Published:Updated:

`உடலை வருத்திக்கொண்டு போராட வேண்டாம்'- மருத்துவர்கள் போராட்டத்தில் ஸ்டாலின்!

மருத்துவர்கள் உடலை வருத்திக்கொண்டு போராட வேண்டாம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் போராட்டத்தினால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலுயுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்ப்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

`உடலை வருத்திக்கொண்டு போராட வேண்டாம்'- மருத்துவர்கள் போராட்டத்தில் ஸ்டாலின்!

சென்னை கீழ்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நான்கு நாள்களாக நடந்து வரும் போராட்டம் காரணம் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களின் கண்காணிப்பில் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனையை நம்பி இருக்கும் ஏழை மக்களுக்கு இந்த போராட்டம் கடும் சிரமத்தை கொடுத்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் மருத்துவர்களால் நோயாளிகளை கவனிக்க முடிவதில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். பயிற்சி மருத்துவர்களை கொண்டு அரசு சமாளித்து வந்த நிலையில் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக அவர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். மருத்துவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ``மருத்துவர்கள் உடலை வருத்திக்கொண்டு போராட வேண்டாம். அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும். ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டுவர வேண்டும் என்று அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன்” என்றார்.