Published:Updated:

தி.மு.க - அ.தி.மு.க ஆர்வம்... அதிர்ச்சியில் மக்கள்... மீண்டும் கிரானைட் குவாரிகள்!

கிரானைட் குவாரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
கிரானைட் குவாரிகள்!

மேலூரில் கூட்டுறவு நூற்பாலை நீண்டகாலம் இயங்காமல் உள்ளது. அதை மீண்டும் இயக்கினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும்.

தி.மு.க - அ.தி.மு.க ஆர்வம்... அதிர்ச்சியில் மக்கள்... மீண்டும் கிரானைட் குவாரிகள்!

மேலூரில் கூட்டுறவு நூற்பாலை நீண்டகாலம் இயங்காமல் உள்ளது. அதை மீண்டும் இயக்கினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும்.

Published:Updated:
கிரானைட் குவாரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
கிரானைட் குவாரிகள்!

முறைகேடு புகார்களால் மூடிக்கிடக்கும் கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்குமாறு சட்டமன்றத்தில் அ.தி.மு.க கோரிக்கை வைத்ததும், அதற்கு தி.மு.க அரசு பச்சைக்கொடி காட்டியிருப்பதும் மதுரை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கிறது.

மதுரை பகுதிகளிலுள்ள கிரானைட் குவாரி உரிமையாளர்கள், கடந்த 20 ஆண்டுகளில் அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு, விதிகளை மீறி கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2011-ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, முறைகேடான கிரானைட் குவாரிகளை மூடி சீல் வைத்ததோடு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பி.ஆர்.பி உள்ளிட்ட குவாரி அதிபர்களையும் கைதுசெய்தது.

தி.மு.க - அ.தி.மு.க ஆர்வம்... அதிர்ச்சியில் மக்கள்... மீண்டும் கிரானைட் குவாரிகள்!

இந்த நிலையில், “கிரானைட் குவாரிகள் மூடிக்கிடப்பதால், மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அதனால், கிரானைட் குவாரிகளைத் திறக்க வேண்டும்’’ என்று மேலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பெரியபுள்ளானும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். “கிரானைட் குவாரிகளைத் திறக்க அரசு தயாராக உள்ளது” என்று அமைச்சர் துரைமுருகனும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பி.ஸ்டாலின், “மேலூரில் கூட்டுறவு நூற்பாலை நீண்டகாலம் இயங்காமல் உள்ளது. அதை மீண்டும் இயக்கினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும். அதற்குக் கோரிக்கை வைக்காமல், கிரானைட் முதலாளிகளுக்காக எம்.எல்.ஏ பெரியபுள்ளானும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கோரிக்கைவைக்கிறார்கள். இதற்காகவே காத்திருந்ததுபோல், அமைச்சர் துரைமுருகனும் உத்தரவாதம் கொடுக்கிறார். ஆக, கிரானைட் குவாரி விஷயத்தில் அ.தி.மு.க - தி.மு.க-வினரின் கொள்கை என்னவென்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது” என்றார்.

கிரானைட் குவாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஆர்.ராஜசேகரிடம் பேசியபோது, “முறைகேடு புகாரில் அபராதமும் விதித்துவிட்டு, குவாரியையும் மூடியதுதான் பெரும் பாதிப்பாகிவிட்டது. இதை எதிர்த்துத்தான் தொடர்ந்து அரசிடம் முறையீடு செய்துவந்தோம். பத்து வருடங் களுக்குப் பின்பு இப்போதுதான் நல்ல செய்தி கிடைத்துள்ளது. இதனால் வழக்கு விசாரணை எதுவும் பாதிக்கப்படாது. அது ஒரு பக்கம் நடக்கும்; தொழிலும் ஒரு பக்கம் நடக்கும்’’ என்றார்.

துரைமுருகன், ஆ.பி.உதயகுமார், பி.ஸ்டாலின், ஆர்.ராஜசேகர்
துரைமுருகன், ஆ.பி.உதயகுமார், பி.ஸ்டாலின், ஆர்.ராஜசேகர்

தொகுதிக்கான கோரிக்கைகள் பல இருக்கும்போது, ‘கிரானைட் குவாரிகளைத் திறக்க கோரிக்கைவைத்தது ஏன்?’ என்று மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளானிடம் கேட்டோம். ‘‘வழக்குகளில் சம்பந்தப்படாத குவாரிகளைத் திறக்க வேண்டும் என்றுதான் கோரிக்கைவைத்தேன். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. நூற்பாலையைத் திறக்க எங்கள் ஆட்சியிலேயே கோரிக்கைவைத்தேன். நிதிப் பிரச்னையால் அனுமதி கிடைக்கவில்லை’’ என்றார்.

`மேலூர் வட்டாரத்தில் எஞ்சியுள்ள மலைகளை, நீதிமன்றம்தான் பாதுகாக்க வேண்டும்’ என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்!