Published:Updated:

‘பீகாரைவிட சம்பளம் குறைவு...’ - ஊதிய உயர்வுக்காகப் போராடும் அரசு மருத்துவர்கள்!

உண்ணாவிரதப் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
உண்ணாவிரதப் போராட்டம்

மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்தான அரசாணை 354-ஐ பாதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்; அரசாணை 293-ஐ மீதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்

‘பீகாரைவிட சம்பளம் குறைவு...’ - ஊதிய உயர்வுக்காகப் போராடும் அரசு மருத்துவர்கள்!

மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்தான அரசாணை 354-ஐ பாதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்; அரசாணை 293-ஐ மீதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்

Published:Updated:
உண்ணாவிரதப் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
உண்ணாவிரதப் போராட்டம்

சர்வதேச மருத்துவர் தினத்தன்று சேலம், மேட்டூரில் ‘உண்ணாவிரதப் போராட்டம்’ நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார்கள் அனைத்து அரசு மருத்துவர் சங்கக் கூட்டமைப்பினர்.

போராட்டக்குழுத் தலைவரான டாக்டர் பெருமாள்பிள்ளையிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு அமைந்தபோது, பெரும் சவாலாக இருந்த கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, 18,000 அரசு மருத்துவர்களும் தொய்வின்றி களப்பணி ஆற்றினோம். கொரோனா வார்டில் பணியாற்றியதால் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள் பலர் மரணமடைந்த சூழலிலும்கூட, முழு அர்ப்பணிப்போடு பணியைத் தொடர்ந்தோம். ஆனால், கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை.

 மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

நாட்டின் சுகாதாரத்துறை செயல்பாடுகளில் 25-வது இடத்தில் இருக்கும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில்கூட அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படுகிறது. ஆனால் மருத்துவத்துறையில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களின் மாத ஊதியம் பீகாரைவிடக் குறைவாகவே இருக்கிறது. கடந்த 13 வருடங்களாகவே இந்த வருவாய் இழப்போடுதான் பணிபுரிந்துவருகிறோம்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, அரசு மருத்துவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தி.மு.க ஆட்சி அமைந்ததும், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி ஊதியம் வழங்கப்படும்’ என்று உறுதியளித்தார். ஆனால் தி.மு.க ஆட்சி அமைந்து ஒன்றரை வருடமாகியும் எங்களின் கோரிக்கை நிறைவேறவில்லை’’ என்றார்.

‘பீகாரைவிட சம்பளம் குறைவு...’ - ஊதிய உயர்வுக்காகப் போராடும் அரசு மருத்துவர்கள்!
பெருமாள்பிள்ளை
பெருமாள்பிள்ளை

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்தான அரசாணை 354-ஐ பாதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்; அரசாணை 293-ஐ மீதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தான் ஒரு முடிவை எட்ட தாமதமாகிறது. மற்றபடி, மருத்துவர்களுக்கும் அரசுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் கிடையாது. இரு தரப்பு மருத்துவர்களையும் ஒன்றிணைத்து இதுவரை 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரம்கூட மருத்துவத்துறை செயலாளர் தலைமையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவின்படி, அனைத்து மருத்துவர்களும் ஏற்றுக்கொண்ட ஓர் இறுதி வரைவு தயார் செய்யப்பட்டுவருகிறது. அடுத்த பத்து நாள்களுக்குள் இந்த வரைவு தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார் உறுதியாக.

சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?