Published:Updated:

நல்ல கதைகள் நாடகமாகுது!

தாரிணி கோமல்
பிரீமியம் ஸ்டோரி
தாரிணி கோமல்

``இந்தத் தலைமுறையினரில் எத்தனை பேருக்கு ‘தண்ணீர் தண்ணீர்’ படம் பற்றித் தெரிஞ்சிருக்கும்னு தெரியலை.

நல்ல கதைகள் நாடகமாகுது!

``இந்தத் தலைமுறையினரில் எத்தனை பேருக்கு ‘தண்ணீர் தண்ணீர்’ படம் பற்றித் தெரிஞ்சிருக்கும்னு தெரியலை.

Published:Updated:
தாரிணி கோமல்
பிரீமியம் ஸ்டோரி
தாரிணி கோமல்

னா 38 வருஷங்கள் கழிச்சு அந்தக் கதையை நாடகமா பார்க்கும்போது ‘இப்படியொரு படைப்பா’ன்னு வியந்துபோறாங்க. இன்னிக்கும் தலைவிரிச்சாடும் தண்ணீர்ப்பஞ்சத்தோடு இந்தக் கதையைப் பொருத்திப்பார்த்து ஒவ்வொரு வசனத்தையும் கொண்டாடுறாங்க. இப்படிக் கொண்டாடும் பலரும் முதல்முறை நாடகம் பார்க்கிறவங்க. ஏதோ அப்பாவுக்கு சின்னதா என்னால முடிஞ்ச அஞ்சலி...’’ நினைவுகள் சுமந்து பேசுகிறார் தாரிணி கோமல்; பிரபல எழுத்தாளரும் நாடகப் படைப்பாளியுமான கோமல் சுவாமிநாதனின் மகள்; ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கரின் அம்மா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்பாவின் நினைவாகவும் படைப்பாளி களைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் ‘கோமல் தியேட்டர்ஸ்’ என்ற பெயரில் நாடகக்குழுவைத் தொடங்கி, படைப்புகளை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கிறார்.

``அப்பா எந்தக் கதையை எழுதினாலும் அதை உடனே எனக்குத்தான் படிச்சுக் காட்டுவார். அஞ்சு வயசுலேருந்து நாடகங்கள் பார்க்கிறேன். அப்பாவின் எல்லா நாடகங்களுக்கும் நான்தான் முதல் விமர்சகர். இப்படி நாடகப் பின்னணியோடு வளர்ந்தாலும் வாழ்க்கையில ஒரு கட்டத்துல திசை மாறி ஐடி துறைப்பக்கம் போகவேண்டிய தாயிடுச்சு. ஐடி துறையில வைஸ் பிரெசிடென்ட்டா வேலை பார்த்திட்டிருந்தேன். திடீர்னு ஒருநாள் ‘வாழ்க்கையில நான் பண்ண வேண்டியதை விட்டுட்டு வேற எதையோ பண்ணிட்டி ருக்கேனே’ன்னு தோணுச்சு. வேலையை ரிசைன் பண்ணிட்டு, 2012-ம் வருஷம் தியேட்டருக்குள்ளே வந்துட்டேன்...’’

2013-ம் ஆண்டிலிருந்து தனக்கான இடமும் களமும் மேடை என்பதைக் கண்டறிந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``போன வருஷம் அப்பா நினைவா ‘கோமல் தியேட்டர்ஸ்’ ஆரம்பிச்சேன். அப்பாவின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தை முதல்முதலா அரங்கேற்றினேன். ஆரம்பத்தில் அப்பாவின் நாடகங்களை மட்டும் பண்ணிட்டிருந்தேன். அதைத் தாண்டி ஏதாவது செய்யலாமேன்னு தோணுச்சு. படைப்பாளிகளைப் போற்றுவோம்’ என்ற கான்செப்ட்டின் அடிப்படையில் நிறைய நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளை மேடையேற்றும் ஐடியா வந்தது.

தாரிணி கோமல்
தாரிணி கோமல்

இந்தத் தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கமே இல்லாமப்போயிட்டிருக்கு. நல்ல படைப்புகளை நாடக வடிவில் கொடுத்தா ரசிப்பாங்கன்னு தோணுச்சு. ‘இவர்களின் சிறுகதைகள் இவர்களின் இயக்கத்தில்’னு ஒரு நாடகம் போட்டோம். அதில் கல்கி, தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன் என அஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகளை அஞ்சு பேர் இயக்கி மேடையேற்றினோம். அதில் சூடாமணியின் ‘பிம்பம்’ கதையை நான் இயக்கி நடிச்சேன். இந்த வருஷம் எழுத்தாளர் சுஜாதாவின் அஞ்சு கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். குடும்பம், சமூகம், க்ரைம் திரில்லர், நகைச்சுவை, சயின்ஸ் ஃபிக்ஷன்னு அஞ்சு விதமான பிரிவுகள்லேருந்து அஞ்சு கதைகளைத் தேர்ந்தெடுத்தேன். நானே ஸ்க்ரிப்ட்டும் இயக்கமும் பண்ணினேன்.

இதுக்காக 200-க்கும் மேலான கதைகளைப் படிச்சேன். சில கதைகளை வாசிக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம், நாடகத்தில் கொண்டு வர முடியாது. சிலது மேடைக்கேற்ற கதைகளா தெரிஞ்சது. அப்படிப்பபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்தேன். சுஜாதாவின் ரசிகர்கள் நாடக ரசிகர்கள் இல்லை. புத்தகப் பிரியர்களான அவங்களையும் நாடகங்களை ரசிக்கவைக்க முடிஞ்சதை வெற்றியா பார்க்கறேன். தவிர மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரிவினர்தான் எப்போதும் நாடகங்கள் பார்ப்பாங்க என்ற பார்வையையும் மாற்றி, புத்தகம் வாசிக்கிறவங்களையும் இலக்கியவாதிகளையும் நாடகங்கள் பக்கம் திரும்ப வெச்சிருக்கேன்’’ பெருமையாகச் சொல்பவரின் நாடகக்குழுவில், பாதிக்கும் மேலானோர் இளைஞர்கள்.

``80களில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரிச்சாடிட்டடிருந்தது. அப்பாவே தெருவில் இறங்கி காலிக்குடங்களோடு வரிசையில நின்ன நாள்கள் எனக்கு மறக்கலை.

``இளைய தலைமுறையினரை மேடை நாடகங்கள் பக்கம் திருப்பறதுதான் என் லட்சியம். கலைஞர்களுக்கு தியேட்டர்தான் முதல் பாடசாலை. வசன உச்சரிப்பு, உடல்மொழின்னு எல்லா நுணுக்கங்களையும் மேடை நாடகங்கள் மூலமாதான் மெருகேற்றிக்க முடியும். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுன்னு சொல்லிக்கிட்டா அதுக்குத் தனி மரியாதை இருக்கு. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத எத்தனையோ கலைஞர்களுக்கு மேடையில் வாய்ப்புகள் காத்திட்டிருக்கு...’’ நம்பிக்கையளிக்கிறார்.

வாய்ப்பு அமைகிற மேடைகளில் எல்லாம் தன் அப்பாவின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தை அரங்கேற்றுவதில் முனைப்பாக இருக்கும் தாரிணிக்கு, அதை ஒவ்வொரு முறையும் வெற்றிகர நிகழ்வாக்குவதில் பெருமை.

``80களில் தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரிச்சாடிட்டிருந்தது. அப்பாவே தெருவில் இறங்கி காலிக்குடங்களோடு வரிசையில நின்ன நாள்கள் எனக்கு மறக்கலை. அப்பாவுக்கு அப்போ உதிச்ச ஐடியாதான் ‘தண்ணீர் தண்ணீர்.’ அதைத் திருநெல்வேலியில் ‘அத்திப்பட்டு’ங்கிற கிராமத்தில் நடந்த மாதிரி எழுதினார். நாடகத்தின் முதல் நாள்... ஷோ டைம் நெருங்கியும் போலீஸ் அனுமதி கிடைக்கலை. சில வசனங்களை நீக்கச் சொன்னாங்க. நீக்கின பிறகுதான் அனுமதி கிடைச்சது. மேடை நாடகமா இந்தியா முழுக்கக் கொடிகட்டிப் பறந்த அந்த நாடகத்தைத்தான் கே.பாலசந்தர் திரைப்படமா எடுத்தார். அந்தப் படத்துக்குத் தேசிய விருது கிடைச்சது. ஒரு வசனத்தைக்கூட மாற்றத் தேவையில்லாம இன்னிக்கும் அப்படியே போடறோம், அப்பா தன்னோட 60-வது வயசுலேயே இறந்துட்டார். ஒருவேளை இருந்திருந்தால் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்திருக்கும். என்னை இந்தத் துறையில் இயக்கி, நாடகங்களுக்குக் கிடைக்கிற கைத்தட்டல்களை ரசிச்சபடி ஒவ்வொரு மேடையிலும் அப்பா எங்கேயோ உட்கார்ந்தபடி ஆசீர்வதிச்சிட்டிருக்கிறதா நம்பறேன்...’’ தாரிணியின் வார்த்தைகளில் நம்பிக்கையும் நெகிழ்ச்சியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism