Published:Updated:

இந்தியப் பொருளாதார வளர்ச்சி... தாவோஸ் மாநாட்டில் அதிர்ச்சி!

Donald Trump
பிரீமியம் ஸ்டோரி
Donald Trump

அமெரிக்க ஈரான் போர் பதற்றங்கள், அமெரிக்க சீன வர்த்தக யுத்தம் ஆகியவை பொருளாதார இடர்பாடுகளாகக் கருதப்படுகின்றன.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி... தாவோஸ் மாநாட்டில் அதிர்ச்சி!

அமெரிக்க ஈரான் போர் பதற்றங்கள், அமெரிக்க சீன வர்த்தக யுத்தம் ஆகியவை பொருளாதார இடர்பாடுகளாகக் கருதப்படுகின்றன.

Published:Updated:
Donald Trump
பிரீமியம் ஸ்டோரி
Donald Trump

ன்னாட்டு ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கக்கூடிய அதிமுக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) உச்சி மாநாடு. 50-வது வருட உச்சி மாநாடு, கடந்த ஜனவரி 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சுவிட்சர்லாந்திலுள்ள தாவோஸ் நகரத்தில் நடந்தது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி...   தாவோஸ் மாநாட்டில் அதிர்ச்சி!

இந்த ஆண்டுக்கான தாவோஸ் மாநாட்டில் வளமான எதிர்காலம், பூவுலகின் பாதுகாப்பு, மாறிவரும் சமூகத்தில் வேலை வாய்ப்புகள், நேர்மையான பொருளாதாரம், மேம்பட்ட வணிகம், உலக அரசியல், நன்மை தரும் தொழில்நுட்பம் ஆகிய ஏழு வெவ்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. உலகம் முழுவதிலிருந்தும் 828 பேச்சாளர்கள் உரையாற்றினர். இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஏராளமான தொழில்துறை வல்லுநர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆரம்பமே அதிரடி!

தாவோஸ் மாநாட்டின் முதல் நிகழ்வான உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த சர்வதேச நிதி அமைப்பின் (International Monetary Fund) முன்கணிப்பு அறிக்கை அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. 2020-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் முந்தைய எதிர்பார்ப்பைவிட (அக்டோபர் 2019) 0.1% குறைவாக இருக்கும் என கணித்த ஐ.எம்.எஃப்., தற்போதைய இந்தியாவின் பொருளாதார மந்தநிலைதான் ஆசியாவின் வளர்ச்சி குறைவதற்கு ஒரு முக்கியக் காரணமாகவும், உலகப் பொருளாதாரச் சரிவுக்கு ஒரு முக்கியக் காரணமாகவும் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்க – ஈரான் போர் பதற்றங்கள், அமெரிக்க – சீன வர்த்தக யுத்தம் ஆகியவை இதர பொருளாதார இடர்பாடுகளாகக் கருதப்படுகின்றன.

அதே நேரம், தற்போதைய பொருளாதார மந்தநிலை தற்காலிமானதே என்று நம்புவதாகவும், இதர ஆசிய (வளரும்) நாடுகளான வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் சிறப்பாகச் செயல்படுவதாகவும் ஐ.எம்.எஃப் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

அமெரிக்க ஈரான் போர் பதற்றங்கள், அமெரிக்க சீன வர்த்தக யுத்தம் ஆகியவை பொருளாதார இடர்பாடுகளாகக் கருதப்படுகின்றன.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம்!

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தற்போது இந்திய அரசு பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திவருதாகக் குறிப்பிட்டார். அதோடு, தாவோஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பெரும் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றன என்றும் சொன்னார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி...   தாவோஸ் மாநாட்டில் அதிர்ச்சி!

இந்தியாவின் கடன் சந்தை கூடிய விரைவில் இயல்புநிலைக்குத் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார், நிதித்துறையில் பல சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் வங்கிகள் தற்போது கடன் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிளாக்பஸ்டர் இந்தியா..!

தாவோஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்தியத் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, இந்தியாவின் வளர்ச்சியைத் திரைப்பட உவமையாக்கிப் பேசினார். “தற்போது தயாரிப்பிலுள்ள `இந்தியா’ எனும் திரைப்படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டராக அமையும். மோடி அரசின் சீர்த்திருத்த நடவடிக்கைகள் அந்தத் திரைப்படத்தின் முடிவு சுபமாக இருக்க உதவும். அடுத்த நிதியாண்டிலிருந்து இந்தியா உலக நாடுகளுக்கு ஆனந்த அதிர்ச்சி அளிக்கத் தொடங்கும்’’ என்று கூறினார் அவர்.

சர்ச்சைகளும் விவாதங்களும்..!

ஒரு காலத்தில் (1992) பிரிட்டன் அரசையே நாணயச் சந்தை வர்த்தகத்தில் (British Pound) மண்டியிடச் செய்தவராகப் புகழப்படும் ஜார்ஜ் சோரஸ், உலகெங்கும் வேகமாகப் பரவிவரும் தேசியவாதம் குறித்து அச்சம் தெரிவித்தார்.

“ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற உலகின் பெரும் வல்லரசுகள் புதின், ட்ரம்ப், ஜி ஜின்பிங் போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்களின் கையிலிருப்பது ஜனநாயகத்துக்கான எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் மதவாதம் வலுப்பெறுவது ஒட்டுமொத்த உலகுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் பின்னடைவாகவும் அமைந்துவிடும்” என்ற சோரஸ், உலக அளவில் தேசியவாதத்துக்கு எதிரான உயர்கல்வியைப் பரப்ப ஒரு பில்லியன் டாலர் நிதியுடன்கூடிய பன்னாட்டு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.

`இந்தியா’ எனும் திரைப்படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டராக அமையும். மோடி அரசின் சீர்த்திருத்த நடவடிக்கைகள் அந்தத் திரைப்படத்தின் முடிவு சுபமாக இருக்க உதவும்!

தாவோஸ் தரும் பாடங்கள்!

பெரும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சந்தை வணிகர்கள் இடையே ஒரு நெட்வொர்கிங்கை உருவாக்கும் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு, இந்தியப் பொருளாதார வளர்ச்சி பற்றி இந்த மாநாட்டில் பல அம்சங்கள் விரிவாகப் பேசப்பட்டுள்ன. அவற்றில் முக்கியமானது, இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து ஐ.எம்.எஃப்-ன் கணிப்பு. கடந்த 2019-ம் ஆண்டுக்கான தாவோஸ் மாநாட்டில், `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும்’ என்று ஐ.எம்.எஃப் கணித்தது. கடந்த ஒரு வருடமாக இந்த கணிப்பு படிப்படியாகக் குறைந்து, தற்போது 4.8% என்ற அளவுக்குக் குறைந்திருக்கிறது. இது போன்ற தவறான முன்கணிப்புகள் ஐ.எம்.எஃப் போன்ற பொது நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிடும். அதனால், இந்த கணிப்பின் பின்னணியிலுள்ள காரணங்களை ஆராய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

Donald Trump
Donald Trump

பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு ரீதியில் இந்தியாவைவிட சீனா பல படிகள் உயர்வான நிலையில் இருந்தாலும், தனிமனித உரிமைகளைப் பேணி காக்கும் கொள்கையுடன் கூடிய மக்களாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படுவதால், சீனாவைவிட ஒருபடி மேலாக மதிக்கப்பட்டு வந்தது. ஆனால், நடந்து முடிந்த தாவோஸ் மாநாட்டில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி அல்லது தொழில் நிறுவனங்களின் செயல்பாடு குறித்த கேள்விகளைவிட அதிகமான வினாக்கள் உள்நாட்டு அரசியல் குறித்து எழுப்பப்பட்டதுதான் நமது பிரதிதிகளுக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கும் தற்போதைய கடினமான காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்க பன்னாட்டு முதலீடுகளை கவர வேண்டுமெனில், அதற்கேற்ற அமைதியான சூழலை உருவாக்க வேண்டியது மிக அவசியம்!

(இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளே!)