Published:Updated:

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை...
பிரீமியம் ஸ்டோரி
சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை...

ஆன்லைன் மூலம் தொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறுபவர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை வாங்கிவிட்டு இரண்டு நாள்கள்கூட பயிற்சி வழங்காமல் ப்ளாக் செய்து விடுவார்கள்

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

ஆன்லைன் மூலம் தொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறுபவர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை வாங்கிவிட்டு இரண்டு நாள்கள்கூட பயிற்சி வழங்காமல் ப்ளாக் செய்து விடுவார்கள்

Published:Updated:
சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை...
பிரீமியம் ஸ்டோரி
சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை...
 சர்வேஷ்
சர்வேஷ்

பெண்களுக்கு பொதுவெளிகளிலும் பணியிடங் களிலும் மட்டுமல்ல, இணைய வெளியிலும் பாதுகாப்பு இல்லை என்பதை பல சம்பவங்களின் மூலம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். நம் புகைப்படங்கள்/ வீடியோக்கள் திருடப்பட்டு தவறாகப் பயன்படுத்தப் படுவது ஒருபுறம் என்றால் பணம் மற்றும் உழைப்பு சார்ந்த திருட்டும் இணையவெளியில் பெண்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படுகின்றன. பாலின பேதமின்றி அனைவரிடமும் நிகழ்த்தப்படும் மோசடிகளும் உண்டு. இணையவெளியில் நடத்தப்பட்டு வரும் மோசடிகளில் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் தங்களை எவ்விதம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் விரிவாக விளக்குகிறார் கோவையைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் சர்வேஷ்...

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பர்சனல் மெயில் ஐடியை பொதுவில் பகிராதீர்கள்!

``வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு இணையத்தைச் சார்ந்து இயங்க வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. உதாரணமாக அழகு நிலையம், பயிற்சி மையங்கள் வைத்து நடத்துகிறவர்கள் இணையத்தின் மூலம்தான் அவர்களது தொழிலை விரிவுபடுத்த முடியும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இணையத்தின் பங்கு தவிர்க்கவியலாதது. ஆகவே, தொழில் சார்ந்து இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள் அதற்கென தனி இ மெயில் உருவாக்கி அதனைத்தான் வழங்க வேண்டும். வங்கியோடு தொடர்புபடுத்தி யிருக்கும் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை யாருக்கும் பகிரக்கூடாது. பர்சனல் மெயில் ஐடியை ஹேக் செய்வதன் வழியே வங்கி விவரங்களைத் திருட முடியும். இதன் மூலம் வங்கியில் உள்ள பணத்தைத் திருடும் வாய்ப்பும் அதிகம். ஒரு நபர் எத்தனை மின்னஞ்சல் முகவரி வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பதால் எல்லோரும் வங்கி உள்ளிட்ட தேவைகளுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை உருவாக்கி யாரிடமும் பகிராமல் வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. வங்கிக்கணக்கு, சமூக வலைதளக் கணக்கு ஆகியவற்றை தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியோடு இணைத்து விடலாம். மின்னஞ்சல் முகவரி உருவாக்கும்போதே இது தனிப்பட்ட தேவைக்கா, வணிகத் தேவைக்கா... எனக் கேட்கும் வசதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. உங்கள் மின்னஞ்சல் முகவரியில் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்ற ஆப்ஷனை Enable செய்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மெயிலை யாராவது திறந்தாலோ, திறக்க முயன்றாலோ உங்களது ரெக்கவரி முகவரிக்கு ஐபி அட்ரஸ் உள்ளிட்ட தகவல்களுடன் மின்னஞ்சல் வரும். அதைக் கொண்டு மற்றவர் நம் மின்னஞ்சலைத் திருட்டுத் தனமாகத் திறப்பதைத் தடுக்க முடியும்.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

இலவச WIFI வேண்டாம்!

விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்கள், வணிக வளாகங்களில் வழங்கும் இலவச வைஃபையில் நமது மொபைலை பயன்படுத்தும்போது மொபைலில் உள்ள டேட்டாக்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. வணிக வளாகங்கள், உணவகங் களில் பரிசுக்கூப்பன் வழங்கி அதில் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைக் கொடுக்கச் சொல்லிக் கேட் பார்கள். அங்கு உங்களது தனிப்பட்ட மின்னஞ்சல் விவரத்தைக் கொடுக்கவே கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்பு `மெக் டொனால்ட்ஸ்' சர்வர் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து பல கோடி பேரின் டேட்டா திருடப்பட்டது. இன்றைக்கு டேட்டாக்களுக்கென்று பெரிய கள்ளச் சந்தை இருக்கிறது. அச்சந்தையில் நம் டேட்டாக்கள் அனைத்தும் விற்பனைப் பொருள்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

வங்கி விவரங்களை ஆப்களில் சேமிக்காதீர்!

