Published:Updated:

என் பணம் பணம் உன் பணம் உன் பணம் பணம் என் பணம்! - தம்பதிக்குள் நிதி நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க..

பணம்
பிரீமியம் ஸ்டோரி
பணம்

திட்டமிடல்

என் பணம் பணம் உன் பணம் உன் பணம் பணம் என் பணம்! - தம்பதிக்குள் நிதி நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க..

திட்டமிடல்

Published:Updated:
பணம்
பிரீமியம் ஸ்டோரி
பணம்

பெரும்பாலான குடும்பங்களில் சண்டைகளுக்குக் காரணமே பணத்தை யார் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதுதான். ‘எனக்குத் தெரியாம ஏன் லோன் வாங்குன...’, ‘என்கிட்ட சொல்லாம நீ அந்த சிட் ஃபண்ட்ல முதலீடு செய்திருக்கக் கூடாது’ போன்ற விஷயங்களால் ஆரம்பிக்கும் சண்டை, குடும்பத்தின் நிம்மதியையே குலைத்துவிடக்கூடும்.

கணவன் மனைவிக்குள் நிதி நிர்வாக பிரச்னைகள் எழாமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..? ஆலோசனை தருகிறார் `பிரைம் இன்வெஸ்டார்' அமைப்பின் இணை நிறுவனர் வித்யா பாலா.

வெளிப்படைத்தன்மை அவசியம்!

கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தங்களின் நிதி நிர்வாகச் செயல்பாடுகள் எதையும் மறைக்கக் கூடாது. எல்லாவற்றையும் எந்தவித ஒளிவு மறைவுமின்றி இணையிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான ஆண்கள், வீட்டின் நிதி நிர்வாக விஷயங்களில் பெண்களை ஈடுபடுத்துவதே இல்லை. சேமிப்பு, கடன் என அனைத்தையும் தாமே கையாள்வார்கள். ஏதேனும் எதிர்பாராத சம்பவம் நிகழும் பட்சத்தில் இதனால் பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் தம்பதியர் தங்களின் நிதி நிர்வாகச் செயல்கள் அனைத்தையும் இணையிடம் பகிர்ந்துகொள்வது நல்லது.

என் பணம் பணம் உன் பணம் உன் பணம் பணம் என் பணம்! - தம்பதிக்குள் நிதி நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க..

சேமிப்பு நல்லதுதான். ஆனால்...

அந்தக் காலத்தில் பெண்கள் கடுகு டப்பாக் களிலும், வெந்தய டப்பாக்களிலும் சேமித்துக் கொண்டிருந்தார்கள். இப்போதுள்ள பெண்கள் தங்க நகை சீட்டு கட்டுவது, சிட் ஃபண்ட் முதலீடு, மகளிர் சுய உதவிக்குழு போன்ற விஷயங்களில் பணத்தை முதலீடு செய்யவும், சேமிக்கவும் தொடங்கிவிட்டார்கள். இதில் பெண்கள் செய்யும் தவறு தங்களின் சேமிப்பு பற்றியும், முதலீடு செய்யும் நிறுவனத்தைப் பற்றியும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் ரகசியம் காப்பதே. இதனால் அவர்கள் நல்ல நிறுவனத்தில்தான் முதலீடு செய்கிறார்களா, பாதுகாப்பான திட்டத்தில்தான் நகைக்குச் சீட்டு கட்டுகிறார்களா என்பது தெரியாமல் போகிறது. பணத்தைக் குறிவைத்து மோசடி செய்யும் தொழில்நுட்பங்கள் தற்போது பெருகி விட்டதால் பெண்கள் தங்கள் சேமிப்பு, வரவு, செலவு கணக்குகளை முடிந்தவரை கணவருடன் பகிர்ந்துகொள்ளலாம். ஏதேனும் முதலீடு செய்ய விரும்பினால் அது குறித்து கணவருடன் நன்கு ஆலோசனை செய்த பிறகு முடிவெடுக்கலாம்.

இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்!

எதற்குச் செலவு செய்ய வேண்டும். எதற்குச் செய்யக் கூடாது என்ற குழப்பமும், கருத்து வேறுபாடும் இணையருக்குள் வருவது இயல்புதான். இந்தச் சிக்கல் ஏற்படாமலிருக்க செலவு செய்வதற்கான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது நல்லது. இந்த இலக்குகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக... வீடு வாங்குவது, கார் வாங்குவது, பிள்ளைகளின் படிப்புச் செலவு இவற்றுக்கெல்லாம் எவ்வளவு சேமிக்க வேண்டும், இவற்றில் எது அத்தியாவசிய மானது, முதலில் எந்த இலக்கை நிறைவேற்ற வேண்டும் என்று தம்பதியர் தங்களுக்குள் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என் பணம் பணம் உன் பணம் உன் பணம் பணம் என் பணம்! - தம்பதிக்குள் நிதி நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க..

பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்!

தேவையற்ற செலவுகளால் ஏற்படும் பிரச்னையைத் தவிர்க்க மற்றொரு வழி பட்ஜெட் போட்டு செலவு செய்வது. ஒவ்வொரு நாளுக்கும் பட்ஜெட் போட்டு செலவு செய்வதுதான் சிறந்தது. ஆனால், அது அனைவராலும் முடியாது என்பதால் ஒரு மாதத்துக்கான பட்ஜெட்டை அந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். வீட்டு வாடகை, இ.எம்.ஐ, ஒரு மாதத்துக்குப் பயன்படுத்தக்கூடிய மின்சார கட்டணத்துக்கான தொகை, கேஸ் சிலிண்டருக்கான தொகை, தொலைக்காட்சிக்கான சந்தா, வீட்டிலிருக்கும் மொபைல், லேப்டாப் போன்ற கேட்ஜெட்கள் மற்றும் வாகனங்களின் பயன்பாடு மற்றும் பராமரிப்புக்கான தொகை, மருத்துவச் செலவு, காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியம் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பவராக இருந்தால் அதற்குரிய தொகையைத் தனித்தனியே அட்டவணைப்படுத்தி பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். செலவுகள் வரும்போது அது எந்த தலைப்புக்குக்கீழ் உள்ளதென்று பார்த்து அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகையிலிருந்து மட்டுமே பணத்தை எடுத்துச் செலவு செய்ய வேண்டும்.

கடன் வாங்குவதற்கு முன்பு...

ஏதேனும் தேவைக்காகத் தனிநபரிடமோ, வங்கியிலோ கடன் வாங்க விரும்பினால் அதற்கு முன்பாக இருவரும் சேர்ந்து ஆலோசியுங்கள். நீங்கள் வாங்க நினைக்கும் கடன் அவசியமானதுதானா, கடன் வாங்கிய பிறகு, அதற்கான மாதாந்தர தவணையை உங்களால் தவறாமல் செலுத்த முடியுமா, எவ்வளவு லோன் எடுக்க வேண்டும், எந்தத் திட்டத்தின் கீழ் கடன் வாங்க வேண்டும் போன்றவற்றை இருவரும் நன்கு ஆலோசித்து முடிவெடுத்தால், பின்னர் இதில் பிரச்னை வரும் பட்சத்தில் இருவரும் சேர்ந்தே எதிர்கொள்ள முடியும்.

நிதி ஆலோசகரின் உதவியை நாடலாம்!

ஏதேனும் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்வதில் கணவன் மனைவிக்குள் கருத்து முரண்கள் தோன்றினாலோ, எப்படி எங்கு முதலீடு செய்வதுபோன்ற சந்தேகங்கள் எழுந்தாலோ ஆலோசனைக்காக மூன்றாவதாக ஒரு நபரின் உதவியை நாடலாம். அவர் உங்கள் நண்பராகவோ, நலம் விரும்பி யாகவோ இருக்கலாம் அல்லது ஒரு நிதி ஆலோசகரிடம் சென்று உங்களுக்கான தீர்வைப் பெறலாம்.