Published:Updated:

வீட்டில் மின்சாதனப் பொருள்களை கவனமாகக் கையாள... டிப்ஸ்!

டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்

#Avaludan

வீட்டில் மின்சாதனப் பொருள்களை கவனமாகக் கையாள... டிப்ஸ்!

#Avaludan

Published:Updated:
டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டிப்ஸ்

வீட்டில் மின்சாதனப் பொருள்களைக் கையாளும்போது கொடுக்க வேண்டிய கவனம் குறித்த டிப்ஸை, அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் நம் வாசகிகளிடம் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சிறந்த டிப்ஸ் இங்கே...

Venkatasubramaniam Venkat

மிக்ஸி பிளேடுகளைப் பராமரிக்க, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கல் உப்பை மிக்ஸி ஜாரில் போட்டு இருமுறை சுத்தவிடலாம்.

Lakshmi Jagan

வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், கிரைண்டரில் சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டாலும் உடனே சர்வீஸுக்குக் கொடுத்துவிடவும். இல்லையெனில், அதன் இயங்குதிறன் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டே வரும். பொதுவாக எல்லா எலெக்ட்ரிகல் அயிட்டங்களையும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வது நல்லது.

Tamizh Muhil Prakasam

மிக்ஸியில் அரைக்கும்போது, குறைந்தபட்சம் ஜாரின் பாதி அளவுக்கேனும் பொருள்களைப் போட்டு அரைக்கவும். இல்லையெனில் மிக்ஸி மற்றும் ஜார் சூடேறிவிடும். அதேபோல, ஜார் முழுக்க பொருள் களை நிரப்பாமல் முக்கால் அளவுக்கு நிரப்பவும். இல்லையென்றால் அழுத்தம் தாங்காமல் சிதறிவிடும்.

வீட்டில் மின்சாதனப் பொருள்களை கவனமாகக் கையாள... டிப்ஸ்!

Srividhya Prasath

நீண்ட நாள்களாகப் பயன்படுத்தாமல் இருக்கும் மின் சாதனப் பொருள்களை மீண்டும் பயன்படுத்தும்போது கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் கையாளவும். எலெக்ட்ரிகல் பொருள்களை சுயமாக பழுது பார்ப்பதைத் தவிர்க்கவும். ஆஃபர், விலை மலிவு என்று வாங்குவதைவிட பிராண்டடு பொருள் களை வாங்கினால் தரமும் உத்தரவாதமும் கிடைக்கும்.

Valli Subbiah

மின்பொருள்களை ஈரக் கை கொண்டு கையாளக்கூடாது. ஹீட்டர் போட்டுக்கொண்டே குளிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எட்டும்படி ஸ்விட்சுகளை அமைப்பதைத் தவிர்க்கவும். பழுது ஏற்பட்டால் கம்பெனி ஸ்பேர்களை மட்டுமே பயன்படுத்தி பழுது நீக்க வேண்டும். தரமற்ற உதிரிபாகம் செயல்திறனைக் குறைப்பதோடு ஆபத்தையும் விளைவிக்கலாம்.

Sampath Raghavan

மிக்ஸி, கிரைண்டர் வைத்திருக்கும் மேடைக்குக் கீழே ஒரு மரப்பலகையை நிரந்தரமாகப் போட்டு, அதன் மேல் நின்றபடி அரைக்கலாம்.

Shunmuga Priya

எறும்புகள் ஸ்விட்ச் போர்டில் வாசம் செய்ய ஆரம்பித்தால் போர்டு பழுதாகிவிடும் என்பதால், அப்படியான சூழலில் எறும்பு சாக்பீஸ் போட்டு வைக்கவும்.

Sathiya Sundari, Sa D Rajesh

எந்த சாதனமாக இருந்தாலும் முதலில் பயன்பாட்டாளர் வழிகாட்டியை (User Manual) படித்துவிட்டு பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

Venkatasubramaniam Venkat

டெஃப்லான் கோட்டட் (Teflon Coated) அயர்ன் பாக்ஸில் சூடு விரைவாக ஏறுவதுபோலவே விரைவாக இறங்கிவிடும். எனவே, ஸ்விட்ச் ஆன் செய்வதற்கு முன்பாக அயர்ன் செய்ய வேண்டிய துணிகளை அருகில் தயாராக வைத்துக்கொள்ளவும்.

Thanuja Jayaraman

யாருமற்ற அறையிலிருந்து வெளியேறும்போது லைட், ஃபேன் உள்ளிட்ட ஸ்விட்சுகளை ஆஃப் செய்யவும். வீட்டை பூட்டிவிட்டுக் கிளம்பும்போது கெய்சர், ஏசி ஸ்விட்சுகள் அணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று ஒருமுறை செக் செய்துவிடவும். எகிறும் இ.பி பில்லை இதுபோன்ற சின்னச் சின்ன நடவடிக்கைகள் மூலம் முடிந்தவரை குறைக்கலாம். ஏ.சி ஃபில்டர்களை சீரான இடை வெளியில் கழுவவும். ஏ.சி ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் கூல் ஆனதும் ஆஃப் செய்துவிட்டு ஃபேனை பயன்படுத்தினால் கூலாகவே இருக்கும். வாஷிங் மெஷினில் குறைவான லோடு, அதிகமான லோடு இரண்டையும் தவிர்த்து சரியான லோடையே போட வேண்டும். ISI முத்திரை உள்ள பொருள்கள் தரத்துக்கும், 5 Star ரேட்டிங் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் மின்சார சிக்கனத்துக்கும் உகந்தது.

R. Brinda

எல்லோரும் சொல்கிற, ஆனால் பலரும் பின்பற்றாத டிப்ஸ்தான். சார்ஜரிலிருந்து செல்போனை எடுத்த பின்னர் சார்ஜரை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடவும். இல்லையெனில் சார்ஜரில் மின் பயன்பாடு வீணாகிக்கொண்டே இருக்கும். மேலும், கனெக்‌ஷனில் ஏதேனும் பிரச்னை என்றால் மின் கசிவு இருக்கும். குழந்தைகள், தொங்கிக்கொண்டிருக்கும் வயர் பின்னை தொட்டால் கரன்ட் பாஸ் ஆகலாம். சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசும்போது அதில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படுத்து வதற்கான அபாயம் உள்ளது என்று உணர்வோம், தவிர்ப்போம்.