சினிமா டிக்கெட், ரயில் டிக்கெட் என ஆன்லைன் முன்பதிவு செய்யும் தளங்கள், ஆன்லைன் வணிக இணையங்கள் எவற்றிலும் உங்களது கிரெடிட்/ டெபிட் கார்டு விவரங்களைப் பதிவு செய்து வைக்கக்கூடாது. நமது கணினியாக இருந்தாலும் சரி, மொபைலாக இருந்தாலும் சரி... ஒவ்வொரு முறையும் தகவல்களைக் கொடுப்பதே சிறந்தது. UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதில் இந்தப் பிரச்னை இல்லை. இணைய வெளியில் பாதுகாப்பு என்று எதுவும் கிடையாது. அனைத்தும் ஹேக் செய்யப்படும் சாத்தியங்கள் இங்கு அதிகம். அதற்கான சிறு வாய்ப்பையும் கொடுக்காத வண்ணம் நாம்தான் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

ஆன்லைன் ஷாப்பிங் பிரியரா நீங்கள்?

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஆன்லைன் வணிகம் பெருகி வருகிறது. அப்படி நீங்கள் ஒரு பொருளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் அவர்கள் Cash on delivery கொடுக்கிறார்களா என்று பாருங்கள். பணம் வாங்கிக்கொண்டுதான் பொருளைக் கொடுப்பதாகச் சொல் கிறார்கள் எனில் அவர்களை நம்பாதீர்கள். `டெலிவரி ட்ராக் ஐடி' தருவார்கள். பெரும்பாலும் அது போலியாகத்தான் இருக்கும். உங்களிடம் பணத்தை வாங்கிய பின் உங்கள் கணக்கை ப்ளாக் செய்துவிட்டுப் போய்விடும் அபாயமும் இருக் கிறது. இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறவர்களுக்கு பணம் கொடுத்தோ, அவர்களுக்குத் தங்கள் பொருள்களை இலவசமாகக் கொடுத்தோ புரொமோட் செய்யச் செல்வார்கள். அவர்கள் இதன் நம்பகத்தன்மை குறித்து எதுவும் தெரியாமல் புரொமோட் செய்கிற பட்சத்தில் அதை நம்பி பலரும் ஏமாறும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படும் பொருள்களை Cash on delivery யில் மட்டுமே வாங்குங்கள்.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

வம்பில் சிக்கவைக்கும் வேலைவாய்ப்பு மோசடி!

ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பு என தொடர்பு எண் கொடுத்து விளம்பரப்படுத்தியிருப் பார்கள். அதைப் பார்த்துவிட்டு தொடர்பு கொள்கிறவர்களிடம் வேலை தருகிறோம். ஆனால், அதற்கு முன் சில ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று சொல்வார்கள். பணத்தேவை உள்ளவர் களும் அதை நம்பி பணம் கொடுத்து விடுவார்கள். அதன் பிறகு அவர்களைத் தொடர்புகொண்டால் முறையான பதில் வராது, மிரட்டும் தொனியில் பேசிவிட்டு வைத்து விடுவார்கள். பெண்களை இந்த விஷயத்தில் அதிகம் குறிவைப்பார்கள். அவர்களிடமிருந்து பணத்தைப் பறித்தால்கூட பெரிய அளவுக்கு புகா ரெல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்கிற எண்ணத்தில் இவர்கள் குறிவைக்கப் படுகிறார்கள்.

ஆன்லைன் மூலம் தொழில் பயிற்சி அளிப்பதாகக் கூறுபவர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை வாங்கிவிட்டு இரண்டு நாள்கள்கூட பயிற்சி வழங்காமல் ப்ளாக் செய்து விடுவார்கள். எனவே பயிற்சி அளிக்கிறவர்கள் யார், அவர்கள் பின்புலம் என்ன என்பது குறித்து நன்கு ஆராய வேண்டும். கூகுளில் தேடினாலே அவர்களைப் பற்றி தெரிந்து விடும். அவர்கள் மீதான புகார் இருந்தாலும் தெரிந்துவிடும். வெளிப்படைத்தன்மையுடன் அவர்கள் இருக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

விளம்பரம் பார்த்து சம்பாதிக்கலாம், ஆன்லைன் லாட்டரி சீட்டு எனப் பலவிதமான மோசடிகளில் பணத்தை இழக்கும் அபாயம் உண்டு. 5,000 ரூபாய் கொடுத்து 10,000 எடுத்து விட்டார்கள் என்றெல்லாம் கூறி ஆசை காட்டுவார்கள். Multi level marketing போல் நிறைய பேரைச் சேர்த்து விட்டால் வருவாய் அதிகரிக்கும் என்கிற ஆசை வலையில் வீழ்ந்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்கள் உண்டு. இதன் விளைவாக தற்கொலை செய்துகொண்டவர்களும் உண்டு. Easy to earn என்று சொல்லும் எதையும் நம்பாதீர்கள். உழைத்தால் மட்டுமே பணம். ஆன்லைன் லாட்டரி, கேப்ட்சா டைப்பிங் போன்ற சட்டத்துக்குப் புறம்பான வேலைகளில் ஈடுபட்டால் நாமும் குற்றவாளிதான்.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

குழந்தைகளிடம் கேட்ஜெட் கொடுக்கிறீர்களா..?

இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகளிடம் மொபைல், டேப்லெட் உள்ளிட்ட கேட்ஜெட்களை பார்க்க முடிகிறது. உண்மையில் அப்படிச் செய்வது தவறு என்று தெரிந்தாலும் பலரும் அதைச் செய்கிறார்கள். இந்தச் சூழலில் மொபைலில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் பார்க்கத்தகாத அடல்ட் கன்டென்டுகளை அவர்கள் பார்க்க வாய்ப்பிருக் கிறது. அப்படி கண்காணிக்க முடியாத நிலையில் familes.google.com என்கிற வெப்சைட் மூலமாக உங்கள் குழந்தை பெயரில் கூகுள் கணக்கைத் தொடங்கி, கேட்ஜெட்டில் அந்த முகவரியை வைத்து லாகின் செய்து கொடுத்துவிட வேண்டும். இப்படிச் செய்கையில் கூகுள், குழந்தைகளுக்கான வீடியோ மற்றும் விளம்பரங்களை மட்டும்தான் காட்டும். அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதை நமது கூகுள் கணக்கில் இருந்து கண்காணிக்க முடியும்.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

ஆன்லைன் சாட்டிங்... அலர்ட்!

சமூக வலைதளங்களில் நூற்றுக்கும் அதிகமான புகைப்படங்களைப் பதிவிடுகிறார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும் அதன் மூலம் எந்தப் பிரச்னை வந்தாலும் உளவியல் ரீதியாக பாதிக்காத அளவு ஸ்திரம் கொண்டவர்கள் மட்டுமே பொதுக்கணக்கில் பகிருங்கள். இல்லையென்றால் பிரைவேட் அக்கவுன்ட் வைத்துக்கொள்ளுங்கள். பிரைவேட் அக்கவுன்டாக இருந்தாலும் உங்கள் நட்புப் பட்டியலில் இருக்கிற எல்லோரும் நம்பகமான வர்களாக, தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. உங்கள் புகைப்படங்களை வைத்து மார்பிங் முறையில் ஃபேக் வீடியோக்கள் உருவாக்கும் ஆட்கள் பெருகி வருகின்றனர். பல கோணங்களில் படம் எடுத்துப் போடுகிறோம். அவற்றைக் கொண்டு கச்சிதமாக மார்பிங் செய்யும் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. இது போன்று தங்களின் புகைப்படங்கள் தவறாகச் சித்திரிக்கப்பட்டதால் உளவியல் பிரச்னைகளுக்கு ஆளான பெண்கள் பலர் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிடுகையில் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டேட்டிங் அப்ளிகேஷன்களில் பெரும்பாலான புரொஃபைல்கள் போலி யானவை. அந்த புரொஃபைலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கும். சில ஆப்கள் மூலம் face recognition செய்து வந்து விடுவார்கள். அதைப் பார்த்துவிட்டு பேசும் நபர்களிடம் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவர். மேட்ரிமோனி வெப்சைட்டுகளில் இது நடக்கிறது. முடிந்தவரை நேரில் சந்தித்துப் பேசுவதுதான் சிறப்பு. ஆன்லைன் சாட் பாதுகாப்பானதில்லை.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

ஆப் பயன்பாடு... அவசியம் அறிந்திருக்க வேண்டியவை!

போட்டோ எடிட்டிங் மற்றும் ஷாப்பிங் ஆப்களில் modded apps (பணம் கட்ட வேண்டிய அப்ளிகேஷனை இலவசமாகப் பயன்படுத்துவது போல் modify செய்வது) பயன்படுத்துவது கூடவே கூடாது. அதன் வழியே நம் டேட்டாக்கள் சுலபமாகக் கசிந்து விடும். இன்றைக்கு வரும் மொபைல்களில் modded apps-ஐ கண்டறிந்து தவிர்க்கும் வசதி உள்ளது. முந்தைய வெர்ஷன் களில் அது இருக்காது என்பதால் கவனம் தேவை. குறிப்பாக போட்டோ எடிட்டிங் ஆப்களில் இருந்துதான் நிறைய டேட்டாக்கள் திருடப்படுகின்றன.

மொபைல் ட்ராக்கிங் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்து குடும்ப உறுப்பினர்களுடன் கனெக்ட் செய்து கொள்வது நல்லது. வெளியே செல்கையில் ஏதேனும் ஆபத்தான சூழலில் சிக்கி விட்டீர்கள் என்றால் உறவினர்கள் உங்களைக் காப்பாற்றத் தேடிவர அது உதவும். தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்டிருக்கும் `காவலன் ஆப்' போன்ற பாதுகாப்பு தொடர்பான அப்ளிகேஷன்களை அவசியம் வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்று பல பெருநிறுவனங்களும் தங்களின் தள்ளுபடி விளம்பரங்களை நேரடியாக பயனர்களின் வாட்ஸ்அப் அப்ளிகேஷனுக்கே அனுப்பத் தொடங்கி விட்டன. இதில் வங்கிகளும் அடக்கம். பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தங்களுடைய கஸ்டமர் கேர் சிஸ்டத்தினை வாட்ஸ்அப்போடு இணைத்துவிட்டன.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பல மோசடி கும்பல்கள், தாங்கள் குறிப்பிட்ட நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து மெசேஜ் செய்வதாகக் கூறி குறிப்பிட்ட பயனரின் சென்சிட்டிவ் டேட்டாவினை பெற்றுவிடுகின்றனர். முடிந்தவரை அந்த நிதி நிறுவன எண்ணை அவர்களின் இணையதளத்தில் சென்று அவர்களுடைய எண்தானா என்று உறுதிசெய்து கொள்வது நலம் அல்லது பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்தபட்சம் வெரிஃபைடு டிக் சைன் உடன்தான் இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த மெசேஜ்களை தவிர்ப்பது நலம்.

இது ஒருவகை ஸ்கேம் என்றால், மற்றொரு புறம் வெளிநாட்டுக்கு மேற்படிப்புக்காக செல்ல முயன்றுவரும் பெண்களைக் குறிவைத்து இந்த நாட்டில், இந்தச் சம்பளத்தில் வேலையுடன் பட்டப்படிப்பு படிக்கலாம் என்கிற வாட்ஸ்அப் செய்தியோடு பல மோசடி கும்பல்கள் இறங்கியுள்ளன. பெரும்பாலும் இவர்கள் விசா பிராஸசிங் போன்ற காரணங்களைக் கூறி சில ஆயிரங்களை பெற்றுக்கொண்டவுடன் மறைந்துபோனாலும், ஒரு சில கும்பல்கள் தாங்கள் கொடுக்கும் கல்லூரியின் இணையதளத்தில் சென்று அவர்களின் விவரத்தைப் பதிவு செய்து கொள்ளுமாறு மிக புரொஃபஷனலாக அணுகி அந்த நபரின் டேட்டாவினை பெற்று விடுகிறார்கள். அவர்கள் அளிக்கும் இணையதள முகவரிகள் பெரும்பாலும் shrink செய்யப்பட்டு இருக்கும். அதை பிரௌசரில் ஓப்பன் செய்ததும் குறிப்பிட்ட கல்லூரியின் இணையதளத்தினை க்ளோன் செய்து வைத்திருப்பதால் சரியான தளத்தில்தான் இருப்பதாக நம்பி அந்தத் தளம் கேட்கும் விவரங்களை அளித்து விடுவோம். இதில் தனிப்பட்ட டாக்குமென்ட்களை அப்லோடு செய்வதில் தொடங்கி கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்களையும் அளித்து விடுவதுதான் மோசடியாளர்களின் வெற்றி.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

முதியோர்களைக் குறிவைத்து அவர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நீங்கள் இத்தனை லட்ச ரூபாய் வென்றுள்ளீர்கள் என்ற விளம்பரம் தொடங்கி இந்த ஸ்க்ராட்ச் கார்டினை சுரண்டினால் இவ்வளவு லாபம் கிடைக்கும் எனும் செய்திகளை அனுப்பும் மோசடியும் தொடர்கிறது. அவர்கள் கொடுக்கும் இணைப்பினைத் தொடர்வதன் மூலம் அவர்களுக்கு இத்தனை லட்சம் பரிசு விழுந்திருக்கிறது, இதை நேரடியாக உங்கள் அக்கவுன்ட்டுக்கு உடனே டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ள இதை `க்ளிக் செய்யுங்கள்' என்று ஒரு பட்டனையோ லிங்கையோ காட்டுகிறார்கள். அதை நம்பி `க்ளிக்' செய்ததும், நேரடியாக உங்கள் கூகுள்பே அல்லது போன்பே அப்ளிகேஷன் திறந்து ஒரு குறிப்பிட்ட தொகையுடன் அந்தப் பக்கம் நிற்கும், அந்த நிமிடம் பணம் கிடைக்கிறதே எனும் ஆசையில் பிற யோசனை ஏதுமற்று உடனே அதை பிராசஸ் செய்ய நம்முடைய UPI Pin numberஐ கொடுத்தவுடன் நம்முடைய அக்கவுன்டிலிருந்து அந்த மோசடியாளர்களின் அக்கவுன்டுக்கு பணம் சென்று சேர்ந்திருக்கும்.

நம்முடைய அக்கவுன்டிலிருந்து தான் பணம் சென்றிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே சில மணி நேரம் ஆகி விடும். இத்தகைய மோசடி சார்ந்த செய்திகள் அனைவருக்கும் வந்து கொண்டிருந்தாலும் அதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் முதியோர்தான்.

வயதான பெற்றோர்களுடன் நேரம் ஒதுக்கி எந்தெந்த அப்ளிகேஷன்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுத் தருவது முக்கியமான ஒன்று. இந்த மாதிரியான விஷயங்களில் ஏமாற்றப்பட்டாலும் மற்றவர்களிடத்தில் பகிர்வது மிக மிக முக்கியம். தான் ஏமாற்றப்பட்ட விஷயத்தைப் பிறரிடம் பகிர்வதை அவமானமென்றோ, அசிங்கமென்றோ நினைத்துப் பகிராமல் இருப்பது, மேலும் மேலும் இத்தகைய மோசடியாளர்கள் வேகத்துடன் செயல்படுவதற்குத்தான் உதவியாக இருக்கும். வெளிப்படையாகப் பகிர்வது, உங்கள் உறவுகள், நட்புகள் உள்பட பலர் உஷாராக இருப்பதற்கு உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போன் கைகளில் தவழத் தொடங்கியதும் அதை எப்படிக் கையாளலாம், எதற்காக எந்தெந்த அப்ளிகேஷன்கள் பயன்படும், எமர்ஜென்சி நேரத்தில் எந்த அப்ளிகேஷன்கள் உதவியாக இருக்கும் என்பதை எல்லாம் அனைவரும் தெரிந்துவைத்துக் கொள்வது அவசியம். மிக முக்கியமாக பெண்கள்.

நோட்டிஃபிகேஷன்களில் நிரம்பி வழியும் விளம்பர செய்திகளைத் தவிர்ப்பது தொடங்கி ஒரு வெப்சைட்டிற்குள் சென்றவுடன் அதன் பிரௌசர் ஸ்கிரீனில் கேட்கும் அனுமதிகளை Not Allow ஆப்ஷனை கிளிக் செய்து தவிர்க்க முயலுங்கள். பெரும்பாலும் அப்படிக் கேட்கப்படும் அனுமதி, உங்களுக்கு விளம்பரங்கள் அனுப்புவதற்காகவும், சில நேரங்களில் உங்களுடைய மொபைலின் மைக் மற்றும் கேமராவின் அனுமதி பெற்றுக் கொள்வதிலுமாக நிற்கும். இவற்றைத் தவிர்த்திடுங்கள்.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

கவர்ந்திழுக்கும் கிரிப்டோ... மறைந்திருக்கும் ஆபத்து!

சமீபகாலமாக, பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி குறித்து அதிகம் பேசி வருகிறோம் கிரிப்டோ கரன்சியைப் பொறுத்தவரை அது ஒருங்கிணைப் பற்ற ஒரு துறை. இத்தனை ரூபாய் முதலீடு செய்தால் டிரேடிங் செய்து நாளொன்றுக்கோ, வாரம் ஒரு முறையோ இத்தனை ரூபாய் வரை லாபம் எடுத்துத் தருவதாக வாக்குறுதியளித்து அந்தப் பணம் ஷேர் மார்கெட்டில் இழப்பினை சந்தித்ததும் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடும் மோசடிக் கூட்டம் பற்றி தொடர்ந்து கேள்விப்படுகிறோம். இப்போது கிரிப்டோ டிரேடிங்கில் இத்தனை ரூபாய் முதலீடு செய்தால் ஒரே நாளில் இரண்டு மடங்காக்கலாம் என்ற கண்கவரும் விளம்பரங்களைப் பார்க்கிறோம்.

இன்டர்நேஷனல் மார்கெட்டில் பட்டியலிடப்படாத கிரிப்டோ கரன்சிகள் என்றைக்கும் ஆபத்தானவை. மிக எளிதாகச் சொல்வதானால், Binance எனும் செயலியைத் தேடி, உங்கள் மொபைலில் பதிவிறக்கிக் கொள்ளுங்கள். விளம்பரங்களில் இடம்பெறும் கிரிப்டோ கரன்சிகள், அந்தச் செயலியில் இடம்பெற்றுள்ளனவா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

இன்றைய சூழலில் கிரிப்டோ மார்க்கெட் திரும்ப எழ முடியாதபடி விழுந்து கிடக்கிறது. நம்பகமான கிரிப்டோ கரன்சிகளாக கருதப்பட்ட பல கரன்சிகள் ஸ்கேம் என்று உறுதிசெய்யப்பட்டு அதில் முதலீடு செய்தவர்களுக்கு முழுமையான இழப்பினை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையில்தான் மீண்டும் புது வழியில் லாகவமாக ஏமாற்றுவலையில் மக்களை விழவைக்கும் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

மார்க்கெட் விழுந்து கிடக்கும் இந்தச் சூழல்தான் முதலீடு செய்வதற்கு சரியான தருணம் என மூளைச்சலவை செய்யத் தொடங்கியுள்ளனர். இது ஒருவகையில் சரியெனப்பட்டாலும் மறுபுறம் இவர்கள் இவர்களுடைய சொந்த கிரிப்டோ கரன்சியையோ அல்லது எந்தவொரு நம்பகத்தன்மையும் அற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற கரன்சிகளை நோக்கியே புரொமோட் செய்கிறார்கள் என்பதையும் உணர வேண்டும்.

கிரிப்டோவில் முதலீடு செய்வதாக இருந்தால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கரன்சியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்துவிட்டு அதன் கடந்த மூன்று வருட போக்கினையும் ஆராய்ந்துவிட்டு முதலீடு செய்யுங்கள்.

புதுப்புது பெயர்களில், புதுமுறைகளில் லாபம் பார்க்கலாம் என அணுகும் கிரிப்டோ கரன்சிகளை என்றும் நம்ப வேண்டாம்.

MLM-ன் பாணியில் கிரிப்டோ தரகர்கள் உங்களுக்குக் கீழ் இத்தனை பேரைச் சேர்த்தால் இத்தனை காயின்கள் அல்லது லாபம் கிடைக்கும் என அணுகினால் அவர் களை நம்பாமல் விலகியிருப்பது நலம்.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

உங்கள் பாதுகாப்பு... உங்கள் கைகளில்...

கடைகளில் தேடித்தேடி பொருள்களையோ, ஆடைகளையோ வாங்கும் காலம் போய் இணையதளங்களில் தேடி வாங்கும் வகையில் அப்டேட் ஆகிவிட்டோம். இந்த நிலையில் ஆன்லைனில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பல வெப்சைட்களில் பொருள்களின் நம்பகத்தன்மை பற்றி தெரியாமல் பணம் செலுத்தி ஆர்டர் செய்து பின்பு ஏமாறுவதும் இப்போது அதிகமாகி இருக்கிறது. பரிச்சயமற்ற ஒரு வெப்சைட்டில் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.

SSL - நீங்கள் அணுகும் இணையதளம் SSL certificate உடன் பாதுகாப்புடன் இயங்குகிறதா என்று பாருங்கள். இது நீங்கள் அந்த இணைய தளத்தில் உள்ளீடு செய்யும் டேட்டா சார்ந்த பாதுகாப்பிற்கான முதல்படி. நீங்கள் அணுகும் இணையதள முகவரிக்கு அருகில் Not Verified போன்று குறிப்புகள் காட்டுமானால் அந்தத் தளத்தினைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நலம்.

Policy Details - ஒரு பொருளை பரிச்சயமற்ற தளத்தில் வாங்குவதென முடிவு செய்தால் முதல் வேலையாக அவர்கள் தளத்தில் Refund policy, Return Policy, Terms & Conditions, Privacy Policy பக்கங்கள் உள்ளனவா என பாருங்கள். இருந்தால், அதில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் உங்களுக்கு உதவிகரமாக உள்ளனவா என்பதை பற்றி யோசியுங்கள்.

பெரும்பாலான தளங்கள் அவர்களின் தொடர்பு விவரங்களை மறைத்து வைத்திருப்பார்கள். அவர்களைத் தொடர்புகொண்டு நீங்கள் வாங்கிய பொருளின் தரம் குறித்த புகார்களைத் தெரிவிக்கவோ, Return செய்யவோ இயலாதபடி பிரச்னைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

குறைந்தபட்சம் அந்தத் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திய பிறகு அதைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதன் மூலம் தேவையற்ற பொருள் / பண இழப்பினைத் தவிர்க்கலாம்.

உடல் எடை குறைக்கும் திட்டங்கள், அழகுசாதனப் பொருள்கள் விற்பனையில்தான் இன்றளவும் பெண்கள் அதிகப்படியான பணத்தை மோசடியில் இழக்கிறார்கள். தொலைக்காட்சிகளும் தினசரிகளும் சுமந்து வந்த இந்த விளம்பரங்கள் இன்று இணைய மெங்கும் பரவிக்கிடக்கின்றன. இப்படி விளம்பரப்படுத்துபவர்கள் பெரும்பாலும் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள் வைத்தோ அல்லது பயிற்சி பெற்ற டயட்டீஷியன்கள் வைத்தெல்லாம் விளம்பரப்படுத்துவதில்லை. அவர்கள் கூறும் முறைகளைப் பின்பற்றுவதிலும், அவர்கள் கொடுக்கும் பெயரற்ற பொருள்களை குறிப்பிட்ட கால அளவு எடுத்துக்கொள்வதன் மூலமும் உடல் எடை சட்டென்று குறைந்து விடும் என மூளைச்சலவை செய்து ஆயிரக் கணக்கில் பணத்தினைப் பறித்துக்கொண்டு உடல் எடை குறையாத பட்சத்தில் பிழை நம்மீதுதான் என மடைமாற்றி தப்பித்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் விளம்பரப்படுத்தி விற்கும் பொருள்களை உபயோகிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதற்கான பதில் கிடைக் காது. முடிந்தவரை பதிவு செய்யப் படாத, தரம் சார்ந்த விவரம் ஏதுமற்ற விளம்பரங்கள் மூலம் விற்பனைக்கு வரும் பொருள்களைத் தவிர்ப்பது நலம்.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

போலிகளிடம் உஷார்...

இணையத்தில் ஒரு நபருடைய தனிப்பட்ட விவரங்களைத் திருடுவது எளிதாகிக்கொண்டே வருகிறது. அதில் ஒரு வழிமுறை தான் இந்த ஃபேக் லிங்க்ஸ். இதில் டார்கெட் செய்யப்படும் நபருக்கு ஒரு ஃபேக் லிங்கினை அனுப்பி அதை அவர்கள் க்ளிக் செய்வதன் மூலம் அவருடைய மொபைலின் முழு கன்ட்ரோலையும் எடுத்துக் கொள்ள முடியும். ஹேக்கிங்கில் பல வகைகள் உண்டு. அப்ளிகேஷன்கள் மூலம் உங்கள் டேட்டாவை திருடுதல் ஒருவகை என்றால், நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் வெப்சைட்களின் க்ளோன்களை பயன்படுத்தி Phishing முறையில் உங்கள் தனிப்பட்ட விவரங்களைத் திருடுவது இன்னொரு முறை.

உதாரணத்துக்கு ஃபேஸ்புக் லாகின் டேட்டாக்கள் தொடங்கி அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் நீங்கள் உள்ளிடும் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருட முடியும். உங்களுக்கு அனுப்பப்படும் விளம்பர லிங்க்குகளை ஓப்பன் செய்ததும் அச்சு அசலாக ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்றே தோற்றம் தரும் வலைப்பக்கம் திறக்கும். அதில் நீங்கள் சரியான தளத்தில்தான் இருப்பதாக நம்பி அதில் உங்கள் யூஸர் நேம், பாஸ்வேர்டு போன்றவற்றை உள்ளிட்டு அங்கிருக்கும் பொருள்களை வாங்கு வதற்கு உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு தகவல்களை உள்ளிடுவதன் மூலம் அவர்களுக்குத் தேவையான சென்சிடிவ் டேட்டா மொத்தத் தையும் அளித்திருப்பீர்கள்.

இதிலிருந்து தப்பிப்பதற்கு நீங்கள் `க்ளிக்' செய்த பிறகு திறக்கும் வெப்சைட்டின் URL-ஐ வெரிஃபை செய்துகொள்வது சிறந்தது. பெரும்பாலான URLகள் அஃபிஷியல் URLல் இருந்து மாறுபட்டு ஒருசில எழுத்துகள் பிழையுடன் இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவை உங்கள் டேட்டாக்களை திருடுவதற்கு உருவாக்கப்பட்ட Phishing site என அறிந்து வெளியேறி விடலாம். மேலும், உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர்கள் அப்டேட் ஆகியிருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.''

 கார்த்திகேயன்
கார்த்திகேயன்

உதவக் காத்திருக்கும் சட்டங்கள்...

பெண்களுக்கு எதிராக இணையத்தில் நிகழ்த்தப்படும் செயல் களுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், பாதிக்கப்படும் பெண்கள் எவ்வாறு குற்றத்தைப் பதிவு செய்வது என்பது குறித்தும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன்...

``இணையவெளியில் பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் குற்றச்செயல்களுக்கு எதிராக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் முக்கியமான பிரிவுகள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஒரு பெண்ணின் அனுமதியின்றி கழுத்துப் பகுதிக்குக்கீழே (உடையணிந்து இருந்தாலும்) புகைப்படம் எடுத்தலும் அதனை இணையத்தில் பகிர்வதும் இந்தச் சட்டத்தின் 66E பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு மூன்று ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை வழங்கப்படும். குழுவாக எடுக்கப்படும் புகைப்படத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு பெண் ணின் புகைப்படத்தை மட்டும் வெட்டி எடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமே. இச்சட்டத்தின் 67-வது பிரிவின்படி ஒரு பெண்ணின் முகத்தை ஆபாசமாகச் சித்திரித்து மார்பிங் செய்வது குற்றம். முதல்முறை இதைச் செய்யும்போது மூன்று ஆண்டுகளும், இரண்டாவது முறை செய்தால் ஐந்து ஆண்டுகள் வரையிலும் இதற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

காதல் உறவில் இருந்த, நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து காதல் முறிவுக்குப் பிறகு இணையரை மிரட்டுவது குற்றம். அப்படி மிரட்டினாலோ, ஆன்லைனில் அதனைப் பதிவிட்டாலோ அதற்கும் தண்டனை உண்டு. விடுதிகள், உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தி வீடியோ எடுப்பது கண்டறியப்பட்டால் 67ன் கீழ் தண்டனை வழங்கப்படும். 67 A பிரிவின்படி பெண்ணும் ஆணும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ அல்லது புகைப்படங்களை மூன்றாம் நபர் வெளியிட்டால் முதல்முறை செய்கையில் ஐந்து ஆண்டுகளும், இரண்டாவது முறை செய்கையில் ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். எக்ஸ்சேஞ்ச் முறையில் பழைய போனைக் கொடுத்துவிட்டு புதிய போன் வாங்குகையில் பழைய போனில் உள்ள புகைப்படங்களை ரெக்கவர் செய்து எடுத்துவிட்டு மிரட்ட வாய்ப்பிருக்கிறது. இதுவும் தண்டனைக்குரிய குற்றமே.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

இணையவெளியில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக உலக நாடுகள் அனைத்தும் மிக கவனமாக செயலாற்றி வருகின்றன. 67B பிரிவின் கீழ் குழந்தைகளின் நிர்வாண படத்தைப் பகிர்ந்தாலோ, Child Pornography-ஐ தேடினாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள். முதல் முறை என்றால் ஐந்து ஆண்டுகள், இரண்டாவது முறை என்றால் ஏழு ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தோடு போக்சோ சட்டமும் இதனோடு சேர்ந்து விடும். இந்திய அரசின் தேசிய குற்றப் பதிவு பணியகம் (National Crime Records Bureau) அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்

(Federal Bureau of Investigation) உடன் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. உலகின் 90 நாடுகள் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி குழந்தைகளின் நிர்வாணப் படங்களை யார் இணையத்தில் பதிவேற்றினாலும் அவர்களது ஐபி முகவரி மூலம் அவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

இணையவெளியில் உங்கள் புகைப்படங்கள் தவறாக சித்திரிக்கப்பட்டால் அவற்றைக் கண்டறிவது கடினம்தான். உங்கள் தினசரி நடவடிக்கைகள், உங்கள் நிதி நிலை என உங்களைப் பற்றிய தகவல்களை பொதுவெளியில் பகிராதீர்கள். நிறைய பேர் தங்களது யூடியூப் சேனலுக்கு தங்களது வீட்டை சுற்றிக் காட்டுகிறார்கள். அது திருடர்களுக்கு வாசலைத் திறந்து வைப்பதைப் போன்றது. சமூக வலைதளத்தில் நீங்கள் பகிரும் தகவல்களைக் கொண்டே உங்கள் மீதான குற்றச்செயல்களில் ஈடுபட முடியும். இன்றைக்கு திருடர்களும் அப்டேட்டாக டேட்டாக்களை வைத்துக்கொண்டு தடயமே இல்லாமல் திருடிச் செல்லும் வழிமுறைகளைக் கற்று வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான டேட்டாவை நாமே கொடுத்து விடுவதுதான் தவறானது.

சாட்டிங் முதல் ஷாப்பிங் வரை... ஆன்லைன் மோசடிகளில் சிக்காமலிருக்கும் வழிகள்!

கார் வாங்கினேன், வீடு வாங்கினேன் என்று நீங்கள் உங்கள் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்கிறீர்கள். இதைப் பார்க்கிறவர்கள் உங்களிடம் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்டு மோசடி வலையில் வீழ்த்த உங்களைக் குறி வைக்க அது வழிவகை செய்யும்.

உங்கள் அந்தரங்க புகைப்படங்கள் / வீடியோக்களை வைத்து மிரட்டினால் அதற்கு பயப்படாதீர்கள். உங்கள் பயம்தான் மோசடியாளர்களின் பலம். துணிச்சலாக அதை எதிர்கொள்ளுங்கள். உங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம். cybercrime.gov.in மற்றும் tnpolice.gov.in ஆகிய தளங்களில் ஆன்லைன் மூலமாகவே புகார் பதிவு செய்யலாம். உங்களது பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை. ஆதாரங்களை சமர்ப்பித்தாலே போதும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களது அந்தரங்க வீடியோ அல்லது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஏதேனுமொரு தளத்தில் பதிவிடப்பட்டிருந்தால் அதை நீக்க முடியும். ஆகவே பயம் தவிருங்கள்.''

தொகுப்பு: கி.ச.