Published:Updated:

மத்திய பிரதேசம்: புல்டோசர் ஊர்வலத்தில் வந்த மணமகன் - வைரலான திருமணம்!

புல்டோசர் ஊர்வலம் ( ட்விட்டர் )

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தனது திருமணத்துக்கு மணமகன் ஒருவர் புல்டோசரில் சவாரி செய்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேசம், பெதுல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மணமகன் புல்டோசரில் அமர்ந்து கொண்டு ஊர்வலமாக திருமண நடைபெற்ற இடத்துக்கு வந்த சம்பவம் வைரல் ஆகி உள்ளது.

அங்குஷ் என்ற பொறியாளருக்கும், சுவாதி மால்வியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அங்குஷ் சிவில் இன்ஜினியராக டாடா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமண ஊர்வலத்தின் போது குதிரை, வண்டி, பைக், கார் ஆகியவற்றில் திருமண ஊர்வலம் நடைபெற்றிருப்பதை பாத்திருப்போம். ஆனால் இந்த நிகழ்வு சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேசம்: புல்டோசர் ஊர்வலத்தில் வந்த  மணமகன் - வைரலான திருமணம்!

இந்தநிலையில், இது தொடர்பாக அந்த மணமகன் அங்குஷ் தெரிவித்திருப்பதாவது, ``புல்டோசரில் எனது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கனவு கண்டேன். இதுகுறித்து எனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினேன். அவர்களும் எனது ஆசையை நிறைவேற்றி விட்டனர். புல்டோசரில் ஊர்வலம் நடந்ததால் என் திருமணம் மறக்க முடியாததாக மாறியிருக்கிறது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism