Published:Updated:

மூன்றே நாள்களில் பி.எஃப் க்ளெய்ம்! - மத்திய அரசு அதிரடி..!

பி.எஃப் க்ளெய்ம்
பிரீமியம் ஸ்டோரி
பி.எஃப் க்ளெய்ம்

பி.எஃப் க்ளெய்ம்களை மூன்று நாள்களுக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மூன்றே நாள்களில் பி.எஃப் க்ளெய்ம்! - மத்திய அரசு அதிரடி..!

பி.எஃப் க்ளெய்ம்களை மூன்று நாள்களுக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Published:Updated:
பி.எஃப் க்ளெய்ம்
பிரீமியம் ஸ்டோரி
பி.எஃப் க்ளெய்ம்
கொரோனா பாதிப்பால் சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு காரணமாக பிராவிடன்ட் ஃபண்டில் பலரும் தேவைக்குப் பணம் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.

சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், பல பி.எஃப் அலுவலகங்களில் குறைவான பணியாளர்களே இயங்கி வருகிறார்கள். இந்தியா முழுக்க 135 மண்டல பி.எஃப் அலுவலகங்கள் உள்ளன. ஆறு கோடிக்கும் மேலாக பி.எஃப் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு சராசரியாக பணி நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.270 கோடி வரை கிட்டத்தட்ட 88,000 க்ளெய்ம் செட்டில் செய்யப்பட்டிருக்கின்றன.

கொரோனா பாதிப்பு க்ளெய்ம், பி.எஃப் பகுதி பணம் எடுத்தல், பென்ஷன் க்ளெய்ம், ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு பி.எஃப் தொகை மாற்றுதல் போன்றவற்றுக்கு ஆன்லைன் மூலம் பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள். பணியாளர்கள் குறைவாக இருக்கும் நிலையில் நிவாரணம் கிடைக்க தாமதமாகும் நிலை இருந்தது. இதற்குத் தீர்வுகாணும்விதமாக இ.பி.எஃப்.ஓ அமைப்பு, சென்னை போன்ற குறைவான பணியாளர்கள் வேலை பார்க்கும் மண்டல அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் வரும் க்ளெய்ம்களை, அதிக பணியாளர்கள் பணிபுரிந்துவரும் மண்டல அலுவலங்கள் அல்லது அதிக க்ளெய்ம் வராத மண்டலங்களுக்கு பிரித்துவிடுவதன் மூலம் பி.எஃப் க்ளெய்ம்களை மூன்று நாள்களுக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.