபமாக அமையும்.

எந்தக் கடன் குறைந்த அளவு வட்டியில் கிடைக்கிறது என்பதைப் பார்த்து நமது கடன்களை மறு சீராய்வு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு சீராய்வு செய்யும் போது நம்மிடம் இருக்கும் நகை நிச்சயம் நமக்கு உதவிகரமாக இருக்கும். அவற்றை விற்றுக் கடனை அடைப்பது லாபகர மானதா அல்லது வங்கிகளில் அடகு வைத்து கடன் பெறுவது லாபகரமானதா என்பதைத் திட்டமிட்டு அவரவர் வசதிக் கேற்ப முடிவு செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் பணத்தைச் சேமிக்க முடியும்!

தங்கம் விற்பனை... சாதகங்களும் பாதகங்களும்!

சாதகம்: 1. புதிதாக தங்கம் வாங்கும்போது லேட்டஸ்ட் டிசைனாக வாங்க முடியும். இதன் மூலம் பழைய தங்க நகைகளை மாற்றிக்கொள்ள முடியும். 2. சில தனியார் அடகுக் கடைகளில் அதிக அளவு வட்டி வசூல் செய்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்தக் கடைகளில் நகைகளை அடகு வைக்கின்றனர். 12 சதவிகித அளவுக்கு அதிகமாக வட்டி கட்டுவது அதிக இழப்பை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக நகையை விற்று, பிறகு, வாங்குவது லாபகரமாக இருக்கும். 3. எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வட்டி கட்டத் தேவையில்லை. வேறு கட்டணங்கள் செலுத்த தேவை யில்லை. 4. நகையின் மதிப்பு அடிப்படையில் 95% வரை தொகையைப் பெற முடியும்.

பாதகம்: 1. புதிய நகையை வாங்காமல் விட்டுவிடுவது கையிலுள்ள சேமிப்பைக் கரைக்கச் செய்துவிடும். 2. செய்கூலி, சேதாரம் என்னும் வகையில் பணத்தை இழக்க நேரிடும். 3. நகை என்பது ஒரு குடும்பத்தின் பாரம்பர்யமாக பார்க்கப்படுகிறது. என் பாட்டி நகை, அம்மா நகை என்று ஒவ்வொரு நகையும் அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு குடும்பத்தின் பழைய நகைகளை விற்பது சென்டிமென்டாகப் பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.

பிட்ஸ்

காரீப் பருவத்தில் அரசுத் தரப்பில் செய்யப்பட்ட கொள்முதல் 23% அதிகரித்து உள்ளது. ஏறக்குறைய ரூ.81,400 கோடி அளவுக்கு உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கின்றன.