Published:Updated:

புதிய பகுதி! - 1: பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்!

பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்

#Utility

புதிய பகுதி! - 1: பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்!

#Utility

Published:Updated:
பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்

பெண்கள் பல்வேறு துறை களில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் பெண் குழந்தைகள் பிறந்தால் செலவு என்ற பொது புத்தி இன்றும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் திருமணம். பெண் பிள்ளைகளின் திருமணச் செலவு என்பது ஏழை - நடுத்தர குடும்பங்களுக்கு மிகப் பெரிய சுமையாக இருக்கிறது. பெண்களின் திருமணத்துக்கு கைகொடுக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திருமண உதவித் திட்டங்களைப் பற்றி இந்த இதழில் பார்க்கலாம்...

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்

பயன் மதிப்பு: மணமகள் பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் 50,000 ரூபாய் மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் (பழங்குடியினராக இருந்தால் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தாலே போதுமானது) 25,000 ரூபாய் மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும்.

பயனாளி: மணமகளின் பெற்றோர். பெற்றோர் இல்லை யெனில் மணமகளிடம் வழங்கப்படும். பெற்றோரின் ஒரு பெண் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

தகுதிகள்: 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குள் இருத்தல் வேண்டும். திருமணத்துக்கு 40 நாள்களுக்கு முன்னா் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்: திருமண அழைப்பிதழ், கல்விச் சான்றிதழ்கள், வயது மற்றும் வருமானச் சான்று.

புதிய பகுதி! - 1: பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்!

ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்

பயன் மதிப்பு: மணமகள் பட்டப்படிப்பு பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் 50,000 ரூபாய் மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும். மணமகளுக்குப் போதுமான கல்வித் தகுதி இல்லையெனில் 25,000 ரூபாய் மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும்.

பயனாளி: விதவை தாயார். விண்ணப்பித்த தாயார் இறந்துவிட்டால் மணமகளிடம் வழங்கப்படும். தாயின் ஒரு பெண் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும்.

தகுதிகள்: 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குள் இருத்தல் வேண்டும். திருமணத்துக்கு 40 நாள்களுக்கு முன்னா் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்: கணவரின் இறப்புச் சான்றிதழ் அல்லது விதவைச் சான்று, வருமானச் சான்று மற்றும் மணமகளின் வயதுச் சான்று.

அன்னை தெரசா நினைவு ஆதர வற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம்

பயன் மதிப்பு: மணமகள் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் 50,000 ரூபாய் மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும். மணமகளுக்கு கல்வித் தகுதி இல்லையெனில் 25,000 ரூபாய் மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும்.

பயனாளி: தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்.

தகுதிகள்: 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும். திருமணத்துக்கு 40 நாள்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்: தாய், தந்தை இறப்புச் சான்று, வயதுச் சான்று, திருமண அழைப்பிதழ் எம்.எல்.ஏ அல்லது எம்.பி-யிடமிருந்து ஆதரவற்றோர் என்பதற்கான சான்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
புதிய பகுதி! - 1: பெண்களுக்கான அரசுத் திட்டங்கள்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்.

பயன் மதிப்பு: மணமகள் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் 50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலை + 20,000 ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலை + 10,000 ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும்.

பயனாளி: கலப்புத் திருமணம் செய்த தம்பதியர்.

தகுதிகள்: 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும். திருமண வகை FC or OC- BC/MBC, SC/ST- BC or MBC, SC/ST-FC என்றவாறு இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு இல்லை. திருமணமான இரண்டு வருடத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

தேவையான சான்றுகள்: திருமண பதிவுச் சான்று, கலப்பு திருமணச் சான்று, மணமகன் மற்றும் மணமகளின் சாதி, வயது மற்றும் கல்விச் சான்று.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம்

பயன் மதிப்பு: மணமகள் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் 50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலை 20,000 ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும். போதுமான கல்வித்தகுதி இல்லையெனில் 25,000 ரூபாய் மற்றும் (15,000 ரூபாய் காசோலை + 10,000 ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரம்) எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும்.

பயனாளி: மறுமணம் செய்து கொள்ளும் விதவை பெண்.

தகுதிகள்: மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமகனின் வயது 40-க்கு மிகாமல் இருந்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் வரம்பு இல்லை. திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்: விதவைச் சான்று, மறுமணத்துக் கான திருமண அழைப்பிதழ், மணமக்களின் வயதுச் சான்று, கல்விச் சான்றிதழ்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ங்கே விண்ணப்பிக்க வேண்டும்?

தேவையான ஆவணங்களுடன் அருகில் உள்ள அரசின் இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான சேவை கட்டணமாக 120 ரூபாய் செலுத்த வேண்டும். அங்கே தரப்படும் பதிவு எண் மற்றும் நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை கிராமம் எனில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் நகரம் எனில் மாவட்ட சமூகநல அலுவலரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.

உதவி எப்போது கிடைக்கும்?

குறிப்பிட்ட காலத்துக்குள் பயனாளிக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் எனக் கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை. விண்ணப்பங்களின் சீனியாரிட்டி அடிப்படையிலேயே உதவித்தொகை வழங்கப்படும். நீங்கள் தகுதியான விண்ணப்பதாரர் எனில் உங்களுக்கு நிச்சயமாக உதவித் தொகை கிடைக்கும். உங்கள் விண்ணப்பம் தொடர்பாக புகார்கள் இருந்தால் மாவட்ட சமூகநல அதிகாரியைச் சந்தித்து புகார் கொடுக்கலாம்.

ந்தத் தகவல்களை வீடியோவாகப் பார்க்க கீழே உள்ள link-ஐ க்ளிக் செய்யவும். மேலும் பல வீடியோக்களுக்கு `அவள் யூடியூப்' சேனலை சப்ஸ் கிரைப் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism